புதன், 20 செப்டம்பர், 2023

சிறந்த ஆராய்ச்சி நூலுக்கான புதுவை அரசின் தொல்காப்பியர் விருது 2022 - அறிவிப்பு

  சிறந்த ஆராய்ச்சி நூலுக்கான புதுவை அரசின் தொல்காப்பியர் விருது 2022

புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் தமிழில் படைக்கப்படும் சிறந்த ஆராய்ச்சி நூலுக்குத் தொல்காப்பியர் விருது என்ற பெயரில் கலை, பண்பாட்டுத்துறை வழியாக விருது அளித்து வருகின்றது. ஆண்டுக்கு இருவருக்கு வழங்கப்பெறும் விருது இது. 2022ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது நான் எழுதிய தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு: கூற்று என்னும் நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21.09.2023 வியாழன் அன்று புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவில் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்கள் வழங்குகின்றார். வாய்ப்புடையோர் வருகை தரலாம். 

விருதுக்குரிய நூலின் முகப்பட்டை



அறிவிப்புக் கடிதம்


விழா அழைப்பிதழ்





விருது பெறுவோர் பட்டியல்







கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...