உலகலாவிய தமிழ்த் திங்கள் இதழாக வெளிவரும் தமிழ் மாருதம் இதழ் பேராசிரியர் ச. சாம்பசிவனார் அவர்களால் கடந்த 22 ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழில் ஒரு இதழ் 22 ஆண்டுகளைத் தாண்டி நடத்தப்படுகின்றது என்றால் அதன் பெருமைக்கு வேறு சான்றுகள் தேவையில்லை. தமிழ் மாருதம் இதழின் இத்திங்கள் (ஆகச்டு 2012) இதழ் சாம்பசிவனார் அவர்களின் திருமகனார் முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது. தமிழுக்குத் தொண்டாற்றும் இதழான தமிழ் மாருதம் இதழில் ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் என்ற என்னுடைய நூலின் மதிப்புரை வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. மதிப்புரை வெளியிட்ட இதழ் ஆசிரியர் முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்களுக்கும், சிறப்பாசிரியர் பேராசிரியர் ச. சாம்பசிவனார் அவர்களுக்கும், மதிப்புரை எழுதிய பா.மனோன்மணி அவர்களுக்கும் என் நன்றி. மதிப்புரையின் படப்படி இது.