ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறையின் இலக்கணம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறையின் இலக்கணம்

51.உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பதே1 உள்ளுறை உவமம். (அகத். 51)

இஃது, உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): உள்ளுறுத்து பொருள் இதனோடு ஒத்து முடிக என - (உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனோடு ஒத்து முடிக என, உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம் - உள்ளுறுத்துக் கூறுவதே உள்ளுறை உவமம்.

எனவே, உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உருவன்றிப் பொருளுவமையாற் கொள்ளப்படுவது.

உதாரணம்:

"வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடுந் தன்முகத்தே செவ்வி உடையதோர்
வண்தா மரைபிரிந்த வண்டு" (தண்டியலங்காரம்); ஒட்டணி

இது வண்டோரனையர் மாந்தர்எனக் கூறுதலான் உவமிக்கப்படும் பொருள் புலப்படாமையின் உள்ளுறையுவம மாயிற்று. இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று. (அகத். 51).

குறிப்பு விளக்கம்

1.இறுவதை.



கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...