வெள்ளி, 28 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 4

புதுச்சேரி, உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் 12.12.12 முதல் 21.12.12 வரை பத்து நாட்கள் நடைபெற்ற தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் பயிலரங்கில் தமிழகம், புதுச்சேரியின் பகழ் பெற்ற அறிஞர் பெருமக்கள் உரையாற்றிச் சிறப்பித்தனர். அவை பற்றிய காட்சித் தொகுப்பு இது.


முனைவர் வீகோபால்அவர்களின் உரை :இலக்கணநூலார் கூறும் எழுத்துக்களின் பிறப்பு
முனைவர் நா. இளங்கோ அவர்களின் உரை:அகப்பாடல்களைப் பொருள்கொள்ளும் முறை


 முனைவர் ஆ.மணி அவர்களின் உரை: தொல்காப்பிய இடைச்சொல்லும் பிற்கால இலக்கணங்களும்


 அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


முனைவர் அ. சீனிவாசன் அவர்களின் உரை:மொழியியல் நோக்கில் எழுத்து பயிற்றுவித்தல்,மொழியியல் நோக்கில் புணர்ச்சி இலக்கணம்  அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


 முனைவர் இரா. கோதண்ட ராமன் அவர்களின் உரை : நான்கன் உருபும் புணர்ச்சி மரபும், அக மீட்டுருவாக்கம்


பயனாளர் பகுதியில் முனைவர் அ.சீனிவாசன், முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் ஆ.மணி ஆகியோர்


முனைவர் பெ. மாதையன் அவர்களின் உரை :  செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் வினைச்சொல்,  செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் வினையெச்சம்


 அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


முனைவர் ப. மருதநாயகம்  அவர்களின் உரை : தொல்காப்பியம் பயிற்றுவித்தல்,தமிழ் அற இலக்கியங்கள் பயிற்றுவித்தல்


முனைவர் பெ. மாதையன் அவர்களின் உரை : மொழித்திறன் வளர்ச்சியில் அகராதிகளின் பங்கு


கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் அறிஞர் அறிமுக உரை 


முனைவர் வெ.மு. சாசகான் கனி அவர்களின் உரை: அகத்திணைக் கோட்பாடுகள்


முனைவர் இரா. சீனிவாசன் அவர்களின் உரை:  மெய்ப்பாட்டியல் உணர்வும் வெளிப்பாடும், தொல்காப்பிய உரைகளில் மரபுவழிப் பயிற்சியும் பயிறுவித்தலும்


 கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின்  கருத்துரை


முனைவர் ச. குருசாமி அவர்களின் உரை: உரிச்சொல் விளக்கம், பயிற்றுவித்தல் மரபும் செவ்வியல் இலக்கண உரைகளும்


பயனாளர் பகுதியில் முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் ஆ.மணி ஆகியோர்


முனைவர் கோ. பழனிராஜன் அவர்களின் உரை : தொல்காப்பியத்தில் தொடரியல் கருத்துக்கள்


முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரை : குறுந்தொகை கற்பித்தல்


பயனாளர் பகுதியில் துணைப்பேராசிரியர்கள் ஆர். திருமாவளவன், அருள் பிரகாசம் ஆகியோர்


அறிஞர் அறிமுக உரை: துணைப் பேராசிரியர் பா. இலதா அவர்கள்


முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் உரை : கணினி மொழியியலும் இலக்கணமும் 1, கணினி மொழியியலும் இலக்கணமும் 2


பயனாளர் பகுதியில் முனைவர் ஆ.மணி,  முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் தி. செல்வம்  ஆகியோர்முனைவர் இரா. சம்பத் அவர்களின் உரை: செய்யுளியலும் இலக்கியவியலும்முனைவர் பக்த வச்சல பாரதி அவர்களின் உரை : செவ்வியல் இலக்கியங்கள் கற்பித்தல் : மானிடவியல் அணுகுமுறை


ஆய்வாளர் வினா நேரம்


பயிலரங்கப் பயனாளர்கள்

இன்னும் வளரும்...

சனி, 22 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 3


         புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கின் தொடக்கவிழா 12.12.12 அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் பங்கேற்றுத் தொடக்கவிழாப் பேருரையாற்றிய அப்பயிலரங்கு பற்றிய செய்திக்குறிப்புக்கள் இதோ:

 தமிழ்முரசு 14.12.12 நாள் செய்தி

மாலைமலர் 14.12.12 நாள் செய்தி

 தினமணி செய்திக்குறிப்பு


உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 2

புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கின் தொடக்கவிழா 12.12.12 அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது.

   விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் பங்கேற்றுத் தொடக்கவிழாப் பேருரையாற்றினார்.  விழாவிற்குக் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.  புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  பயிலரங்கத்தின் நோக்கம் பற்றிய கருத்துக்களை முனைவர் ஆ.மணி எடுத்துரைத்தார்.  உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரித் தமிழ்த்துறைத் துணைப்பேராசிரியர் பா.இலதா வரவேற்புரை ஆற்றினார். உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின்  வணிகவியல்துறைத் தலைவர் ஆர். திருமாவளவன் நன்றி நவின்றார். விழாக் காட்சிகள் இவை:


 விளக்கேற்றும் நிகழ்ச்சி

முனைவர் ஆ.மணி அவர்களுக்குக் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் சிறப்புச் செய்தல். 

முனைவர் ஆ.மணி பயிலரங்க நோக்கவுரையாற்றுதல்.

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் தொடக்கவிழாப் பேருரையாற்றுதல்.


புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்குதல்.


 உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின்  வணிகவியல்துறைத் தலைவர் ஆர். திருமாவளவன் அவர்கள் நன்றியுரையாற்றல். 

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு -1

திருக்கனூர், உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் கடந்த 12.12.12 முதல் 21.12.12 வரை பத்துநாள் பயிலரங்கு ஒன்றினைத் தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் என்ற தலைப்பில் நடத்தியது. புதுச்சேரி கல்வியியல் கல்லூரிகளின் வரலாற்றில் ஒரு புதிய, அரிய சாதனையாக மலர்ந்த இப்பயிலரங்கு கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் ஆற்றல் வாய்ந்த வழிகாட்டலில் நடைபெற்றது. கல்லூரித் துணை முதல்வர் பேரா. உஷா இலட்சுமணண் அவர்களும், தாகூர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. மணி அவர்களும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.  சிற்றூர்ப் புறத்தில் அமைந்த இக்கல்லூரியில் இத்தகைய பத்துநாள் பயிலரங்கு நடைபெற்றது ஒரு மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும். அப்பயிலரங்கின் அழைப்பிதழ் இது.


தொடக்கவிழா, நிறைவுவிழா அழைப்பிதழ்கள் 


பயிலரங்கில் உரையாற்றும் அறிஞர் பெருமக்களும் தலைப்புக்களும்

புதன், 19 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பட்டமளிப்பு விழா

       புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும்  உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் ஏழாம் பட்டமளிப்பு விழா 02.11.2012 அன்று நடைபெற்றது. புதுச்சேரி ஊரகப் பகுதி மாணவர்களின் கல்விக்காக எஸ்.எம்.ஜி. அஞ்சலை அம்மாள் கல்வி அறக்கட்டளை என்ற பெயரிய அமைப்பொன்றினை நிறுவி, அதன்மூலம் மேல்நிலைப்பள்ளி, கல்வியல் கல்லூரி ஆகியவற்றை மிகச் சிறப்பாக நடத்திவரும் கல்வியாளர்; போற்றுதலுக்குரிய முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றினார்.  100 மாணவர்கள் இளநிலைக் கல்வியியல் பட்டம்பெற்ற அவ்விழாவில் மத்திய எண்ணைவித்துக் கழகச் செயல் இயக்குநர் முனைவர் பரமாத்மா அவர்கள் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆ.மணி வாழ்த்துரையாற்றினார். கல்வி நிறுவனங்களைச் சிறப்பாக நடத்துவதற்குப் பின்புலமாக விளங்குகின்ற  துணை முதல்வர் பேரா. உஷாஇலட்சுமணன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார். இவ்விழா பற்றிப் புதுவை பூமி இதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இது. 
புதன், 21 நவம்பர், 2012

பல்துறை நோக்கில் தொல்காப்பியம் - கருத்தரங்கு 31.01.2013 – 01.02.2013


புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை
புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன இந்தியவியல் துறையுடன்
இணைந்து
பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு உதவியுடன் நடத்தும்
பல்துறை நோக்கில் தொல்காப்பியம் - கருத்தரங்கு
31.01.2013 – 01.02.2013
அறிவிப்பு & அழைப்பு மடல்
தமிழன்புடையீர்,
வணக்கம். புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை, புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன இந்தியவியல் துறையுடன்இணைந்து பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் நிதியுதவியுடன் இருநாள் கருத்தரங்கு ஒன்றை 31.01.13 – 01.02.13 ஆம் நாட்களில் நடத்த வுள்ளது.
            அக்கருத்தரங்கிற்குத் தொல்காப்பியத்தைப் பல்துறை நோக்குகளில் அணுகி விளக்கம் செய்யும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், உளவியல் நோக்கில் தொல்காப்பியம், அறிவியல் நோக்கில் தொல்காப்பியம், பயிரியல் நோக்கில்  தொல்காப்பியம், உயிரியல் நோக்கில் தொல்காப்பியம் என்றினைய தலைப்புக்களிலோ, ஒரு துறையுடன் நுணுக்கமாக அணுகும் வகைகளிலோ கட்டுரைகள் அமையலாம்.

·                                  கட்டுரைகள் ஏ4 அளவுத் தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல் அமையலாம்.

·         தமிழ் யுனிகோடு எழுத்துரு வில் தட்டச்சிட்டு வன்படியாகவும் (அச்சிட்ட தாள் வடிவிலும்), மென்படியாகவும் (குறுந்தட்டில் பதிந்தோ, மின்னஞ்சல் வழியாகவோ) அனுப்ப வேண்டும்.
·         
               பேராளர்ப் பதிவுக்கட்டணம் ரூ. 300-க்கான வரைவோலையை முனைவர் சி. பத்மாசனி    (s. padmasani, Puducherry)) என்ற பெயருக்கு எடுத்துப் புதுச்சேரியில் மாற்றத்தக்கதாக அனுப்பவேண்டும். பதிவுப் படிவம், வரைவோலை அனுப்ப கடைசிநாள் : 26.12.12.

·                     கட்டுரைகள் கருத்தரங்க நாளன்று ஐ.எசு.பி.என். எண் ணுடன் கருத்தரங்கத் தொகுதி களாக வெளியிடப்பெறும். பேராளர்களுக்கு நண்பகல் உணவும், தங்குமிடமும் சான்றிதழும் வழங்கப்பெறும்.

·                              தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்குப் பயணப்படி வழங்கப்பெறும்.

·                              கட்டுரையும் வரைவோலையும் அனுப்பக் கடைசி நாள் : 05.01.13.

·                             கட்டுரை, வரைவோலை அனுப்பவேண்டிய முகவரி:

                              முனைவர் ஆ. மணி,
                     கருத்தரங்க ஒருங்கிணைப்பு இணைச்செயலர்,
                     மனை எண் 56, நான்காம் குறுக்குத் தெரு,
                     அமைதி நகர்,
                     அய்யங்குட்டிப் பாளையம்,
                      புதுச்சேரி – 605 009,
                      பேசி: 94439 27141, 78716 29365,
                     மின்னஞ்சல் : manikurunthogai@gmail.com

                               கருத்தரங்க அழைப்பு மடல் - 1

  கருத்தரங்க அழைப்பு மடல் - 2ஞாயிறு, 11 நவம்பர், 2012

தவறான மின்னஞ்சல்கள்

அன்புடையீர்,


       வணக்கம். நான் முன்னொரு காலத்தில் பயன்படுத்திய  manikuruthogai@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து தவறான பல செய்திகள் நண்பர்களுக்கு அனுப்படுவதாக அறிந்தேன். அந்தக் கணக்கைத் தடை செய்ய முயன்றும் முடியவில்லை. பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது. எனவே அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதை நீக்கிவிடுக. பார்க்கவேண்டாம். எனக் கேட்டுக் கொள்கின்றேன். என்னால் ஏற்பட்ட இந்த தொல்லைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

தமிழ் மாருதம் இதழ் - நூல்மதிப்புரை

           உலகலாவிய தமிழ்த் திங்கள் இதழாக வெளிவரும் தமிழ் மாருதம் இதழ் பேராசிரியர் ச. சாம்பசிவனார் அவர்களால் கடந்த 22 ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழில் ஒரு இதழ் 22 ஆண்டுகளைத் தாண்டி நடத்தப்படுகின்றது என்றால் அதன் பெருமைக்கு வேறு சான்றுகள் தேவையில்லை. தமிழ் மாருதம் இதழின் இத்திங்கள் (ஆகச்டு 2012) இதழ் சாம்பசிவனார் அவர்களின் திருமகனார் முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது. தமிழுக்குத் தொண்டாற்றும் இதழான தமிழ் மாருதம் இதழில் ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் என்ற என்னுடைய நூலின் மதிப்புரை வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. மதிப்புரை வெளியிட்ட இதழ் ஆசிரியர்  முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்களுக்கும், சிறப்பாசிரியர் பேராசிரியர் ச. சாம்பசிவனார் அவர்களுக்கும், மதிப்புரை எழுதிய பா.மனோன்மணி அவர்களுக்கும் என் நன்றி. மதிப்புரையின் படப்படி இது.
ஞாயிறு, 10 ஜூன், 2012

கல்லூரி விளம்பர, ஆவணப்படம்

    சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் நான் பணியாற்றியபோது அக்கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் என்ற முறையிலும் தமிழ்ப் பேராசிரியர் என்ற நிலையிலும் கல்லூரி நிருவாகத்தின் கருத்திற்கு இணங்க, அக்கல்லூரியின் விளம்பரம் மற்றும் ஆவணப் படம் ஒன்றை எழுதி, இயக்கினேன். பின்னணிக் குரலும் தந்துள்ளேன். அப்போது அக்கல்லூரியில் பணியாற்றிய இரு பெண் பேராசிரியர்களும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர். சிவகாசியைச் சேர்ந்த நண்பர் ஒளி, ஒலிப்பதிவு செய்தார். திருநெல்வேலியில் படக்கோர்வை செய்தோம். தென் மாவட்டங்களின் உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட அந்த விளம்பரப் படம் இதோ:சனி, 28 ஏப்ரல், 2012

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 96

திணை இலக்கியம்


111.       இந்திர விழா பற்றி முதன்முதலில் கூறும் பாடல் இடம்பெற்ற நூல் எது?
ஐங்குறுநூறு (62 ஆம் பாடல்).

112.      அரசனை வாழ்த்தித் தொடங்கும் அகப்பாடல்களைக் கொண்ட தொகை நூல்?
ஐங்குறுநூறு (மருதப் பாடல்களின் வேட்கைப்பத்துப் பாடல்கள்)

113.      சங்கத் தெகைகளுள் மருதத்திணையை முதல் திணையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நூல்?
ஐங்குறுநூறு மட்டுமே.

114.      , ஆன் என்ற பொருளில் பசு என்ற சொல்லை முதன்முதலில் ஆண்ட இலக்கியம்?
ஐங்குறுநூறு (271 ஆம் பாடல்).

115.      பெண்மகவு வேண்டி ஒருவன் தவம் செய்ததைப் பற்றிக் கூறும் முதல் நூல்?
ஐங்குறுநூறு (257 ஆம்பாடல்).

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 95


திணை இலக்கியம்

106.     ஆசிரியப்பாவின் மிகக் குறைந்த அடிகளுடைய தொகை நூல் எது?
ஐங்குறுநூறு (மிகக் குறைந்த அடி : 3 அடிகள்)

107.     தொடர்நிலைச் செய்யுட்களைக் கொண்ட தொகை நூல்கள்?
ஐங்குறுநூறு, கலித்தொகை.

108.     ஐங்குறுநூற்றின் அடிவரையறை என்ன?
3 அடிமுதல் 6 அடி வரை.

