வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

முனைவர் ஆ. மணி - அறிமுகம்

முனைவர் ஆ. மணி - அறிமுகம் 

முனைவர் ஆ. மணி, தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழியல் ஆய்வாளர் ஆவார். தமிழகத்தின் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் கெங்குவார்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் கா. ஆறுமுகம், ஆ. தேவகி ஆகியோராவர். 

கல்வி வளமை

தொடக்கக் கல்வி : கெங்குவார்பட்டி அரசினர் நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை.

உயர்நிலைக் கல்வி : கெங்குவார்பட்டிக்கு அருகில் உள்ள கெ. கல்லுப்பட்டி அரசு மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைக் கல்வி.

மேனிலைக் கல்வி : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அரசினர் மேனிலைப் பள்ளியில் மேனிலைக் கல்வி.

இளநிலைப் பட்டக் கல்வி : திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் இளநிலை விலங்கியலில் பட்டக் கல்வி.

முதிநிலைப் பட்டக் கல்வி : மதுரை யாதவர் இருபாலர் கல்லூரியில் முதுகலைத் தமிழ்ப் பட்டக் கல்வி கற்றார். அத்தோடு அக்கல்லூரியில் பகுதிநேரமாக நடத்தப்பட்ட பகுத்தறிவுச் சிந்தனை சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றார்.

முனைவர்ப் பட்ட ஆய்வு : மதுரை யாதவர் இருபாலர் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் முனைவர் இ.கி.இராமசாமி அவர்களின் வழிகாட்டலில் குறுந்தொகை உரைநெறிகள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்ப் பட்டம் பெற்றார்.

பணித்தகுதி : பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ( U.G.C. ) நடத்திய விரிவுரையாளர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (1998 திசம்பர் ).

இதழியல் பணிகள்

 திருச்சி, ஜமால் முகமது கல்லூரி விடுதி மாணவர் கையெழுத்து இதழாகிய “ குயிலோசை ”யின் பொறுப்பாசிரியர் (1995 - 1996).ü

 மதுரை யாதவர் கல்லூரி ஆண்டு மலர்க் குழுவில் மாணவ உறுப்பினர் (1996 - 1997 ).ü

 மதுரை யாதவர் கல்லூரியின் மாணவர் கையெழுத்து இதழாகிய “ இளந்தென்றல் ” இன் முதற்பொறுப்பாசிரியர் (1997 - 1998 ).ü

 மதுரை தினமணி நாளிதழில் செய்தி சேகரித்தல்; செய்தி எழுதுதல் பற்றிய 10 நாள் (23.03.1998 – 06.04.1998) களப்பணிப் பயிற்சி பெற்றிருத்தல்.ü

பரிசுகள்

இந்தியக் குடியரசுத் தலைவரிடம் “இளம் அறிஞர் விருது (201 – 11)

தமிழ்நாடு அரசின் “இளம் தமிழ் ஆய்வாளர்” விருது (2018)

எம்.ஏ. தமிழ் இலக்கணத்தில் முதல் மதிப்பெண் பரிசு (1996 - 1997).

எம்.ஏ. தமிழ் தேர்வில் முதல் மதிப்பெண் (1996 – 1997).

நன்னடத்தைப் பரிசு (1996 - 1997).

மாண்கவிஞர் பரிசு (1996 – 1997).

பகுத்தறிவுச் சிந்தனைச் சான்றிதழ்த் தேர்வில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் (வெள்ளிப் பதக்கம்) (1996 – 1997).

மதுரை பல்கலைக் கழக அளவிலான அனைத்துக் கல்லூரி மாணவர் பேச்சுப் போட்டி : மூன்றாம் பரிசு (1996 – 1997).

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம், திருநெல்வேலி தமிழக அளவில் நடைபெற்ற இரா.பி. சேதுப்பிள்ளை நூற்றாண்டு விழாக் கட்டுரைப் போட்டி : மூன்றாம் பரிசு (1997).

எம்.ஏ. (தமிழ்) தேர்வில் உயர்மதிப்பெண் (1997 - 1998).

மதுரை பல்கலைக் கழக அளவிலான அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டி : மூன்றாம் பரிசு (1999).

இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை தொல்காப்பியர் விருது (2011).

