இலக்கியம் - திணை இலக்கியம்
91. ஆடிப்பாவையைத் தலைவனின் செயலுக்கு உவமை கூறிய புலவர் யார்?
ஆலங்குடி வங்கனார் (குறுந்தொகை 9ஆம் பாடல்).
92. சிறுகோட்டுப் பெரும்பழத்தைக் காமத்திற்கு உவமை கூறியவர்?
கபிலர் (குறுந்தொகை 18ஆம் பாடல்).
93. நல்லான் தீம்பாலைத் தலைவியின் அழகுக்கு ஒப்பாகக் கூறியவர்?
வெள்ளிவீதியார் (குறுந்தொகை 27ஆம் பாடல்).
94. செம்புலப் பெயல்நீர் பற்றிய காதற்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
குறுந்தொகை (40ஆம் பாடல்).
95. கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் பற்றிக் கூறும் பாடல்?
குறுந்தொகை 58ஆம் பாடல். பாடியவர்: வெள்ளிவீதியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக