ஞாயிறு, 25 டிசம்பர், 2011

மாநிலக் கல்லூரிப் பயிலரங்கு - 07.12.11

     சென்னை, மாநிலக் கல்லூரியில் முனைவர் இரா. சீனிவாசன் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிதிநல்கையுடன் உரையாசிரியர்களின் பங்களிப்பு குறித்த பயிலரங்கு ஒன்றினை 01.12.2011 முதல் 10.12.2011 வரை பத்துநாட்கள் நடத்தினார். சோர்வில்லாத உழைப்பும் பழகுவதற்கு இனிமையான பண்பும் ஆழ்ந்த ஆய்வுப்புலமையும் கொண்ட அவர்,  திறமையுடையோரைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதிலும் வல்லவர். பனுவல் என்னும் பெயரிய பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் ஒன்றையும் அவர் காலாண்டிதழாக நடத்தி வருகின்றார்.பன்முக ஆற்றலுடைய அவர்களின் அன்பின் காரணமாக இப்பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.   

     07.12.11 பிற்பகல் அமர்வில் முனைவர் இரா. கோதண்டராமன் ஐயா அவர்களும் நானும் உரையாற்றினோம். முதுபுலமையும் பேராற்றலும் கொண்ட அவர்களுடைய உரையைக் கேட்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. பேராசிரியர் அவர்கள் சீரிய சிந்தனைகளுடையவர், அதுபோலவே நன்னெஞ்சமும் வாய்க்கப்பெற்றவர். கற்றாரைக் கற்றோரே காமுறுவர் என்ற வள்ளுவ மொழிக்கு இலக்கியமாகத் திகழ்பவர்.  திறனுடைய இளைஞர்களைக் கைதூக்கிவிடும் பெருங்குணமும் உடைய அவர்களே என்போன்ற இளைஞர்களும் பயிலரங்குகளில் உரையாற்றக் காரணமாவர். அவர்களுக்கு இளம் தமிழாய்வாளர்களின் சார்பாக நன்றிகூறுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். 

       இளைஞன் என எளிமை பாராட்டாது வாழ்த்திமகிழும் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மகாலிங்கம் ஐயா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் இப்பயிலரங்கில் கிடைத்ததைப் பெருமகிழ்ச்சியாகக் கருதுகின்றேன். பயிலரங்கக் காட்சிகள் இதோ.


 முனைவர் இரா. கோதண்டராமன் ஐயா அவர்களின் உரை

 முனைவர் மகாலிங்கம் அவர்களுடன் ஆ. மணி
 முனைவர் இரா. சீனிவாசன் அவர்கள்

பார்வையாளர்கள்
பார்வையாளர்கள்
என்னுரை

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...