இலக்கியம் - திணை இலக்கியம்
101. காதற்காலத்தில் வேப்பங்காய் இனிக்கும். திருமணத்தின்பின் பனிச்சுனைத் தண்ணீரும் வெந்நீராகும் என்ற வாழ்க்கை உண்மையைப் பாடிய புலவர்?
மிளைப் பெருங்கந்தன் (குறுந். 196ஆம் பாடல்).
102. காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கையைப் பாடலாக்கியவர்?
காக்கைபாடினியார் நச்செள்ளையார் (குறுந். 210ஆம் பாடல்).
103. திணைக்கு நூறாக 500 பாடல்களைக் கொண்ட தொகை நூல் எது?
ஐங்குறுநூறு.
104. பாடற்பொருண்மை அல்லது தொடரால் பாடலுக்குப் பெயர் பெற்றுள்ள தொகை நூல்கள் யாவை?
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
105. ஐங்குறுநூற்றைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் யார்?
தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக