சனி, 29 ஏப்ரல், 2023

தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023

 

தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023

புதுச்சேரியின் முதல் பெண்கள் கல்லூரியான பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல் துறையான தமிழ்த்துறையில் கடந்த 2019 முதல் தமிழர் மரபு உணவுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகின்றது. அந்த ஆண்டே மாணவிகள் எழுதி, மாணவிகளாலே தொகுக்கப்பட்ட தமிழர் உணவு என்னும் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த ஆண்டும் இவ்விழா தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023 என்னும் தலைப்பில் இன்று (11.04.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்குத் தலைமை தாங்கிய கல்லூரி முதல்வரும், மனையியல் துறைப் பேராசிரியருமாகிய முன்னைவர் ராஜி சுகுமார் அவர்கள் உணவுத் திருவிழா கண்காட்சியைத் தொடக்கி வைத்துத் தலைமையுரை ஆற்றினார். அவர் பேசியதாவது: உணவு என்பது ஓர் அறிவியல் கலை. அதைத் தான் எங்களின் மனையியல் துறை கற்பிக்கின்றது. மனித வாழ்வில் உணவுக்குப் பேரிடம் உண்டு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனத் தமிழ்ப் புலவராகிய திருமூலரும் உணவின் இன்றியமையாமையைப் பாடி இருக்கின்றார். பண்பாட்டுக்கும், மரபுக்கும், மண்ணுக்கும் ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு, பல்வகை நோய்களுடம் போராடி வரும் இக்காலத் தலைமுறைக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்பட, இது போன்ற உணவுத் திருவிழாக்கள் அவசியமானவை. இதனைச் செய்து வரும் தமிழ்த்துறையினருக்கு எமது பாரட்டுக்கள் என்றார்.

விழாவில் உணவுத் திருவிழா எதற்காக? நடத்துகின்றோம்?, இது போன்ற நிகழ்வுகளின் அவசியம் என்ன? ஆகியவை குறித்து நோக்கவுரையாற்றினார் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் . மணி வரவேற்புரை ஆற்றினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி நந்தினி நன்றி நவின்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மானவிகளும், முனைவர் . மணி மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

கண்காட்சியில் தமிழர் மரபு சார்ந்த உணவுப்பொருட்கள், தமிழர் விளையாட்டுப் பொருள் மாதிரிகள்; புழங்கு பொருள் மாதிரிகள் முதலானவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவியர் கண்காட்சியைக் கண்டுத் தமிழர் மரபுகள் குறித்த செய்திகளை அறிந்து மகிழ்ந்தனர்.

    


அழைப்பிதழ்

இதழ்ச் செய்திகள்










கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...