இலக்கியம் - திணை இலக்கியம்
71. தன் குடும்பம் வறுமைப்பட்டதற்காகத் தந்தையின் பொருளைக் கேளாது ஒருநேர உணவினைக் குறைத்து வாழ்ந்த மானமிகு மங்கையைப் பாடிய நற்றிணைப் புலவர் யார்?
போதனார் (நற். 110).
72. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
பூரிக்கோ (சுவடிகளில் தொகை முடித்தான் என்றுள்ளது. எனவே, தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் பூரிக்கோவே ஆகலாம்).
73. குறுந்தொகை பாடிய புலவர்களின் தொகை என்ன?
205.
74. ஆசிரியர் பெயர்அறியப்படாத குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை?
10.
75. பாடல்தொடரால் பெயர்பெற்ற குறுந்தொகைப் புலவர்களின் எண்ணிக்கை?
18.
குறிப்பு: வலைப்பூவில் தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு எழுதத் தொடங்கி, சில காரணங்களால் அது தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 87 ஆம் பகுதியுடன் (05.10.2011, புதன் கிழமை) நின்றுபோனது. அது இப்போது மீண்டும் தொடர்கிறது. வாய்ப்புள்ளபோது வளரும். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக