திங்கள், 2 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 10) சிறுபொழுதுகள்

             குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 10) சிறுபொழுதுகள்

யாமம்
            இடையிரவாகிய இது செறிந்த இருளுடையதாதலின் நள்ளென் யாமம் என்று வழங்கப்பெறும். பலரும் துயில்கின்ற இக்காலத்தில் தலைவரைப் பிரிந்த தலைவியர் அன்றிலின் குரலையும் ஆனேற்றின் மணி ஓசையையும் கேட்டுத் துயிலாது வருந்தி இருப்பர். பிற ஒலிகள் அடங்கி இருத்தலின் கடலின் முழக்கம் மிக்குத் தோற்றும். ஊர்க்காவலர் இக்காலத்தில் தம்முடைய காவற்றொழிலை மிக்கக் கருத்தோடு செய்வர். அவரை யாமங்காவலர் என்பர். நாழிகைக் கணக்கர் துயிலாது விழித்திருந்து யாமக் கணக்கை ஆராய்வார். நொச்சி மலர் உதிரும் காலம் இந்த யாமம் என்று தெரிகின்றது.
  வைகறை
வைகறையில் கோழிகள் குக்கூவென்று கூவும். தலைவனோடு சேர்ந்து இன்புறும் தலைவியொருத்தி தம் துயிலுக்கு இடையூறாக வந்த இச்சிறு பொழுதை வாள்போல் வைகறை என இழித்துக் கூறுகின்றாள்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...