109. ஐங்குறுநூற்றை முதன்முதலாகப் பதிப்பித்தவர் யார்?
உ.வே. சாமிநாதையர் (1903இல்).

110. ஐங்குறுநூற்றில் கிடைக்காத பாடல்கள் எவை?
ஐங்குறுநூற்றின் 129, 130 ஆகிய இரண்டு பாடல்கள்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

எம்.எசு.ஆபிசு மென்பொருளில் தமிழ் அகரவரிசைப்படுத்துதல்

      எம்.எசு.ஆபிசு மென்பொருளில் தமிழ் அகரவரிசைப் படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆங்கிலச் சொற்களை அகரவரிசைப் படுத்துவது தொடக்கம் முதலே எம்.எசு.ஒ. மென்பொருளில் இருந்து வந்தது. ஆனால் தமிழ்ச் சொற்களை அகரவரிசைப்படுத்துவதற்குத் தனி மென்பொருட்களையே இதுவரை நாடவேண்டி வந்தது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழி உண்டா? என மதுரைத் திட்டக்குழுவின் தலைவர் பேராசிரியர் முனைவர் கு.கல்யாண சுந்தரம் அவர்களை நேரில் கண்டபோது வினவினேன். அவர்களும் எம்.எசு.ஓ. மென்பொருளில் எக்செல் படிமையில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த சொற்களை அகரவரிசைப்படுத்த முடியும் என்று வழிகாட்டினார். 

             அதன்பின்னர் அண்மையில் எம்.எசு.ஓ. 2007 வேர்டு படிமையில் இயங்கிக் கொண்டிருந்தபோது அட்டவணைகளாக உள்ளவற்றிலும், பிறவகைகளிலும் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலும், டாம் வகை எழுத்துருக்களாலும் அமைந்த சொற்களை அகரவரிசைப் படுத்த இயலும் என்பது தெரியவந்தது. நான் அறிந்த ஒரு செய்தியை உலகுக்குச் சொல்லிவைத்தேன். தமிழன்பர்கள் பயன் கொள்வாராக. 

    செய்முறைகள்:
  
 1. அகரவரிசைப்படுத்த வேண்டிய அட்டவணையின் பெட்டியைத் தேர்வு செய்க.
2. வேர்டு படிமையில் உள்ள சார்ட் என்ற பகுதியைச் சுட்டுக.
3.  சார்ட் என்ற பெட்டிச் செய்தி திறக்கும். அதில் பெட்டி எண் 1/2/3/4/5 என எதாவதொன்றைத் தேர்வு செய்க.
4. ஏறுவரிசையா? இறங்கு வரிசையா? என்பதைச் சரிபார்த்து சரி என்ற பட்டியைச் சொடுக்குக. அகரவரிசையில் சொற்களைக் காணமுடியும். பத்திகளையும் இவ்வாறே அகரவரிசைப் படுத்தலாம். முயன்று பார்க்க.

என்னுடைய நூலொன்றுக்காக நான் அகர வரிசைப்படுத்திய பெரிய அட்டவணை ஒன்றின் ஒரு சிறு பகுதி. அகர வரிசைப்படுத்தும் முன்னர்:

வ. எண்.
காலம்
நூல்/ பகுதி, உரை
பதிப்பாசிரியர்
குறிப்பு
          1.          1
1847
ஆக.
(பிலவங்க ஆவணி)
(1848 என்றும் கருத்துண்டு)
தொல்காப்பியம் எழுத்த்திகாரமும் நச்சினார்க்கினியர் உரையும்
மழவை மகாலிங்கையர்
தொல்காப்பிய முதற்பதிப்பு. திருவண்ணாமலை வீரபத்திரையரால் அவருடைய கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.
          2.          2
1858
தொல்காப்பிய நன்னூல்
சாமுவேல் பிள்ளை
தொல். நன். மூலமும் விளக்கங்களும் (ஆங்கிலத்தில்) உள்ளன. சென்னப்பட்டணம், கிறித்து மதக்கியான விலக்கச் சங்கத்தின் அச்சுக்கூடத்தில் கானர் துரையால் அச்சிடப்பட்டது.
          3.          3
1866 (அ௯ய கார்த்திகை)
தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி
ஆறுமுக நாவலர்
திருவாவடுதுறை ஆதின ஸ்ரீசுப்பிரமணிய தேசிக சுவாமிகள் கட்டளைப்படி, சென்னப்பட்டணம் கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. பொது, சிறப்புப் பாயிரங்கள், நூன்மரபு முதல் நூற்பா உரை மட்டும்.
          4.          4
1868
செப்.
(விபவ, புரட்டாசி)
தொல்காப்பியச் சொல்லதிகாரம் – சேனாவரையர் உரை
சி. வை. தாமோதரம் பிள்ளை
சேனாவரையத்தின் முதற்பதிப்பு. ஆறுமுக நாவலரால் பரிசோதிக்கப்பட்டு, சென்னப்பட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரின் கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
          5.          5
1868 நவ.
தொல்காப்பியச் சேனாவரையம்
கோமளபுரம் இராசகோபால பிள்ளை
இடைச்சொல்லியல், ரிச் சொல்லியல் என்பன இவர் தரும் இயல் தலைப்புக்கள். பு. கந்தசாமி முதலியாரால் வர்த்தமான தரங்கிணீ சாகை அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
          6.          6
1868 நவ. (விபவ, கார்த்திகை)
தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் இளம்பூரணர் உரையும்
திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியார்
எழுத்ததிகார இளம்பூரணர் உரையின் முதற்பதிப்பு. கன்னியப்ப முதலியாரால் சென்னை, அத்திநீயம் அண்ட் டேலி பிரான்ச் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. 
          7.          7
1885 (பார்த்திப ஆவணி என முதற்பக்கத்திலும், பதிப்புரையில் பார்த்திப ஐப்பசி என்றும் உள்ளது. இதனைப் பார்த்திப ஐப்பசிப் பதிப்பெனக் கொள்வதே பொருத்தமுடையது.
தொல்காப்பியம் பொருளதிகாரம்  நச்சினார்க்கினியம்
சி.வை. தாமோதரம் பிள்ளை
பொருளதிகாரம் முழுமைக்கும் நச்சினிக்கினியர் உரையெனக் கருதியே பதிப்பித்துள்ளார். பின்னான்கு இயல்களின் உரை பேராசிரியர் உரையாகும்.
மெட்ராஸ் ஸ்காட்டிஷ் பிரஸ்அச்சகத்தில் கிரேவ்ஸ், கூக்சன் நிறுவனத்தாரால் அச்சிடப்பட்டது. இப்பதிப்பின் அச்சகத்தைச் சிலர் வேறுபடக்  குறித்துள்ளனர்.
          8.          8
1891 சூன்
(கர வைகாசி)
தொல்காப்பியம் எழுத்திகாரம் நச்சினார்க்கினியர்
சி.வை. தாமோதரம் பிள்ளை
சென்னபட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சிடப்பட்டது.
          9.          9
1892 (நந்தன  புரட்டாசி)
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர்
சி.வை. தாமோதரம் பிள்ளை
சொல்லதிகார நச்சினார்க்கினியரின் உரைக்கு முதற்பதிப்பு. சென்ன பட்டணம் விக்டோரியா ஜிபிலி யந்திரசாலையில் அச்சிடப்பட்டது.
        10.         10
1905
தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதற்பகுதியாகிய பாயிரவிருத்தி
வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்
பொது சிறப்புப் பாயிர விருத்தி உரை மட்டும். தஞ்சாவூர் ஸ்ரீவித்தியா விநோதினி முத்திரா சாலையில் அச்சிடப்பட்டது.

அகர வரிசைப்படுத்திய பின்னர்:

வ. எண்.
காலம்
நூல்/ பகுதி, உரை
பதிப்பாசிரியர்
குறிப்பு
          1.          1
1866 (அ௯ய கார்த்திகை)
தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி
ஆறுமுக நாவலர்
திருவாவடுதுறை ஆதின ஸ்ரீசுப்பிரமணிய தேசிக சுவாமிகள் கட்டளைப்படி, சென்னப்பட்டணம் கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. பொது, சிறப்புப் பாயிரங்கள், நூன்மரபு முதல் நூற்பா உரை மட்டும்.
          2.          2
1868 நவ.
தொல்காப்பியச் சேனாவரையம்
கோமளபுரம் இராசகோபால பிள்ளை
இடைச்சொல்லியல், ரிச் சொல்லியல் என்பன இவர் தரும் இயல் தலைப்புக்கள். பு. கந்தசாமி முதலியாரால் வர்த்தமான தரங்கிணீ சாகை அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
          3.          3
1858
தொல்காப்பிய நன்னூல்
சாமுவேல் பிள்ளை
தொல். நன். மூலமும் விளக்கங்களும் (ஆங்கிலத்தில்) உள்ளன. சென்னப்பட்டணம், கிறித்து மதக்கியான விலக்கச் சங்கத்தின் அச்சுக்கூடத்தில் கானர் துரையால் அச்சிடப்பட்டது.
          4.          4
1868
செப்.
(விபவ, புரட்டாசி)
தொல்காப்பியச் சொல்லதிகாரம் – சேனாவரையர் உரை
சி. வை. தாமோதரம் பிள்ளை
சேனாவரையத்தின் முதற்பதிப்பு. ஆறுமுக நாவலரால் பரிசோதிக்கப்பட்டு, சென்னப்பட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரின் கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
          5.          5
1885 (பார்த்திப ஆவணி என முதற்பக்கத்திலும், பதிப்புரையில் பார்த்திப ஐப்பசி என்றும் உள்ளது. இதனைப் பார்த்திப ஐப்பசிப் பதிப்பெனக் கொள்வதே பொருத்தமுடையது.
தொல்காப்பியம் பொருளதிகாரம்  நச்சினார்க்கினியம்
சி.வை. தாமோதரம் பிள்ளை
பொருளதிகாரம் முழுமைக்கும் நச்சினிக்கினியர் உரையெனக் கருதியே பதிப்பித்துள்ளார். பின்னான்கு இயல்களின் உரை பேராசிரியர் உரையாகும்.
மெட்ராஸ் ஸ்காட்டிஷ் பிரஸ்அச்சகத்தில் கிரேவ்ஸ், கூக்சன் நிறுவனத்தாரால் அச்சிடப்பட்டது. இப்பதிப்பின் அச்சகத்தைச் சிலர் வேறுபடக்  குறித்துள்ளனர்.
          6.          6
1891 சூன்
(கர வைகாசி)
தொல்காப்பியம் எழுத்திகாரம் நச்சினார்க்கினியர்
சி.வை. தாமோதரம் பிள்ளை
சென்னபட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சிடப்பட்டது.
          7.          7
1892 (நந்தன  புரட்டாசி)
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர்
சி.வை. தாமோதரம் பிள்ளை
சொல்லதிகார நச்சினார்க்கினியரின் உரைக்கு முதற்பதிப்பு. சென்ன பட்டணம் விக்டோரியா ஜிபிலி யந்திரசாலையில் அச்சிடப்பட்டது.
          8.          8
1868 நவ. (விபவ, கார்த்திகை)
தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் இளம்பூரணர் உரையும்
திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியார்
எழுத்ததிகார இளம்பூரணர் உரையின் முதற்பதிப்பு. கன்னியப்ப முதலியாரால் சென்னை, அத்திநீயம் அண்ட் டேலி பிரான்ச் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. 
          9.          9
1847
ஆக.
(பிலவங்க ஆவணி)
(1848 என்றும் கருத்துண்டு)
தொல்காப்பியம் எழுத்த்திகாரமும் நச்சினார்க்கினியர் உரையும்
மழவை மகாலிங்கையர்
தொல்காப்பிய முதற்பதிப்பு. திருவண்ணாமலை வீரபத்திரையரால் அவருடைய கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.
        10.         10
1905
தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதற்பகுதியாகிய பாயிரவிருத்தி
வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்
பொது சிறப்புப் பாயிர விருத்தி உரை மட்டும். தஞ்சாவூர் ஸ்ரீவித்தியா விநோதினி முத்திரா சாலையில் அச்சிடப்பட்டது.