தினமணி - தமிழ் மணி - கலாரசிகன்: திருக்குறள் - முதல் பதிப்பு - நூல் மதிப்புரை (21.01.2024)
அறிவுலக இதழாக விளங்கும் தினமணி நாளிதழின் தமிழ்மணியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவரும் கலாரசிகன் பகுதியில் எம்முடைய திருக்குறள்: முதல் பதிப்பு என்னும் நூலின் மதிப்புரை 21.01.2024 இதழில் இடம்பெற்றுள்ளது. பன்முகத்தன்மையும் ஆற்றலும் வாய்ந்த ஆசிரியர் திருமிகு. வைத்தியநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிமலர்கள். என்னை இன்னாரென அறியாதபோதும் நூலின் தகுதி கொண்டே, அதனை மதிப்பிட்டுரைக்க வேண்டும் என நினைத்த அந்தப் பேருள்ளம் வணங்குதலுக்கும் போற்றுதலுக்குமுரியது; வணங்குகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக