ஞாயிறு, 19 ஜனவரி, 2020

நான் அடிக்கடிப் பயன் கொள்ளும் தமிழ், ஆங்கில நூல்கள்

நான் அடிக்கடிப் பயன் கொள்ளும் தமிழ், ஆங்கில நூல்கள்


அடிகளாசிரியர் (பதி.ஆ.). 1985 (முதல் பதிப்பு). தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் இளம்பூரணர் உரை. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக் கழகம்.
அடைக்கலசாமி. எம். ஆர். 1994. தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: கழகம்.
அமிர்தலிங்கம்.சு. 2000 (முதல் பதிப்பு). சங்க இலக்கியக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.
அய்யப்பன். கா.. 2009 (முதல் பதிப்பு). செம்மொழித் தமிழ் நூல்களின் பதிப்புரைத் தொகுப்பு. சென்னை: காவ்யா.
அரங்கன். தி.சௌ. (உரை ஆ.& பதி.ஆ.). 1915. குறுந்தொகை மூலமும் புத்துரையும். வேலூர் : வித்யரத்னாகர அச்சுக்கூடம்.
அரங்கன்.தி.சௌ. (உரைஆ.). 2000. குறுந்தொகை மூலமும் உரையும். சென்னை: முல்லை நிலையம்.
அரவிந்தன். மு.வை.. 2008 (இரண்டாம் பதிப்பு). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
அருணாசல தேசிகர். சோ. (பதி.ஆ.). 1933. குறுந்தொகை மூலம். சென்னை : பி.என். அச்சகம்.
அருணாசலம். மு. 1976 (முதல் பதிப்பு). தமிழ் இலக்கிய வரலாறு – தமிழ்ப் புலவர் வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு – மூன்றாம் பாகம். திருச்சிற்றம்பலம்: காந்தி வித்தியாலயம்.
அறவாணன். க.ப. 1975 (முதல் பதிப்பு). தொல்காப்பியக் களஞ்சியம். சென்னை: தமிழ்க்கோட்டம்.
அறவேந்தன். இரா. 2010. குறுந்தொகை-பதிப்பு வரலாறு (1915-2010). சென்னை : காவ்யா.
அறவேந்தன்.இரா. 2010. பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள். காரைக்குடி: தாயறம்.
அறிவுடைநம்பி. ம.சா. 2012 (முதல்  பதிப்பு). சுவடிப் பதிப்பு முன்னோடிகள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
ஆசிரியர் குழு (பதி.ஆ.). 1957. குறுந்தொகை. சென்னை : எஸ். இராசம்.
ஆசிரியர் குழு (பதி.ஆ.). 1981 (2ஆம் பதிப்பு). குறுந்தொகை. சென்னை: நியுசெஞ்சுரி புக் ஹவுஸ்.
ஆறுமுக நாவலர் (உரைஆ.). பிரமாதீச – ஐப்பசி (1853). திருமுருகாற்றுப்படை. --: வித்தியாநுபாலன யந்திரசாலை.
ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் (உரைஆ.). 1976 (முதல் பதிப்பு). நம்பி ஆண்டார் நம்பி அருளிச் செய்த கலித்துறை அந்தாதி என்னும் திருத்தொண்டர் திருவந்தாதி. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம்.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம். மற்றும் இருவர். 2010 (நான்காம் பதிப்பு). தமிழ்நடைக் கையேடு. புத்தாநத்தம்: அடையாளம்.
இராகவையங்கார். இரா. (உரை ஆ.). 1996. குறுந்தொகை விளக்கம். அண்ணாமலை நகர் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
இராசசெல்வம்.புதுவை நா.. 2008 (முதல் பதிப்பு). திருக்குறள் உரைவளமும் கல்லாடன் உரைத்திறனும் – ஒரு பார்வை. சென்னை: காவ்யா.
இராசாராம். துரை. (உரை ஆ.). 2008 (இரண்டாம் பதிப்பு). குறுந்தொகை தெளிவுரை. சென்னை : திருமகள் நிலையம்.
இராமரத்தினம். (உரை ஆ.). 2002. குறுந்தொகை மூலமும் உரையும். சென்னை : கங்கை புத்தக நிலையம்.
இலட்சுமணன். சி. 2011 (முதல் பதிப்பு). சுவடிப் பதிப்பாசிரியர்கள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
இளங்குமரன். இரா. 1991 (முதல் பதிப்பு). சுவடிக்கலை. சேலம் : அரிமாப் பதிப்பகம்.
இளங்குமரன். இரா. 2001(முதல் பதிப்பு). சுவடிப் பதிப்பியல் வரலாறு. சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.
இளங்குமரன். இரா.. 1991. தனித்தமிழ் இயக்கம். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
இளங்குமரன். இரா.. 2001 (முதல் பதிப்பு). சுவடிப் பதிப்பியல் வரலாறு. சிதம்பரம் : மெய்யப்பன் தமிழாய்வகம்.
இளம்பூரணர் (உரை ஆ.). 2006 (மூன்றாம் பதிப்பு). சென்னை: சாரதா பதிப்பகம்.
இளமாறன்.பா. 2008 (முதல் பதிப்பு). தொல்காப்பியம் பன்முக வாசிப்பு. சென்னை: மாற்று.
இளமுருகன். இரா.. 2016 (முதல் பதிப்பு). திருக்குறட் சுவடுகள். புதுச்சேரி: தமிழ்க்கனி இல்லம்.
உண்ணாமலை.வீ.. 1991. புதுக்கவிதையில் சமுதாயம். சிவகங்கை: செல்மா.
கதிரைவேற்பிள்ளை. நா. 2011. தமிழ் மொழியகராதி. சென்னை: சாரதா பதிப்பகம்.
கழகப் புலவர் குழு (தொகு.ஆ.). 1968 (முதல் பதிப்பு). திருவள்ளுவர் திருநாள் விழா மலர். சென்னை: கழக வெளியீடு.
காவேரி. சு. 1987. சட்டத்தமிழ் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு). மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
குமரகுருபரன் பிள்ளை. டி.எம். (பதி.ஆ.). 1968 (மூன்றாம் பதிப்பு). திருமூல நாயனார் அருளிய திருமந்திரமாலை எனப் பெயர் பெற்ற திருமந்திரம் – பத்தாம் திருமுறை. வைகுண்டம்: ஸ்ரீ குமரகுருபரன் சங்கம்.
கைலாசபிள்ளை த.. காலயுத்தி – தை (1919). ஆறுமுக நாவலர் சரித்திரம். சென்னபட்டணம்: வித்தியா நுபாலன யந்திரசாலை.
கோபால கிருட்டிணமாச்சரியர். வை.மு. (பதி.ஆ.). 2009. திருக்குறள். சென்னை : உமா பதிப்பகம்.
