குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 16) - அவரை
மலையைச் சார்ந்த இடங்களில் உள்ள புனத்தில்
படர்ந்து வளர்கின்ற இக் கொடி இக்காலத்தில் மொச்சை என்று வழங்கப்பெறும். வீட்டில் வளர்கின்ற
அவரைக் கொடி வேறு; இது வேறு. தினை விளைவதற்கு முன்னர் மலைவாணர் புனத்தில் அவரையை விதைப்பர்;
தினை விளைந்து அறுக்கப்பட்ட பின்னர், அதன் தண்டிலே அவரைக் கொடி படர்ந்து கொத்துக் கொத்தாக
மலரும்; புனத்தில் உள்ள புதல்களிலும் இக் கொடி படரும். இதன் மலருக்குக் கிளியின் மூக்கு
உவமையாகக் கூறப்படும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக