ஞாயிறு, 19 ஜனவரி, 2025

அரிமாநோக்கு இதழ்க் கட்டுரை (2025 சனவரி): ஆறுமுக நாவலர் பாடங்களைத் திருத்தினார் என்ற கருத்து உண்மையா?

 அரிமாநோக்கு இதழ்க் கட்டுரை (2025 சனவரி): ஆறுமுக நாவலர் பாடங்களைத் திருத்தினார் என்ற கருத்து உண்மையா?

பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் ஏற்பினைப் பெற்ற இதழாகிய அரிமாநோக்கு 2025 சனவரி  இதழில் என்னுடைய கட்டுரையாகிய ஆறுமுக நாவலர் பாடங்களைத் திருத்தினார் என்ற கருத்து உண்மையா? என்னும் கட்டுரை வெளிவந்துள்ளது. ஆற்றுப்படுத்திய பெரும்பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் ஐயா அவர்களுக்கும், இதழ்க் குழுவினருக்கும் நன்றி மலர்கள். கட்டுரையின் படப்படி இது: 















ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கத் தலைமையுரை (2024)

                          ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கத் தலைமையுரை (2024)


அறிஞர் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஆர்) ஆண்டுதோறும் திசம்பர்த் திங்களில் நடத்தி வருகின்ற பன்னாட்டுக் கருத்தரங்கின் கபிலர் அமர்வுக்குத் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு அமைந்தது. விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 21, 22.12.2024 ஆகிய நாட்களில் நிகழ்ந்த அக்கருத்தரங்கில் 22.12.2024 (ஞாயிறு) அன்று முற்பகல் நடந்த கபிலர் (இரண்டாம்) அமர்வில் நான் உட்பட எண்மர் கட்டுரை வழங்கினோம். வாய்ப்பினை வழங்கிய பெரும்பேராசிரியர் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மா அவர்களுக்கும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சு. தமிழ்வேலு ஐயா அவர்களுக்கும், முனைவர் இராச. கலைவாணி அம்மா அவர்களுக்கும், விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லுரித் தமிழ்த்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. அதன் காட்சிகள் இவை:


                                                                       அழைப்பிதழ்
                                                                      அழைப்பிதழ்

                                                        சிறு காணொலிக் காட்சி

                                                     கருத்தரங்க அமர்வுக் காட்சிகள்
                                                        கருத்தரங்க அமர்வுக் காட்சிகள்
                                                     கருத்தரங்க அமர்வுக் காட்சிகள்



 

ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரை (2024): கா. நமச்சிவாய முதலியார் பதிப்பித்த தொல்.பொருள். இளம். அகத். புறத். பதிப்பாண்டு எது?

 ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரை (2024): கா. நமச்சிவாய முதலியார் பதிப்பித்த தொல்.பொருள். இளம். அகத். புறத். பதிப்பாண்டு எது?


அறிஞர் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஆர்) ஆண்டுதோறும் திசம்பர்த் திங்களில் நடத்தி வருகின்ற கருத்தரங்கில் பங்கேற்றுக் கட்டுரை படிக்கும் வாய்ப்பு அமைந்தது. விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 21, 22.12.2024 ஆகிய நாட்களில் நிகழ்ந்த அக்கருத்தரங்கில் 22.12.2024 (ஞாயிறு) அன்று முற்பகல் கபிலர் (இரண்டாம்) அமர்வில் கா. நமச்சிவாய முதலியார் பதிப்பித்த தொல்.பொருள். இளம். அகத். புறத். பதிப்பாண்டு எது? என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினேன். அதன் படப்படி இது. 














சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...