சக்கரவர்த்தி.அ. (பதி.ஆ.). .. .. (பதிப்பாண்டு இல்லை). திருக்குறள். சென்னை: சாது அச்சுக்கூடம்.
சக்திதாசன் சுப்பிரமணியன் (உரை ஆ.). 2008. குறுந்தொகை மூலமும் விளக்கவுரையும். சென்னை : முல்லை பதிப்பகம்.
சஞ்சீவி. ந. 1973. சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள். சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.
சண்முகம் பிள்ளை. மு. (பதி.ஆ.). 1994 (மறுஅச்சு). குறுந்தொகை மூலமும் உரையும். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக் கழகம்.
சண்முகம். செ.வை. 2006 (முதல் பதிப்பு). யாப்பும் நோக்கும் (தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்). சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.
சதாசிவப்பிள்ளை (பதி.ஆ.). 1891 (கர – பங்குனி) (மூன்றாம் பதிப்பு). நன்னூற் காண்டிகையுரை – யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் திருத்தியும் விளக்கியும் புதுக்கியும் கூட்டியது. சென்னப்படணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை.
சந்திரசேகரன். இரா. (பதி. ஆ.). 2003 (முதல் பதிப்பு). தமிழ் இலக்கியம் கருத்தியல் வளம். கோயம்புத்தூர்: மகாகவி பாரதியார் நூலகம்.
சம்பத். இரா. (பதி.ஆ.). 2015 (முதல் பதிப்பு). தொல்காப்பியக் கவிதையியல் (வடிவம் – பாடுபொருள் – உத்தி – வகைமை). புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
சம்பந்தன். மா.சு. 1980 (முதல் பதிப்பு). அச்சும் பதிப்பும். சென்னை: தமிழர் பதிப்பகம்.
சம்பந்தன். மா.சு. 1997 (திருத்திய பதிப்பு). அச்சும் பதிப்பும். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சம்பந்தன். மா.சு.. 1976 (இரண்டாம் பதிப்பு). அச்சுக்கலை. சென்னை: தமிழர் பதிப்பகம்.
சம்பந்தன்.மா.சு. 1997 (திருத்திய பதிப்பு). அச்சும் பதிப்பும். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சரளா ராசகோபாலன். 1986. வழிவழிச் சிலம்பு. சென்னை: ஒளிப் பதிப்பகம்.
சாம்பசிவனார். ச.. 1986 திசம்பர் (முதல் பதிப்பு). தொல்காப்பியம் பொருளதிகாரம் கருத்துக்கோவை [மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு]. மதுரை: வளவன் வெளியீடு.
சாமிநாதையர் உ.வே. (உரை ஆ.). 1983. குறுந்தொகை. அண்ணாமலை நகா;: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
சாமிநாதையர், உ.வே. (உரைஆ.). 2009. குறுந்தொகை. சென்னை: உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
சாமிநாதையர். உ. வே. (பதி.ஆ.). 1918 (முதல் பதிப்பு). நன்னூல்மூலமும் மயிலைநாதருரையும். சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம்.
சாமிநாதையர். உ. வே. (பதி.ஆ.). 1925 (முதல் பதிப்பு). நன்னூல்மூலமும் சங்கரநமசிவாயருரையும். சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம்.
சாமிநாதையர். உ.வே. (பதி. ஆ.). 1963 (ஆறாம் பதிப்பு). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: கபீர் அச்சுக்கூடம்.
சாமிநாதையர். உ.வே. (பதி. ஆ.). 1978 (ஒன்பதாம் பதிப்பு). சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும். சென்னை: உ.வே.சா. நூல் நிலையம்.
சாமிநாதையர். உ.வே. (பதி. ஆ.). 2001 (பத்தாம் பதிப்பு). இளங்கோவடிகள் அருளிச்செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும். சென்னை: உ.வே.சா. நூல் நிலையம்.
சாமிநாதையர். உ.வே. (பதி.ஆ.). 1963 (ஆறாம் பதிப்பு). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: கபீர் அச்சுக்கூடம்.
சாமிநாதையர். உ.வே. (பதி.ஆ.). 1995 (மூன்றாம் பதிப்பு). நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும். சென்னை : உ.வே.சா. நூல்நிலையம்.
சாமிநாதையர். உ.வே. 1933 (முதல் பதிப்பு). திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (முதற்பாகம்). சென்னப்பட்டணம்: கேஸரி அச்சுக்கூடம்.
சாமிநாதையர்.உ.வே.(பதி.ஆ.). 1931 (மூன்றாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும். சென்னை: கேஸரி அச்சுக்கூடம்.
சிதம்பரனார். சாமி. (உரை ஆ.). 1983. குறுந்தொகைப் பெருஞ்செல்வம். சென்னை : இலக்கிய நிலையம்.
சிவகாமி. ச. (பதி.ஆ.). 2009 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் பதிப்பும் பதிப்பாளரும். சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
சிவஞானம். ம.பொ. 1979 (மூன்றாம் பதிப்பு). சிலப்பதிகாரத் திறனாய்வு. சென்னை: பூங்கொடி பதிப்பகம். 
சிவப்பிரகாச தேசிகர். ந. (பதி.ஆ.). 1990 (இரண்டாம் பதிப்பு). திருமூலர் அருளிய திருமந்திர மாலை முந்நூறு (உரையும் – விளக்கமும்). அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
சிவலிங்கனார். ஆ. (பதி.ஆ.). 1988. தொல்காப்பியம் உரைவளம் – சொல்லதிகாரம் – எச்சவியல். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
சுந்தரம். இராம. (மொ.பெ.ஆ.). 2007 (முதல் பதிப்பு). திராவிடச் சான்று – எல்லீஸூம் திராவிட மொழிகளும். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
