செவ்வாய், 19 நவம்பர், 2024

தினமணி நாளிதழ் - நூல் வரப்பெற்றோம் பகுதி (18.11.2024)

தினமணி நாளிதழ் - நூல் வரப்பெற்றோம் பகுதி (18.11.2024) 

தினமணி நாளிதழின் வரப்பெற்றோம் பகுதியில் எமது குறுந்தொகைப் பாயிரங்கள் தொகுதி - 1 நூலின் செய்திகள் இடம்பெற்றுள்ளன. தினமணிக்கும் ஆசிரியர் தகைமிகு கே. வைத்தியநாதன் அவர்களுக்கும் நன்றிப் பூக்கள். 









ஞாயிறு, 17 நவம்பர், 2024

தினமணி நாளிதழ் - கலா ரசிகன் - நூல் அறிமுகம் (17.11.2024)

 தினமணி நாளிதழ் - கலா ரசிகன் - நூல் அறிமுகம் (17.11.2024)

தமிழின் முதன்மை இதழான தினமணி நாளிதழில் ஞாயிறு தோறும் வெளிவரும் பகுதியில் இன்று (17.11.2024) எம்முடைய குறுந்தொகைப் பாயிரங்கள் (பதிப்புரைகள், அணிந்துரைகள்) தொகுதி - 1 (முதல் ஐம்பது ஆண்டுகள் 1915 முதல் 1964 வரை) என்னும் நூலின் அறிமுகம் வெளிவந்துள்ளது. அறிமுகம் செய்த தினமணி ஆசிரியர் திருமிகு. கே. வைத்தியநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி மலர்கள். அதன் படப்படி இது.





வெள்ளி, 15 நவம்பர், 2024

கணித்தமிழ்ப் பேரவை - ஒருங்கிணைப்பாளர்கள், மாணவச் செயலர்கள் நியமனம் (22.10.2024)

  கணித்தமிழ்ப் பேரவை - ஒருங்கிணைப்பாளர்கள், மாணவச் செயலர்கள் நியமனம் (22.10.2024)

புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ்ப் பேரவை பொறுப்பாளர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் கடந்த 22.10.2024 அன்று நியமனம் செய்து ஆணை பிறப்பித்தார். அதன் படப்படி இது: 



பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் கணினித் தமிழ்ப் பயிலரங்கு - நிறைவு விழா (07.11.2024)

  பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் கணினித் தமிழ்ப் பயிலரங்கு - நிறைவு விழா (07.11.2024)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ்ப்பேரவை சார்பாக இரு நாள் கணினித் தமிழ்ப் பயிலரங்கின் நிறைவுவிழா  இன்று (07.11.2024) வியாழக் கிழமை காலை 12 மணியளவில் கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

தமிழ் இணையக் கல்விக் கழகம் நிதிநல்கை பெற்றுப் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் தொடக்கப்பட்ட கணித்தமிழ்ப்பேரவை தமிழையும் கணினித் தொழில்நுட்பத்தையும் மாணவியர்களிடம் பரவச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கணினித்தமிழ்ப் பயிலரங்கின் இரண்டாம் நாள் முதல் அமர்வில் முனைவர் ப. குப்புசாமி “முன்வைப்பி, தமிழ்த் தட்டச்சு” என்னும் தலைப்பில் உரையாற்றினார். முனைவர் நா. வஜ்ரவேலு அமர்வுக்கு நெறியாளுகை செய்தார். முனைவர் செ. சந்திரா அவர்களின் நெறியாளுகையில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் முனைவர் பா. பட்டம்மாள் “தொழில் நுட்ப உலகில் மகளிர்: சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் பொருண்மையில் சிறப்புரை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வீரமோகன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். புதுவைப் பல்கலைக் கழகத் தமிழியல் புலத்தின் புல முதன்மையர் பேராசிரியர் ச. சுடலைமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிறைவுப்பேருரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி பயிலரங்கு குறித்த கருத்துரை வழங்கினார். கவிதை, பேச்சுப்போட்டிகளில் பரிசுபெற்ற மாணவிகளுக்கு இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் மதிவாணன் அவர்கள் பரிசுகளை வழங்கினார். முன்னதாக, கணித்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி சு. ஜெயசூர்யா நன்றியுரை கூறினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி வெ. நிஷா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். திரளான மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  நிகழ்ச்சிப் படங்கள்












பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் கணினித் தமிழ்ப் பயிலரங்கு (06.11.2024)

 பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் கணினித் தமிழ்ப் பயிலரங்கு (06.11.2024)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ்ப்பேரவை சார்பாக இரு நாள் கணினித் தமிழ்ப் பயிலரங்கின் தொடக்கவிழா  இன்று (06.11.2024) புதன் கிழமை காலை 10 மணியளவில் கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசினரால் தொடங்கப்பெற்ற தமிழ் இணையக் கல்விக் கழகம் கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப்பேரவை என்ற அமைப்பினை உருவாக்கி, அதன் வழியாகத் தமிழையும் கணினித் தொழில்நுட்பத்தையும் மாணவ - மாணவியர்களிடம் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. புதுவை மாநிலத்தில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகிய பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் ஓரங்கமாக விளங்கும் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக நடைபெறும் கணினித்தமிழ்ப் பயிலரங்கின் தொடக்கவிழாவுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வீரமோகன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.

கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் முனைவர் இரா. ரெங்கசாமி அவர்கள் தமிழ் மென்பொருள்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி பயிலரங்கின் நோக்கங்களை எடுத்துக் கூறினார். முன்னதாக, கணித்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி சே. லத்திகா நன்றியுரை கூறினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி வ. அஷ்வதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

முனைவர் கா. ராஜகுமாரி நெறியாளுகையில் நடைபெற்ற பயிலரங்கின் முதல் அமர்வில் முனைவர் வீ. செல்வப்பெருமாள், அலுவலக மென்பொருள்: சொல்லாளர், விரிதாள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

முனைவர் ஏ. இராஜலட்சுமி நெறியாளுகையில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் முனைவர் சா. த. ஆரோக்கிய மேரி, அன்றாட வாழ்வுக்குக் கணினி என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.   

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். திரளான மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

நிகழ்ச்சிப் படங்கள் இவை:













கணித்தமிழ்ப் பேரவை இரு நாள் பயிலரங்க அழைப்பிதழ் (06&07.11.2024)

 கணித்தமிழ்ப் பேரவை இரு நாள் பயிலரங்க அழைப்பிதழ் (06&07.11.2024)

வணக்கம். சென்னை,  தமிழ் இணையக் கல்விக் கழகமும், புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்தும் கணினித் தமிழ் இரு நாள் பயிலரங்கு எதிர் வரும் 06&7.11.2024 (புதன், வியாழன் கிழமைகளில்) கல்லூரிக் கருத்தரங்க அறையில் முற்பகல் 10 மணியளவில் நடைபெறும்.

அறிவியல் அமுதம் பருக! வருக!! வருக!!!







கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா - தினமலர் நாளிதழ்ச் செய்தி (29.10.2024)

  கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா - தினமலர் நாளிதழ்ச் செய்தி (29.10.2024)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் நேற்று (28.10.2024) நிகழ்ந்த கணித்தமிழ்ப்பேரவையின் தொடக்கவிழா பற்றிய செய்தி இன்றைய (29.10.2024) தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது. தினமலர் நாளிதழ் நிருவாகத்தினருக்கும் இனிய நண்பர் திரு. முனுசாமி அவர்களுக்கும், செய்தியாளருக்கும் எம் நன்றி மலர்கள். செய்தி இதோ:




கணித்தமிழ்ப்பேரவை தொடக்கவிழா (28.10.2024)

 கணித்தமிழ்ப்பேரவை தொடக்கவிழா (28.10.2024)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா இன்று (28.10.2024) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசினரால் தொடங்கப்பெற்ற தமிழ் இணையக் கல்விக் கழகம் கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப்பேரவை எனற அமைப்பினை உருவாக்கி, அதன் வழியாகத் தமிழையும் கணினித் தொழில்நுட்பத்தையும் மாணவ - மாணவியர்களிடம் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பம் பெற்று, தகுதியுடைய கல்லூரிகளுக்கு ஆதார நிதியாக 25,000 அளித்து வருகின்றது. புதுவை மாநிலத்தில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகிய பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி இந்த ஆதார நிதியினைப் பெற்ற இரண்டாவது கல்லூரி ஆகும். புதுச்சேரிக் கல்லூரிகளில் தமிழ்நாடு அரசிடம் இருந்து நிதி பெற்று அமைப்பினைத் தொடங்கியுள்ள வரலாற்று நிகழ்வினைப் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை நிகழ்த்தியிருக்கின்றது என்பது குறிக்கத்தக்கதாகும்.

சிறந்தவொரு நிகழ்வாக அமைந்த கணித்தமிழ்ப்பேரவையின் தொடக்கவிழாவுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வீரமோகன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றியதோடு, கணித்தமிழ்ப்பேரவையின் வலைப்பூவினையும் தொடக்கி வைத்தார்.

புதுவைப் பல்கலைக் கழக இணைப்பேராசிரியரும் கணினி மொழியியல் அறிஞருமாகிய முனைவர் வ. தனலட்சுமி அவர்கள் இயற்கை மொழியாய்வும் செயற்கை நுண்ணறிவும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி கணித்தமிழ்ப்பேரவையின் நோக்கங்களை எடுத்துக் கூறியதோடு, வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, கணித்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, பேரவையின் மாணவச் செயலர்களுள் ஒருவராகிய இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி த. வசுந்திரா நன்றியுரை கூறினார். மாணவிகளே தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். 

                                                       கல்லூரி முதல்வர் அறையில்
பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்தல்
முனைவர் ஆ. மணியின் வரவேற்புரை

                           சிறப்பு விருந்தினருக்குக் கல்லூரி முதல்வர் சிறப்புச் செய்தல்
கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வீரமோகன் அவர்கள் கணித்தமிப்பேரவையின் வலைப்பூவினைத் தொடக்கி வைத்தல்
             தொடக்கவிழாச் சிறப்புரை: முனைவர் வ. தனலட்சுமி அவர்கள்
கணித்தமிழ்ப் பேரவையின் மாணவச் செயலர் செல்வி. த. வசுந்திராவின் நன்றியுரை
          நிகழ்வின் பின்புலமாக இருந்து தொண்டாற்றிய தன்னார்வலர்களுடன்

கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா (28.10.2024)

 கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா (28.10.2024)

வணக்கம். சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழகமும் புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து தொடங்கியுள்ள கணித்தமிழ்ப்பேரவையின் தொடக்கவிழா 28.10.2024 திங்கள் கிழமையன்று கல்லூரிக் கலையரங்கில் நடைபெற உள்ளது. ஆர்வலர் அனைவரும் வருக. அறிவியல் தமிழ் பருக. அழைப்பிதழ் இதோ.







கற்பகம் பல்கலைக் கழக முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (08.11.2024)

 கற்பகம் பல்கலைக் கழக முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (08.11.2024)


கோயம்புத்தூர், கற்பகம் பல்கலைக் கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வின் வாய்மொழித் தேர்வுக்குப் புறநிலைத் தேர்வாளராகக் கடந்த 08.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கோயம்புத்தூர் பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன்.  ஆய்வு நெறியாளர்: முனைவர் உமாராணி அவர்கள். ஆய்வுத் தலைப்பு: அ. வெண்ணிலா, அனார் கவிதைகளில் பெண். ஆய்வாளர்: திருமதி ஆ. கலைவாணி. நிகழ்வின் படங்கள்.





செவ்வாய், 1 அக்டோபர், 2024

இனம் இதழ்க் கட்டுரை (2023 பிப்ரவரி) - சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு

 இனம் இதழ்க் கட்டுரை (2023 பிப்ரவரி) - சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு

இணைய ஆய்விதழான இனம் பிப்ரவரி 2023 இதழில் சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு என்னும் கட்டுரை வெளிவந்துள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரை இதோ.











சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...