திங்கள், 2 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 7): பொழுதுகள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 7): பொழுதுகள்

பொழுதுகள்
    முதற் பொருளின் வகையாகிய பொழுது பெரும் பொழுது, சிறுபொழுதென இரு கூறுபடும். பெரும்பொழுதாவன கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன. ஒவ்வொரு பருவத்திலும் இன்ன இன்ன மலர்கள் மலரும், இன்ன இன்ன விலங்குகள் இன்ன இன்ன நிலையை அடையும் என்பன போன்ற பல செய்திகள் உள்ளன. அவை புலவர்களுடைய நுண்ணறிவை வெளிப்படுத்தும்.
  பெரும்பொழுது
கார்
ஆவணி, புரட்டாசி மாதங்கள் கார் காலமாகும். இது முல்லைக்குரியது. கார்காலத்து மாலையில் மேகங்கள் அடர்ந்து மின்னி முழங்கி மழை பெய்கின்றன; அம் மழையினால் முல்லை நிலம் வளம் பெறுகின்றது; முல்லை மலர்ந்து மணக்கின்றது; பீர்க்கம்பூ விரிந்து பொன்னையும் பசலையையும் நினைப்பூட்டுகின்றது. கொன்றையும் குருந்தும் முகை யவிழ்கின்றன; ஆண்மான் பிணையோடு தனக்கினிய பசிய அறுகம்புல்லை வயிறார உண்டு பரல் நிறைந்த பள்ளத்தில் உள்ள தெளிந்த நீரை அருந்தித் துள்ளுகின்றது.

            மழையைக் கண்டு புலவர்கள் அடையும் ஆனந்தமும், அதனைப் புகழும் அழகும், தலைவிக்கு அதன்பால் உண்டாகும் பகைமையைப் புனைந்து காட்டும் இயல்பும் படித்துணர்ந்து இன்புறற்குரியன.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...