சுந்தரமூர்த்தி. இ. 2006. திருக்குறள் சில அரிய பதிப்புகள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சுந்தரமூர்த்தி. இ.. 2010 (முதல் பதிப்பு). பதிப்பியல் சிந்தனைகள். சென்னை: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட்.
சுந்தரமூர்த்தி. கு. (பதி. ஆ.). 1985. தொல்காப்பியம் - பிற்பகுதி - பேராசிரியர் உரை. --- : அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
சுந்தரமூர்த்தி. கு. (பதி. ஆ.). 1986. தொல்காப்பியம் - பொருளதிகாரம். தொகுதி-2. அண்ணாமலைநகா;: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
சுந்தரமூர்த்தி. கு. (பதி.ஆ.). 1985 (முதல் பதிப்பு). தொல்காப்பியம் பொருளதிகாரம் பிற்பகுதி பேராசிரியர் உரை (குறிப்புரையுடன்). அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
சுந்தரமூர்த்தி.இ. 2006. பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சுப்பிரமணியம். பூ. 2004 (முதல் பதிப்பு). சுவடிப்பதிப்புக்கலை வழிகாட்டி டாக்டர் உ.வே.சா.. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
சுப்பிரமணியன். ஆர். 1982. தமிழிலக்கியத்தில் சட்டமும் நீதியும் (முனைவர் பட்ட ஆய்வேடு). சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.
சுப்பிரமணியன். ச.வே. (உரைஆ.). 2003 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு. கோவிலூர் : கோவிலூர் மடாலயம்.
சுப்பிரமணியன். ச.வே. (பதி.ஆ.). 2009 (முதல் பதிப்பு). தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
சுப்பிரமணியன்.ச.வே. (உரைஆ.). 2003 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு. கோவிலூர் : கோவிலூர் மடாலயம்.
செங்கல்வராய பிள்ளை. வ.சு.. 1951 (முதல் பதிப்பு). திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும். திருப்பனந்தாள்: ஸ்ரீ காசிமடம்.
செந்துறை முத்து. 1981. தமிழர் வரலாறு நாகரிகம் பண்பாடு. சேலம்: அருண்மொழிப் பதிப்பகம்.
செல்லம்மாள்.த.. 1999. பிறதுறை நோக்கில் திருக்குறள் (வெளியிடப்பெறாத முனைவர் பட்ட ஆய்வேடு). திருச்சி: தேசியக் கல்லூரி.
சோமசுந்தரனார். பொ.வே. (உரை ஆ.) 1970. அகநானூறு - களிற்றியானைநிரை. சென்னை: கழகம்.
சோமசுந்தரனார். பொ.வே. (உரை. ஆ.). 1973 (மறு பதிப்பு). சிலப்பதிகாரம். சென்னை: கழக வெளியீடு.
தமிழ்ச்செல்வி.த. (பதி.ஆ.). 2014 செபுதம்பர். வெல்லும் தூயதமிழ் – இலக்கிய மாத இதழ் -  சிறுகதைச் சிறப்பிதழ்.  புதுச்சேரி: திரு இராமன் மறுதோன்றி அச்சகம்.
தமிழ்ச்செல்வி.த. (பதி.ஆ.). 2015 செம்டம்பர். வெல்லும் தூயதமிழ் – இலக்கிய மாத இதழ் -  சிறுகதைச் சிறப்பிதழ். புதுச்சேரி: திரு இராமன் மறுதோன்றி அச்சகம்.
தமிழ்ச்செல்வி.த. (பதி.ஆ.). 2016 அகுத்தோபர். வெல்லும் தூயதமிழ் – இலக்கிய மாத இதழ் -  சிறுகதைச் சிறப்பிதழ். புதுச்சேரி: திரு இராமன் மறுதோன்றி அச்சகம்.
தமிழண்ணல் (உரை ஆ.). 2002. குறுந்தொகை. கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.
தமிழண்ணல் (உரை ஆ.). 2008. தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தமிழண்ணல் (உரைஆ.). 2008 (முதல் பதிப்பு). தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தமிழண்ணல் 2002. தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தமிழண்ணல், முத்தையா. இ. (தொகு.ஆ.).1988 (இரண்டாம் பதிப்பு). தமிழியல் ஆய்வு. மதுரை: மதுரை காமராசர் பல்கலைக் கழகம்.
தமிழண்ணல். 1985 (முதல் பதிப்பு). தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் – நோக்கு. மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தமிழண்ணல். 1995 (ஏழாம் பதிப்பு). இனிய தமிழ்மொழியின் இயல்புகள் – இரண்டாம் பருவம். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தமிழண்ணல். 1995 (நான்காம் பதிப்பு). இனிய தமிழ்மொழியின் இயல்புகள் – மூன்று, நான்காம் பருவம். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தமிழண்ணல். 1995 (பன்னிரெண்டாம் பதிப்பு). இனிய தமிழ்மொழியின் இயல்புகள் – முதற்பருவம். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தமிழண்ணல். 2003 (திருத்திய முதல் பதிப்பு). சங்க இலக்கிய ஒப்பீடு – இலக்கியக் கொள்கைகள். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தமிழ்த்துறை ஆசிரியர்கள். 1979. திருக்குறட்சிந்தனைகள். அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
தமிழமல்லன். க.. 1978. தனித்தமிழ். புதுச்சேரி:  பொ. கண்ணையன்.
தமிழமல்லன். க.. 1997. மஞ்சளுக்கு வேலையில்லை. புதுச்சேரி: தனித்தமிழ்ப் பதிப்பகம்.
தமிழமல்லன்.க. (தொகு.ஆ.). 1985. விருந்து (சிறுகதைகள்). புதுச்சேரி: தனித்தமிழ்க் கழகம்.
தமிழமல்லன்.க.. 1992. வந்திடுவார் (சிறுகதைகள்). புதுச்சேரி: தனித்தமிழ்ப் பதிப்பகம்.
தாமரைச்செல்வி. தி. 2012. திருக்குறள் பதிப்பு வரலாறு. புதுச்சேரி: செயராம் பதிப்பகம்.
தாமரைசெல்வி.தி. 2012 (முதல் பதிப்பு). திருக்குறள் பதிப்பு வரலாறு. புதுச்சேரி: செயராம் பதிப்பகம்.
திருஞானசம்பந்த முதலியார். மணி. 1950 (முதல் பதிப்பு). சென்னைத் தமிழ்ப் புலவர்கள் (முதற்புத்தகம்). சென்னை: திருநெல்வேலி சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
திருஞானசம்பந்த முதலியார். மணி. 1951 (முதல் பதிப்பு). சென்னைத் தமிழ்ப் புலவர்கள் (இரண்டாம் புத்தகம்). சென்னை: திருநெல்வேலி சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
திருமாறன். கு. 2003. தனித்தமிழியக்கம். சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.
துரைசாமிப் பிள்ளை. ஔவை. சு. (உரை ஆ.). 1960 (மறுஅச்சு). புறநானூறு (1-200 பாட்டுக்கள்). சென்னை: கழகம்.
துரைசாமிப் பிள்ளை. ஔவை. சு. (உரை ஆ.). 1972 (மறுஅச்சு). புறநானூறு (201-400 பாட்டுக்கள்). சென்னை: கழகம்.
துறு ஐயர் (பதி.ஆ.). 1840. திருவள்ளுவர் செய்த குறளின் அறத்துப்பாலில் இல்லறம் – உயசு – அதிகாரமும் அவற்றிற்குப் பரிமேலழகர் செய்த இலக்கணவுரையும் இயற்றமிழாசிரியராகிய இராமாநுச கவிராயர் செய்த வெள்ளுரையும் புத்துரையும் துறு ஐயர் செய்த இங்கிலீஸ் மொழிபெயர்ப்பும். சென்னை: அமெரிக்க மிசியோன் அச்சுக்கூடம்.
துறு ஐயர் (பதி.ஆ.). 1852. திருவள்ளுவர் செய்த குறளின் அறத்துப்பாலில் துறவறமும், பொருட்பாலிலரசியலும், அவற்றிற்குப் பரிமேலழகர் செய்த இலக்கணவுரையும் இயற்றமிழாசிரியராகிய இராமாநுச கவிராயர் செய்த வெள்ளுரையும் புத்துரையும் வி. துறு ஐயர் செய்த இங்கிலீஸ் மொழிபெயர்ப்பும். சென்னை: வேப்பேரி மிசியோன் அச்சுக்கூடம்.
நடராசன்.இரா. 2009. தமிழ்ப் பதிப்புலகம் 1800 – 2009. சென்னை: பாரதி புத்தகாலயம்.
நடராசா. க. செ. (க.ஆ.). 1982 (முதல் பதிப்பு). தமிழ் மறைக் கழகத்தின் 22வது திருக்குறள் மாநாட்டுச் சிறப்பு மலர். யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சகம்.
நாராயணசாமி ஐயர். அ. முதலியோர் (உரை ஆ.). 1962 (திருத்திய மூன்றாம் பதிப்பு). நற்றிணை நானூறு. சென்னை: கழகம்.
நித்தியா அறவேந்தன். 2011 (முதல் பதிப்பு). முல்லைப்பாட்டு பதிப்பு வரலாறு (1889 – 2011). சென்னை: காவ்யா.
பகவதி. கே. 1981. மரபியல் - உரைவளம். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
பரிமணம். அ.மா. (பதி.ஆ.). 1990. திருக்குறள் – பழைய உரை – அறத்துப்பால். தஞ்சாவூர்: சரசுவதி மகால் நூல்நிலையம்.
பாலசுப்பிரமணியன். கு.வெ. 1986. சங்க இலக்கியத்தில் புறப்பொருள். புதுக்கோட்டை: மீரா.
பாலசுப்பிரமணியன். கு.வெ. முதலியோர் (உரை ஆ.). 2004. புறநானூறு மூலமும் உரையும் - தொகுதிகள். 1,2. சென்னை: நியுசெஞ்சுரிபுக் ஹவுஸ்.
பாலசுப்பிரமணியன். சி. 2003. தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: மணமலர்ப் பதிப்பகம்.
பாலூர் கண்ணப்ப முதலியார் (உரைஆ.). 1979 (இரண்டாம் பதிப்பு). தமிழ் மந்திரம் மூலமும் விளக்கம் (ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் கூடியது). சென்னை: வானதி பதிப்பகம்.
பியூலா மெர்சி.தா. எ.. 1974. இருபதில் சிறுகதைகள். நாகர்கோவில்: செயகுமாரி.
பிரேமா. இரா. (உரை ஆ.). 1999. குறுந்தொகை மூலமும் உரையும். சென்னை : வர்த்தமானன் பதிப்பகம்.
புலியூர்க்கேசிகன் (உரை ஆ.). 1978 (மூன்றாம் பதிப்பு). குறுந்தொகை தெளிவுரை. சென்னை : பாரி நிலையம்.
பெரிய தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் (க.ஆ.).  2000 (முதல் பதிப்பு). திருக்குறள் மாநாடு – 2000 சிறப்பு மலர். கொழும்பு: கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடு.
போப்.ஜி.யூ. (மொ.பெ.ஆ.). 2012 (திருத்திய இரண்டாம் பதிப்பு). திருக்குறள் – தமிழ் ஆங்கிலம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
மகாலட்சுமி. தி. 2014 (முதல் பதிப்பு). திருமந்திரம் காட்டும் வாழ்வியல் நெறிகள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
மகாலிங்கையர். மழவை. (பதி. ஆ.) 1847 (முதல் பதிப்பு). தொல்காப்பியம் - நச்சினார்க்கினியர் உரை. - : கல்விக்கடல் அச்சகம்.
மணி. ஆ. (பதி.ஆ.). 2018 (முதல் பதிப்பு).  பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு. சென்னை: லாவண்யா பதிப்பகம்.
மணி. ஆ. (பதி.ஆ.). 2018. திருக்குறள் பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயர் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
மணி. ஆ. 1999. குறுந்தொகை உரைநெறிகள். முனைவர்ப்பட்ட ஆய்வேடு. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
மணி. ஆ. 2005. குறுந்தொகைத் திறனுரைகள். கெங்குவார்பட்டி : தமிழன்னை ஆய்வகம்.
மணி. ஆ. 2010. செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
மணி. ஆ. 2011. ஆய்வு நோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம். 
மணி. ஆ. 2011. குறுந்தொகை உரைநெறிகள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
மணி. ஆ. 2017. உரை இலக்கிய ஆய்வுகள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
மணி. ஆ.. 2015 (முதல் பதிப்பு). குறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள். சென்னை: லாவண்யா பதிப்பகம்.
மணி. ஆ.. 2015. திருக்குறளின் முதல் பதிப்பாசிரியர் யார்?. சென்னை: இலாவண்யா பதிப்பகம்.
மணி. ஆ.. 2016 (முதல் பதிப்பு). தமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும். சென்னை: இலாவண்யா பதிப்பகம்.
மணி. ஆ.. 2017 (முதல் பதிப்பு). சிவகங்கைச் சரித்திரக் கும்மி என்ற சிவகங்கை நகர்க் கும்மி. சென்னை: காவ்யா.
மணி.ஆ. 2016. காவ்யா தமிழ் – காலாண்டிதழ் (2016 சனவரி – மார்ச்சு). சென்னை: காவ்யா.
மருதநாயகம். ப. (பதிஆ.). 2015 (முதல் பதிப்பு). எல்லீசரின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
மருதநாயகம். ப.. 2006 (முதல் பதிப்பு). ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்: அயோத்திதாசரின் சொல்லாடல். திருநெல்வேலி: கல்லாத்தி.
மன்னர் மன்னன். (தொகு.ஆ.). 1979 (முதல் பதிப்பு). புதுவைப் புகழ்மணிகள். வளவனூர்: முத்துப் பதிப்பகம்.
மீனாட்சி முருகரத்தினம். 1976. கல்கியின் சிறுகதைக்கலை. மதுரை: சர்வோதய இலக்கியப் பண்ணை.
முத்து சந்தானம். 1994 (இரண்டாம் பதிப்பு). தமிழ்த்தொடரியல். மதுரை: தமிழ்த்துறை.
முத்துச்செல்வன். ஆ. (க.ஆ.) 2008 (முதல் பதிப்பு). ஆறுமுக நாவலர். கரு. அழ. குணசேகரன் & த. பூமிநாதன் (பதி.ஆ.). சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
மோகனராசு. கு.. 2005 (முதல் பதிப்பு). திருக்குறள் உரை வகைகள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
ராமக்ருஷ்ணபிள்ளை. ரா. (பதி.ஆ.). 1879 (முதற்பதிப்பு). கண்ணி நுண் சிறுதாம்பு – இதற்கு ஸ்ரீ உ.வே. பெரியவாச்சன்பிள்ளை யருளிச் செய்த வ்யாக்யாநமும் பின்புள்ளாரருளிச் செய்த அரும்பதமும். சென்னை: ஆதிகலாநிதி அச்சுக்கூடம்.
ராமசுப்பிரமணிய சர்மா & ஆர். பொன்னம்மாள் (உரைஆ.). 2016 (பத்தாம் பதிப்பு). ஸ்ரீநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - முதலாயிரம் – பாடல்கள் 1 to 947. சென்னை: கங்கை புத்தக நிலையம்.
வரதராசன். மு. 1983 (ஐந்தாம் பதிப்பு). தமிழ் இலக்கிய வரலாறு. புதுதில்லி: சாகித்திய அகாதமி.
விசுவநாதப்பிள்ளை. மாவை, வே. (பதி.ஆ.). 1912 (முதல் பதிப்பு). திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளிய பத்தாம் திருமுறையென்னும் திருமந்திரம். சென்னை: ரிப்பன் அச்சியந்திரசாலை.
வீரமணி. கி. (பதி.ஆ.). 1994 (நான்காம் பதிப்பு). பெரியார் களஞ்சியம் - முதல் தொகுதி. சென்னை: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு.
வெள்ளைவாணன். க. (பதி. ஆ.) 1983. தொல்காப்பியம் - பொருளியல் உரைவளம். மதுரை: மதுரைகாமராசர் பல்கலைக்கழகம்.
வெள்ளைவாரணன். க. (பதி.ஆ.). 1989 (முதல் பதிப்பு). தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம். மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
வேங்கடசாமி நாட்டார் ந.மு. முதலியோர் (உரை ஆ.). 1957 (மறுஅச்சு) அகநானூறு - நித்திலக் கோவை. சென்னை: கழகம்
வேங்கடசாமி நாட்டார் ந.மு. முதலியோர் (உரை ஆ.). 1959 (மறுஅச்சு) அகநானூறு - மணிமிடை பவளம். சென்னை: கழகம்
வேங்கடசாமி நாட்டார். ந.மு. (உரை. ஆ.). 1959 (மறுபதிப்பு). சிலப்பதிகார மூலமும் உரையும். சென்னை: கழக வெளியீடு.
வேங்கடசாமி. மயிலை. சீனி. 1962 (முதல் பதிப்பு). பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800 – 1900). சென்னை: சாந்தி நூலகம்.
வேங்கடசாமி. மயிலை. சீனி.. 2012 (முதல் பதிப்பு). பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800 – 1900). சென்னை: பரிசல் புத்தக நிலையம்.
வேங்கடராமன். எச். (பதி. ஆ.) 1997 (இரண்டாம் பதிப்பு). நற்றிணை மூலமும் உரையும். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.
வேங்கடராமன்.சு.. 1977. அகிலன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
வேங்கடராமையா. கே.எம். (பதி.ஆ.). 1991. திருக்குறள் (ஜைன உரை). தஞ்சாவூர்: சரசுவதி மகால் நூல்நிலையம்.
வேங்கடராமையா.கே.எம். முதலானோர் (பதி.ஆ.). 1996. தொல்காப்பிய மூலம் – பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு. திருவனந்தபுரம் : பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்.
வையாபுரிப் பிள்ளை. எஸ். (பதி.ஆ.). 1967 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) தொகுதி - 1. சென்னை: பாரி நிலையம்.
வையாபுரிப் பிள்ளை. எஸ். (பதி.ஆ.). 1967 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) தொகுதி - 2. சென்னை: பாரி நிலையம்.
ஜானகி. இரா. (தொகு.ஆ.). 2011 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியப் பதிப்புரைகள். சென்னை: பாரதி புத்தகாலயம்.
ஜெயம். அ. & சந்திரலேகா வைத்தியநாதன். 1997. தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: ஜனகா பதிப்பகம்.
ஸ்ரீகிருஷ்ணசாமி அய்யங்கார் (பதி.ஆ.). 1993 (இரண்டாம் பதிப்பு). கண்ணிநுண் சிறுதாம்பு வ்யாக்யானங்கள் (நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஆகிய பூர்வாசார்யர்களின் வ்யாக்யானக்களும், தம்பிரான்படியும், பதவுரை, அரும்பதவுரை, ப்ரமாணத்திரட்டும் கூடியது). .. .. ..: ஸ்ரீ. ரா. ஸ்ரீ. கி. ஸ்ரீநிவாஸயங்கார் குடும்ப தர்ம சொத்துகளின் ஆதரவில் வெளியிடப் பெற்றது.
ஹேமமாலினி (க.ஆ.). 1987. முதல் கருத்தரங்கு தமிழ் இலக்கிய ஆய்வுக்கோவை. தஞ்சாவூர்: அனைந்திந்திய தமிழ் இலக்கியக் கழகம்.

. .. .. 1851. A Supplement to The Catalogue Of The Library Of The Hon. East- India Company. London: Printed By J. & H. Cox.
----. 1982 (Reprint). Tamil Lexicon – Seven Volumes.  Madras : Madras University.
.. .. .. (எல்லீசர்). (தலைப்புப் பக்கம் கிட்டவில்லை. அதனால் நூல் விவரங்கள் எவையும் கிட்டவில்லை).
.. .. .. 1833. The Evangelical Magazine Missionary Chronicle Vol. Xl - New Series.  London: Frederick Westley And A. H. Davis, 
.. .. .. 1851. A Supplement to The Catalogue Of The Library Of The Hon. East- India Company. London: Printed By J. & H. Cox.
.. .. .. 1931? (தலைப்புப் பக்கம் கிட்டவில்லை. அதனால் நூல் விவரங்கள் எவையும் கிட்டவில்லை).
Badley. B.H.. 1881 (Revised Edition). Indian Missionary Directory And Memorial Volume. Lucknow: Methodist Episcopal Church Press.
Bower.H. (Editor). 1868. The Chintamani - First Book called Namagal Ilambagam with the commentary of Nachinarkiniyar. Madras: The Christian Knowlegde Society’s Press.
Burnett. L.D. & G.U. Pope (Ed.). 1909. A Catalogue Of The Tamil Books In The Library Of The British Museum. London: British Museum.
Burnett. L.D. & G.U. Pope (Ed.). 1909. A Catalogue Of The Tamil Books In The Library Of The British Museum. London: British Museum.
Caleb Foster.
Dhamodharan. A. 1972 (First Edition). A Grammar of Tirukkural. New Delhi: South Asia Institute.
Dhamodharan. A. 1972 (First Edition). A Grammar of Tirukkural. New Delhi: South Asia Institute. 
John Murdoch . 1865. Classified Catalogue of  the Tamil Printed Books with Introductory notices. Madras: The Cristian Vernacular Education Society.
John Murdoch . 1865. Classified Catalogue of  the Tamil Printed Books with Introductory notices. Madras: The Cristian Vernacular Education Society.
John Murdoch . 1870. Catalogue of The Christian Vernacular Literature  of India: With Hints On The Management Of Indian Tract Societies. Madras: Caleb Foster.
John Murdoch . 1870. Catalogue of The Cristian Vernacular Literature  of India: With Hints On The Management Of Indian Tract Societies. Madras:
Kamil V. Zvelebil. 1992. Companian Studies to the History of Tamil Literature. Netharlands: E.J. Brill.
Muttucumaraswamy. V. 1992 (First Edition). Some Eminent Tamils (Writers and others leading figures (19th to 20th centuries). .. ..: Department of Hindu Religious and Cultural  Affairs.
Pope. G.U. (Trans). 1886. The Sacred Kurral of (Tiruvalluva-nayanar) with introduction, grammar, translation, notes (in which are reprinted fr. C. J. Beschi's and F. W. Ellis' versions), lexicon, and concordance. London: Henry Frowde.
Pope. G.U. (Trans). 1886. The Sacred Kurral of (Tiruvalluva-nâyanär) with introduction, grammar, translation, notes lexicon, and concordance (in which are reprinted fr. C. J. Beschi’s and F. W. Ellis’ versions). London: Henry Frowde.
Pope. G.U. (Trans). 1981 (Reprint). The Sacred Kurral of (Tiruvalluva-nâyanär) with introduction, grammar, translation, notes lexicon, and concordance (in which are reprinted fr. C. J. Beschi’s and F. W. Ellis’ versions). New Delhi: Asian Educational Services.
Popley. H.A. (Editor). 1931 (First edition). The Sacred Kural or Tamil Veda of Tiruvalluvar Selected and Translated with Introduction and Notes. Calcutta: Association Press.
Popley. H.A. (Editor). 1931 (First edition). The Sacred Kural or Tamil Veda of Tiruvalluvar Selected and Translated with Introduction and Notes. Calcutta: Association Press.
Simon Casie Chitty. 1859 (First Edition). The Tamil Plutarch containg A Summary Account of The lives of the Poets and Poetess of Southern India and Ceylone. Jaffna: Ripley & Strong – Printers.
Simon Casie Chitty. 1859 (First Edition). The Tamil Plutarch. Jaffna: ripley & Strong Printers.
The Asiatic Society of Bengal. 1908 (First Edition). A Catalogue of Printed Books in Eurobian Langueages in the Library of the Asiatic Society of Bengal. Calcutta: The Baptist Mission Press.
William Taylor. 1862. Catalogue Raisonne of Oriental Manuscripts In The Government Library - VOL. III. Madras: The United Scottish Press,
William Taylor. 1862. Catalogue Raisonne of Oriental Manuscripts In The Government Library - Vol. Ill. Madras: The United Scottish Press.
William Taylor. 1862. Catalogue Raisonne of Oriental Manuscripts In The Government Library - Vol. Ill. Madras: The United Scottish Press.

(தொடரும்)

செவ்வாய், 7 ஜனவரி, 2020

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 59) - வெருகு

                              குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 59) - வெருகு


வெருகு

   காட்டுப் பூனை வெருகு எனப்படும். இது வேலிகளில் வாழ்வது; மாலையில் சென்று இரை தேடும்; எலியையும் கோழியையும் உண்ணும். இதன் பல் முல்லை அரும்பிற்கு உவமை கூறப்படும். இதன் குட்டியைப் பிள்ளையென்றல் மரபு.

(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 58) - வருடையும் வரையாவும்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 58) - வருடையும் வரையாவும்


வருடை

     எண்கால் வருடை என்று கூறப்படுவதும் இதுவே. இதனை வருடை மானென்றும், இதன் குட்டியை மறியென்றும் கூறுதல் மரபு. இது செங்குத்தான மலைகளில் வாழும் இயல்பினது.
 
வரையா

     மலைப்பசு அறுகம்புல்லை உண்டு உகாய் மரத்தின் நிழலில் தங்குவதாக ஒரு செய்யுள் கூறுகின்றது. இதன் ஆண் ஏறென்றும் பெண் வரையா என்றும் கூறப்படும். வரையாவை, “மடக்கண் வரையாஎன்பர்.


(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 57) - யானை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 57) - யானை

யானை

     யானையைப் பற்றிய செய்திகள் பல இந்நூலுள் வந்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் வலியோடு உலவும் யானையையும் பாலை நிலத்தில் உரனழிந்து வெம்மையால் துன்புறும் யானையையும் பற்றிய நிகழ்ச்சிகளைப் புலவர்கள் புனைந்து உரைத்திருக்கின்றார்கள். சிறிய கண்களையும், ஆழ்ந்த வாயையும் மெல்லிய தலையையும் மதத்தால் நனைந்த கவுளையும் சேம்பின் இலையைப் போலத் தோற்றும் செவிகளையும் தினைக்கதிருக்கு உவமை கூறப்படும் துதிக்கையையும் பேயின் பல்லைப் போன்ற கால் நகங்களையும் உடைய ஆண் யானைகள் புழுதி படிந்த மேனியுடன் குண்டுக் கற்களைப் போல நிற்கின்றன. சில யானைகள் கயத்தையும் ஆற்றையும் நாடிச் செல்லுகின்றன. சில மழையில் நனைந்து இன்புறுகின்றன. ஒரு யானை ஒரு துறுகல்லிற்கு அருகில் துயில்கின்றது. அதற்கும் அத்துறு கல்லிற்கும் வேற்றுமை தோற்றாமையின் அங்கே படர்ந்த மாணைக் கொடி அக்களிற்றின் மேல் படர்கின்றது. ஒரு யானை வேங்கை மரத்தடியில் துயிலும் போது அதனுடைய மூச்சு நெடுந்தூரம் ஒலிக்கின்றது. பள்ளி யானைகள் தலைவன் உயிர்ப்பதைப் போலப் பெருமூச்சுவிடுகின்றன. தினைப் புனத்தில் சென்ற யானை கானவன் விட்ட கவணுக்கு அஞ்சி ஓடுகின்றது. இரவில் அப்புனத்தில் சென்ற மற்றொரு யானை அக் கானவன் வைத்துள்ள கொள்ளியைக் கண்டு அஞ்சி வருகையில் விண்ணில் இருந்து வீழும் நட்சத்திரத்தைக் கண்டு அதையும் கொள்ளிக் கட்டை என்று எண்ணி அஞ்சுகின்றது. பெரிய உடலை உடையதாக இருந்தும் சிறு வெள்ளரவினால் ஓர் யானை அணங்கப்படுகின்றது. புதியதாகப் பிடிக்கப்பட்ட யானை ஒன்று வலியிழந்து மயங்கி நிற்கின்றது. அதைக் கண்ட புலவர் தலைவியின்பால் மயங்கிய தலைவனுக்கு அதனை உவமை ஆக்குகின்றார். களிறு மிதித்த மலையடிவாரங்களில் நீர் உண்டாகின்றது. யானைகள் ஒன்றோடு ஒன்று பொருகின்றன; அருகில் நின்ற வேங்கை மரம் அதனால் சிதைகின்றது. புலியைத் தாக்கிப் புண்ணுறும் யானையையும், அப்புலியை வருத்தும் களிற்றையும் குறிஞ்சி நிலத்தில் காண்கின்றோம்.

  மூங்கில், கொறுக்கைச்சி, கரும்பு, தினை, யா, ஓமை முதலியவற்றை யானைகள் உண்ணுகின்றன. தான் விரும்பிய தழை உணவை உண்ட யானை மதம் பெருக ஒருசார் நிற்கின்றது.

       வருந்திய நடையையும் முழந்தாளையும் உடைய மடப்பிடி ஒன்று தன் கன்று பால் குடித்துக் கொண்டே இருப்பத் தினையை உண்டு மகிழ்கின்றது. யானைக் கன்று குறவர் பிள்ளைகளோடு பழகி வளர்கின்றது.

 பாலைநிலத்தில் தங்குவதற்கு நிழலின்மையால் வழிப்போவார் உடலை ஆறலை கள்வர் மூடிய தழைக் குவியலின் நிழலில் ஓய்ந்த யானை நிற்கின்றது. நீர் வேட்கை மிக்கு வருங்கயத்தைத் துழாவுகின்றது. மரத்தின் பட்டையை உரித்து மென்று ஒருவாறு வேட்கை தணிகின்றது. வேறொரு யானை உலர்ந்த மரத்தைப் பிளக்க மாட்டாமல் கையை மடித்து வருந்துகின்றது.

   யானை தன் இனத்தைப் பாதுகாத்து உணவூட்டும் இயல்பினது. பிடிகளும் கன்றுகளும் முதிய யானைகளும் அடங்கிய யானைக் கூட்டத்திற்குத் தலைமையுடையதாக ஓர் யானை செல்லும். அதனை யூதநாதன் என்பர். ஏந்தல் என்று இந்நூல் கூறுகின்றது. யாமரத்தைக் குத்தி அதன் பட்டையால் தன் இனத்தின் பசியைத் தீர்க்கும் யானையை இதில் காணலாம்.

    களிறும் பெண் யானையும் ஒன்றனோடு ஒன்று இணைந்து அன்பு பூண்டு ஒழுகுகின்றன. குறிஞ்சி நிலத்துக் களிறு தன் மடப் பிடியைத் தழுவிக் குன்றகச் சிறுகுடியில் செல்கின்றது. மாலைக் காலத்தில் அப்பிடியோடு மலைமுழைஞ்சுகளில் புகுகின்றது. புலியினின்றும் பிடியைப் பாதுகாக்கின்றது. பாலை நிலத்துக் களிறோ யாமரப் பட்டையை உரித்துத் தன் பிடியின் பசியைக் களைகின்றது. வாழையால் மதனழிந்து கிடக்கும் களிற்றைப் பிடி தன் கையால் தடவி உபசரிக்கின்றது. இக் காட்சிகளில் அக் களிற்றுக்கும் பிடிக்கும் இடையே உள்ள அன்பு விளங்குகின்றது.

         பழக்கப்பட்ட யானைகளைப் பாகர்கள் கழுவுதலும், நீர்த் துறைகளில் உள்ள மருத மரத்தில் பிணித்தலும், போரிடைப் படையாகக் கொண்டு செல்லுதலும், வீரர்கள் அதனைக் கொன்று தாமும் படுதலுமாகிய செய்திகள் இதில் வந்துள்ளன.

          பெண்டிர் பிடியின்மேல் ஊர்தல் வழக்கமாதலின் தம்மைப் பாடி வரும் விறலியர்க்குப் பெண் யானைகளை உபகாரிகள் பரிசிலாக அளிக்கின்றனர்.

    யானைக் கொம்பு விலை உயர்ந்தது. அதனால் தேர் இயற்றப்படும். அக் கொம்பை விற்று அதன் விலையால் உணவு பெறுதல் குறிஞ்சி நிலத்து வாழ்வார் வழக்கம்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 56) - முதலை

                              குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 56) - முதலை


முதலை

      இதன் கால்கள் வளைந்தவை. இதன் ஆணை ஏற்றை என்றல் மரபு. இதற்கு அஞ்சி இஃதுள்ள வழியில் யாரும் செல்லார். முதலை வாழும் துறை ஒன்றை, “கொடுங்கான் முதலைக் கோள்வலேற்றை, வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறைஎன்று ஒரு புலவர் கூறுகின்றார்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 55) - மீன்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 55) - மீன்


மீன்

    மீன்களில் பலவகை உள. அயிரை, ஆரல், இறா, கயல், கெண்டை, சுறா, வாளை என்பன இந்நூலில் வந்துள்ளன. மீனைத் தூண்டில் எறிந்தும் வலை வீசியும் பிடிப்பர். நெய்தல் நில மாக்கள் படகில் ஏறிக் கடலிடைச் சென்று எறியுளியை வீசி மீன் பிடிப்பர். பாணர் மீனைப் பிடித்து மண்டையென்னும் பாத்திரத்தில் பெய்து வைப்பர். சில சமயங்களில் நீரில் மீனைக் கருதி அமைக்கப்பட்ட வலையில் நீர் நாய் முதலியவை படுவதுமுண்டு. கடலில் கொண்ட மீன் பரதவரால் மணல் முன்றிலில் உலர்த்தப்படும். கடல் மீனை நாரையும் கழிமீனைக் காக்கையும் உண்ணும்.

   அயிரை மீனையும் ஆரல் மீனையும் நாரை உண்ணும். அயிரை பொய்கையிலும் காணப்படும். ஆரல் மீனின் முட்டை மிகவும் சிறியது. அது ஞாழற் பூவைப் போலத் தோற்றுவது.

    இறா மீனை இறவெனவும் மொழிவர்; இது வளைந்த காலையும் வளைந்த உடலையும் உடையது; கழிகளில் காணப்படும். அன்றிலின் வளைந்த வாய்க்கு இதனை உவமையாகப் பகர்வர்.

   ஒன்றை ஒன்று பொரும் இணைக்கயலை மகளிர் கண்களுக்கு ஒப்பாக இயம்புவர். கெண்டை என்னும் மீன் பிரப்பம்பழத்தை உண்ணும்; பொய்கையில் வாழும்; நாரைக்கு உணவாகும்.

      சுறா என்பது கடலில் வாழ்வது. இது நீண்ட கொம்பை உடையது. பரதவர் இதனை வலையால் பிடிக்க இயலாமையால் ஒருவகை எறியுளியை எறிந்து குத்திக் கொல்வர். இது மிக்க வலியுடையதாதலின் வயச்சுறா எனக் குறிக்கப்படும். கொம்பை உடையதாதலின் கோட்டு மீன் என்றும் வழங்கப்படும். வலைஞர் இதனால் எறியப்பட்டுப் புண்ணை அடைதலும் உண்டு.

    வாளை என்னும் மீன் பொய்கைகளிலும் பிற சிறிய நீர்நிலைகளிலும் காணப்படும். இது மாம்பழத்தை உண்ணும்; நீர் நாய்க்கு உணவாகும். இதன் பெண்ணை நாகென்பது மரபு.


(தொடரும்)

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...