குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 26) - ஐவனம், ஓமை
ஐவனம்
ஐவனம் என்பது மலையின்மேல் விளையும் நெல்
வகையுள் ஒன்று. அருவியின் அருகே விதைத்து விளைக்கப்படுவது. குறிஞ்சி நில மக்களுக்குரிய
உணவுப் பொருளாகப் பயன்படுவது.
ஓமை மரம்
ஓமை என்பது பாலை நிலத்து மரங்களுள் ஒன்று.
இதன் அடி மரம் பொரிந்து பொலிவற்றிருக்கும். இம் மரங்கள் நிறைந்த இடத்திற்குப் பாழூரை
ஒரு புலவர் ஒப்புரைக்கின்றார். இம் மரம் செந்நிறமுடையது. இதன் பட்டையை யானை உரித்து
உண்ணும். இதன் குறிய நிழலில் கன்றில்லாத ஒற்றைப் பசு வெயிற்கு அஞ்சித் தங்கியிருக்கும்
செய்தி ஒரு செய்யுளில் காணப்படுகின்றது (260). இதன் கவட்டினிடையே பருந்துகள் இருந்து
ஒலிக்கும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக