புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் ஏழாம் பட்டமளிப்பு விழா 02.11.2012 அன்று நடைபெற்றது. புதுச்சேரி ஊரகப் பகுதி மாணவர்களின் கல்விக்காக எஸ்.எம்.ஜி. அஞ்சலை அம்மாள் கல்வி அறக்கட்டளை என்ற பெயரிய அமைப்பொன்றினை நிறுவி, அதன்மூலம் மேல்நிலைப்பள்ளி, கல்வியல் கல்லூரி ஆகியவற்றை மிகச் சிறப்பாக நடத்திவரும் கல்வியாளர்; போற்றுதலுக்குரிய முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றினார். 100 மாணவர்கள் இளநிலைக் கல்வியியல் பட்டம்பெற்ற அவ்விழாவில் மத்திய எண்ணைவித்துக் கழகச் செயல் இயக்குநர் முனைவர் பரமாத்மா அவர்கள் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆ.மணி வாழ்த்துரையாற்றினார். கல்வி நிறுவனங்களைச் சிறப்பாக நடத்துவதற்குப் பின்புலமாக விளங்குகின்ற துணை முதல்வர் பேரா. உஷாஇலட்சுமணன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார். இவ்விழா பற்றிப் புதுவை பூமி இதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இது.
லேபிள்கள்
- ஆய்விதழ் (7)
- ஆய்வு (104)
- ஆய்வுக்கட்டுரை (17)
- இலக்கணம் (142)
- இலக்கியம் (109)
- இளம்பூரணர் (60)
- உ.வே.சாமிநாதையர் (45)
- உ.வேசா. (57)
- உரை (104)
- கலைச்சொல்லாக்கம் (2)
- காதல் (22)
- கும்மி (1)
- குறுந்தொகை (77)
- செம்மொழி (109)
- தமிழ் (103)
- தமிழ்ப்பாடம் (145)
- திருக்குறள் (2)
- தொடர்புக்கு (1)
- தொல்காப்பியம் (67)
- நிகழ்வுகள் (83)
- பதிப்பு அறிமுகம் (51)
- பரிசு (1)
- பறநானூறு (1)
- பொது (115)
- பொருளதிகாரம் (60)
- மரபு உணவுத் திருவிழா (2)
- விருது (1)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...
-
பாட்டியல் என்பது செய்யுள் இலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும். பன்னிரு பாட்டியல் என்பது இங்கு ஆகுபெயராய் நின்று பன்னிருவரால் இயற்றப்பட்ட ...
-
தொல்காப்பிய அகத்திணை இயல்: பிரிவின் வகைகள் - மூன்று 27. ஓதல் பகையே தூதிவை பிரிவே .(அகத்.27) மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்...
-
தொல்காப்பிய அகத்திணை இயல்: நற்றாய் கூற்றுக்கள் 39. தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக