செவ்வாய், 27 மார்ச், 2012

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 90

திணை இலக்கியம்

81.       குறுந்தொகையை மேற்கோளாக எடுத்தாண்ட பழைய உரையாசிரியர்கள் எத்தனை பேர்?
29 என்பது உ.வே.சாமிநாதையர் கருத்து.

82.       பழைய உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை?
235.

83.       குறுந்தொகையில் மிகுதியான பாடவேறுபாடுகளைக்காட்டிய உரைகாரர்யார்?
ரா. இராகவையங்கார் (2960 பாடவேறுபாடுகள்).

84.       குறுந்தொகைப் பாடல்களை மிகுதியான முறை மேற்கோள் காட்டிய பழைய உரைகாரர்யார்?
நச்சினார்க்கினியர் (208 இடங்கள்).

85.       பழைய உரைகாரர்களால் மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பாடல் எது?
14 உரைகாரர்களால் 16 முறை எடுத்துக்காட்டப்பட்ட பாடல் குறுந்தொகையின் 2 ஆம் பாடல்.

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 89

திணை இலக்கியம்

76.       குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களில் மிக அதிகமான பாடல்களைப் பாடிய புலவர் யார்?
கபிலர் (28 பாடல்கள்).

77.       குறுந்தொகைப் பாடல்களுக்கு முதன்முதலில் திணை வகுத்து, முதல் உரையும் முதல் பதிப்பும் செய்தவர் யார்?
திருக்கண்ணபுரத்தலத்துச் சௌரிப் பெருமாள் அரங்கன் (1915ஆம் ஆண்டு).

78.       குறுந்தொகைப் பாடல்களின் அடியளவு என்ன?
4 அடிமுதல் 8 அடிவரை. (307,309 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளைக் கொண்டுள்ளன).

79.       குறுந்தெகைக்குப் பழங்காலத்தில் உரை எழுதியோர் யார்?
பேராசிரியர் (380 பாடல்கள்), நச்சினார்க்கினியர் (20 பாடல்கள்). இவ்வுரைகள் கிடைக்கவில்லை.

80.      குறுந்தொகைப் பாடல்களுள் யாருடைய கூற்றாக அமைந்த பாடல்கள் மிகுதியானவை?
தலைவி கூற்று (180 பாடல்கள்).

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 88

திணை இலக்கியம்

71.  தன் குடும்பம் வறுமைப்பட்டதற்காகத் தந்தையின் பொருளைக் கேளாது ஒருநேர உணவினைக் குறைத்து வாழ்ந்த மானமிகு மங்கையைப் பாடிய நற்றிணைப் புலவர் யார்?
போதனார் (நற். 110).

72.       குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
பூரிக்கோ (சுவடிகளில் தொகை முடித்தான் என்றுள்ளது. எனவே, தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் பூரிக்கோவே ஆகலாம்).

73.       குறுந்தொகை பாடிய புலவர்களின் தொகை என்ன?
205.

74.   ஆசிரியர் பெயர்அறியப்படாத குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை?
10.

75.       பாடல்தொடரால் பெயர்பெற்ற குறுந்தொகைப் புலவர்களின் எண்ணிக்கை?
18.

புதன், 21 மார்ச், 2012

புதுவை உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி பட்டிமன்ற நிகழ்ச்சி 20.03.2012

    புதுச்சேரியில் கல்வியியல் கல்லூரிகள் பல உள்ளன. அவற்றுள் தனித்தன்மை சான்ற கல்லூரியாகத் திகழ்வது திருக்கனூரில் இயங்கிவரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி ஆகும். அக்கல்லூரியின் தனித்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்வது நேற்று (20.03.2012) நடைபெற்ற நிகழ்ச்சியாகும். பொதுவாக ஒருவருடைய மணிவிழா நிகழ்ச்சியை ஒரு மண்டபத்தில் வைத்து உறவினர்களை அழைத்து மகிழ்வதே நாம் அன்றாடம் கண்டுவரும் நிகழ்ச்சியாகும். ஆனால் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திருமிகு இலட்சுமணன் அவர்கள் தன்னுடைய மணிவிழாவை ஒரு இலக்கிய நிகழ்ச்சியாகவும், இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியாகவும் அமைத்து, கல்லூரியின் இலக்கிய மன்றத்தில் அதனை நடத்திக் காட்டினார். 

     மாணவர்கள் இளம்வயதிலேயே மதுவின் கொடுமையையும், வண்முறையால் விளையும் தீமைகளை அறிந்து விழிப்புணர்வடையும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது மதுவா?, வன்முறையா? என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், கட்டுரைப்போட்டியும் அவ்விழாவில் நடத்தப்பட்டு,வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

   கல்லூரி மாணவர்களுக்கு அதே தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்களும் விழிப்புணர்வுக் கருத்துக்கள் சென்றடையும் வகையில் தம் மணிவிழாவை விழிப்புணர்வு நிகழ்வாகக் கொண்டாடினார். நிகழ்ச்சியின் காட்சிகள் இவை:

 வரவேற்புரையாற்றுகின்றார் தமிழ்த்துறைப் பேராசிரியர் திருஞானசம்பந்தம் அவர்கள்.
 பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்ற மாணவி

 மணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
 மணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
மணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்  
மணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல் . 
 உஷா இலட்சுமணன் கல்லூரி மாணவர்கள் பேச்சாளராகப் பங்கேற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் பேசுகின்றார் முனைவர் ஆ.மணி.
 தமது பள்ளிக் கல்வி ஆசிரியருடன் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் அவர்கள்.
 பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல்.
பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி ஒருவருக்குப் புத்தகப் பரிசு வழங்குகின்றார் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள். 
பட்டிமன்ற நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்ற முனைவர் ஆ.மணி அவர்களுக்கு ஆடை அணிவிக்கின்றார் கல்லூரித் தாளாளர் அவர்கள்.
உடன் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள். 

பட்டிமன்ற நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்ற முனைவர் ஆ.மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகின்றார் கல்லூரித் தாளாளர் அவர்கள். உடன் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள்.
 அரங்கப் பார்வையாளர்கள்
 அரங்கப் பார்வையாளர்கள்

புதன், 14 மார்ச், 2012

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனச் செய்யுளியல் கருத்தரங்கு 11.03.2012

    புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் தமிழ்க் கவிதையியலும் சங்க இலக்கியமும் (செய்யுளியல்) என்ற தலைப்பில் மூன்றுநாள் (09.03.12 முதல் 11.03.12 வரை) கருத்தரங்கு சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடைபெற்றது. பொதுவாகப் பாடத்திட்டம் வரையறுக்கும்போதே முந்தைய தலைமுறையினர் தொல்காப்பியப் பொருளதிகாரம் (செய்யுளியல் நீங்கலாக) என்று பாடம் வைத்தே செய்யுளியலை படிக்கவிடாமல் செய்து விட்டனர்.  இந்தச் சூழலில் முனைவர் இரா. சம்பத் அவர்கள் செய்யுளியல் பற்றிய கருத்தரங்கை நடத்தியது தமிழர் தம் செய்யுள் மரபை இளைய தலைமுறையினர் அறிவதற்குப் பெரிதும் பயனுடையதாகும். 

  இக்காலத்தில் பலரும் நிலவுக்குச் சென்று வந்தாலும் ஆம்ஸ்ட்ராங் பெயரே இன்னும் மனத்தில் நிற்பதுபோலச் செய்யுளியல் என்றாலே இக்கருத்தரங்கே பலரின் நினைவில் வந்து நிற்கும். இத்தகைய அரிய கருத்தரங்கை நடத்திய  புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன இயக்குநர் முனைவர் பக்த வத்சல பாரதி அவர்களுக்கும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. சம்பத் அவர்களுக்கும்,  முனைவர் சிலம்பு. செல்வராசு அவர்களுக்கும் நிறுவனப் பேராசிரியர்களுக்கும் தமிழுலகம் நன்றிக் கடன்பட்டுள்ளது. 

   கருத்தரங்கின் மூன்றாம் நாள் முற்பகலில் முனைவர் மீனாட்சி முருகரத்தினம் அவர்கள் பொருள் புலப்பாட்டு உறுப்புக்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் நடந்த அமர்வில் முனைவர் ஆ.மணி, முனைவர் அ.செல்வராசு உள்ளிட்ட பேராசிரியர்கள் உரையாற்றினர். கருத்தரங்கக் காட்சிகள் இவை:  முனைவர் மீனாட்சி முருகரத்தினம் அவர்களின் பொருள் புலப்பாட்டு உறுப்புக்கள் என்ற தலைப்பிலான சிறப்புரை
 முனைவர் சிலம்பு செல்வராசு அவர்களின் நிகழ்ச்சி இணைப்புரை
 
 முனைவர் ஆ.மணி. உரைப்பொருண்மை : தொல்காப்பிய வனப்புக் கோட்பாடு - அழகு
 முனைவர் சியாமளா. உரைப்பொருண்மை :  மெய்ப்பாடு.

 முனைவர் கலைமகள். உரைப்பொருண்மை :  மெய்ப்பாடு.
 முனைவர் பா.இளமாறன். உரைப்பொருண்மை : மாட்டு.
 முனைவர் மம்முது. உரைப்பொருண்மை :  பா, ஒசை.
முனைவர் புவனேஸ்வரி. உரைப்பொருண்மை :  கலிப்பா. 
முனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்கள் உள்ளிட்ட அவையினர். 
 
பங்கேற்ற ஆய்வாளர்கள்
பங்கேற்ற ஆய்வாளர்கள் 

செவ்வாய், 6 மார்ச், 2012

பாரதிதாசன் பல்கலைக் கழகச் செவ்விலக்கியக் கருத்தரங்கு 03.03.2012

       திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தில் செவ்விலக்கிய நூல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்னும் பெயரிய மூன்றுநாள் கருத்தரங்கு (01.03.2012 முதல் 03.03.2012 வரை) நடைபெற்றது. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். ஆற்றலும் பண்பும் மிகுந்த அவர்கள் நடத்தும் கருத்தரங்குகள் தனித்தன்மை சான்றவை. அவர்களின் விருந்தோம்பல் பண்பும் திட்டமிடலும் நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை.

   முனைவர் பெ.மாதையன் ஐயா அவர்கள் தலைமையிலும், ஆய்வுரையோடும் நடைபெற்ற ஆறாம் அமர்வில் முனைவர் தி. தாமரைச்செல்வி அவர்கள் நாலடியாரில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், முனைவர் ஆ. மணி அவர்கள் குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், முனைவர் அ. சதிஷ் அவர்கள் ஐங்குறுநூற்றில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், திரு. அ. புவியரசு அவர்கள் முதுமொழிக் காஞ்சியில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். கருத்தரங்கக் காட்சிகள் இதோ.:

 
 முனைவர் பெ.மாதையன் ஐயா அவர்கள் : தலைமையுரையும் ஆய்வுரையும். உரைப்பொருண்மை: எட்டுத்தொகை புற நூல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள். 

 முனைவர் தி. தாமரைச்செல்வி அவர்களின் உரைப்பொழிவு : நாலடியாரில் பகுத்தறிவுச் சிந்தனைகள்

முனைவர் ஆ. மணி அவர்களின் உரைப்பொழிவு : குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
 முனைவர் அ. சதிஷ் அவர்களின் உரைப்பொழிவு : ஐங்குறுநூற்றில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
திரு. அ. புவியரசு அவர்களின் உரைப்பொழிவு : முதுமொழிக் காஞ்சியில் பகுத்தறிவுச் சிந்தனைகள்

வெள்ளி, 2 மார்ச், 2012

மயிலம் தமிழ்க்கல்லூரிச் சிலப்பதிகாரப் பயிலரங்கு 01.03.2012

        மயிலம் தமிழ், கலை,அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் கடந்த 27.02.2012 முதல் 07.03.2012 வரை பத்துநாள் பயிலரங்கு ஒன்றைச் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிதிநல்கையில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் ஐயா அவர்கள் நடத்தி வருகின்றார். ஆர்வமும் உழைப்பும் உடையோரைக் கைதூக்கிவிட்டுப் பாராட்டும் பண்பும், இனிமையான பேச்சும் கொண்ட அவர்கள் நடத்துகின்ற பயிலரங்கில் இரண்டாம் ஆண்டாக இவ்வாண்டும் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.01.03.2012 முற்பகல் அமர்வில் சிலப்பதிகார மொழி ஆளுமை என்ற பொருண்மையில் முனைவர் செ.வை.சண்முகம் ஐயா அவர்களும்,  சிலப்பதிகார விழுமியங்கள் என்ற தலைப்பில் ஆ.மணியும் உரையாற்றினர். பயிலரங்கக் காட்சிகள் இவை:


முனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்களின் உரை: சிலப்பதிகார மொழி ஆளுமை.
 முனைவர் ஆ.மணி அவர்களின் உரை: சிலப்பதிகார விழுமியங்கள் 

முன்னிருக்கையில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்கள்.
பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்