குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 33) - கூதளி, கொறுக்காந்தட்டை, கொன்றை
கூதளி
கூதளம், கூதாளமெனவும் இது
வழங்கும். மலைச்சாரலில் வளர்வது. இதன் காம்பு குறியது. இதன் மலர் உட்டுளையை உடையது. கார்காலத்தில் மலர்வது. கைவளைக்கு அம்மலர் உவமிக்கப்படுகின்றது.
கொறுக்காந்தட்டை
இது
கொறுக்கைச்சி என வழக்கிலும், எருவை எனச் செய்யுளிலும் ஆளப்படும். அருவியுள்ள இடங்களில் வளர்வது இது. இதனை யானை உணவாகக் கொள்ளுமென்று தெரிகின்றது.
கொன்றை
முல்லை நிலத்துக்குரிய
மரங்களுள் ஒன்று இது. கார்காலத்தில் மலர்வது. முல்லை நிலத்தினர் இதன் மலர்கண்டு கார்காலம் வந்ததை அறிந்து கொள்வர். இது மாலைபோல மலர்வதாதலின் இதன் பூங்கொத்து, “கொடியிணர்” என்று சிறப்பிக்கப்படும். இதன் மலர் மஞ்சள் நிறமுடையதாதலின் பொன்னுக்கும், பொன்னரி மாலைக்கும், பொற்காசிற்கும், கிண்கிணிக் காசிற்கும், பசலைக்கும் ஒப்பாகச் சொல்லப்படும். குருந்தும் கொன்றையும் ஒருங்கு சேர்த்துக் கூறப்படும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக