செவ்வாய், 7 ஜனவரி, 2020

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 51) - பல்லியும் பாம்பும்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 51) - பல்லியும் பாம்பும்


பல்லி

  பல்லி பாலை நிலத்தில் கள்ளியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் கால் செந்நிறமானது. இது தன் துணையை அழைக்கும் ஓசைக்குக் கானவர் தம் நகத்தில் அம்பைப் புரட்டும் ஓசையைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ உவமை கூறுவர்.
 
பாம்பு

  இதில் பல வகைகள் உண்டு. பச்சைப் பாம்பு, நல்ல பாம்பு,மலைப்பாம்பு என இந்நூலில் கூறப்படுகின்றன. பச்சைப்பாம்பின் கருப்ப முதிர்வு கரும்பின் கூம்புக்கு உவமை ஆகும்.நல்ல பாம்பு மிக்க விஷம் உடையது. வெண்ணிறமான நாகம்ஒன்றுண்டு. அதன் குட்டி கடித்தாலும் யானை இறந்துபடும்.நாகப்பாம்பின் தலையில் மணி உண்டு; அது நீல நிறம் உடையது.பாம்பு காந்தள் மலருக்கும், அதன் உரி கானலுக்கும் அருவிக்கும்,அதன் மணி தும்பி என்னும் வண்டிற்கும் உவமை ஆக்கப்படுகின்றன.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...