நூல் வெளியீடுகள்

1.     திருக்குறள் முதல் பதிப்பு (திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பதிப்பு 1812)  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.      நூலாசிரியர். பக். 112. ஐஎஸ்பிஎன்:  978-93-5416-262-6.

2.     திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்கள்    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.      நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:  978-93-5416-871-0.

3.     திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி - 2 தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,

 2020. ஆய்வும் பதிப்பும். பக். 500. ஐஎஸ்பிஎன்:  978-93-5406-819-5.

4.     திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி - 1 தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.      ஆய்வும் பதிப்பும். பக். 400. ஐஎஸ்பிஎன்:  978-93-5406-896-6.

5.     திருக்குறள் துறு பதிப்பு – தொகுதி – 1   தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2020.      ஆய்வும் பதிப்பும். பக். 352. ஐஎஸ்பிஎன்:  978-93-5408-928-2.

6.     திருமுருகாற்றுப்படை – சரவணப் பெருமாள் பதவுரையும் உரைப்பாங்கும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. ஆய்வும் பதிப்பும். பக். 182. ஐஎஸ்பிஎன்: 978-93-5407-649-7.

7.     திருமுருகாற்றுப்படை உரைத்தொகை (பழையவுரைகள் மட்டும்)   தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. ஆய்வும் பதிப்பும். பக். 256. ஐஎஸ்பிஎன்: 978-93-5406-668- 9.

8.     திருமுருகாற்றுப்படை - புத்துரைக்கொத்து     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.      ஆய்வும் பதிப்பும். பக். 400. ஐஎஸ்பிஎன்: 978-93-5391-643- 5.

9.     தமிழர் உணவுகள்  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.      நூலாசிரியர். பக். 64. ஐஎஸ்பிஎன்: 978-93-5361-062-3.

10.    தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பெறாஅர்  தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2019. நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்: 978-93-5396-736-9.

11.    தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - அழகு     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.      நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்: 978-93-5396-512-9.

12.    தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - நோக்கு    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2019.      நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்: 978-93-5396-301-9.

13.    தொல்காப்பிய இளம்பூரணர் உரை - மேற்கோள் விளக்கம் (இலக்கியம்)   தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2019.     நூலாசிரியர். ஐஎஸ்பிஎன்: 978-93-5391-931-3.

14.    திருக்குறள் எல்லீசர் மொழிபெயர்ப்பு    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2018.      நூலாசிரியர். பக். 192. ஐஎஸ்பிஎன்:978-93-5321-424- 1.

15.    திருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்)      தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018.     ஆய்வும் பதிப்பும். பக். 304. ஐஎஸ்பிஎன்:978-93-5311-769- 3.

16.    பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு    லாவண்யா பதிப்பகம், சென்னை,  2018.      பதிப்பு. பக். 572.ஐஎஸ்பிஎன்:978–93-85643-53-4.

17.    குறுந்தொகைத் திறனுரைகள் (விரிவாக்கிய மூன்றாம் பதிப்பு)      தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018.     நூலாசிரியர். பக். 160. ஐஎஸ்பிஎன்: 978-93-5311-318-6.

18.    பகுத்தறிவுப் படைப்பாளர்கள் (பேரா. இ.கி. இராமசாமி பவள விழாக் கருத்தரங்கக் கட்டுரைகள்)      லாவண்யா பதிப்பகம், சென்னை 2018.  ஆய்வும் பதிப்பும்.  பக். 304.ஐஎஸ்பிஎன்:978–93-85643-45-9.

19.    பேராசிரியர் இ.கி. இராமசாமி பவள விழா மலர்     லாவண்யா பதிப்பகம், சென்னை  2018.      ஆய்வும் பதிப்பும். பக். 252.ஐஎஸ்பிஎன்:978–93-85643-31-0.

20.    திருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும்      தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018.     ஆய்வும் பதிப்பும்.  பக். 160. ஐஎஸ்பிஎன்: 978-93-5311-436-7.

21.    குறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும்     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018. நூலாசிரியர். பக். 576. ஐஎஸ்பிஎன்: 978-93-5311-212-7.

22.    பதிப்பாசிரியர் தெ.பொ.மீ.  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.    --

23.    பழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள்   தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.      நூலாசிரியர். பக். 80. ஐஎஸ்பிஎன்:978–93-5288–860–3.

24.    சிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.      நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்:978–93-5288–801–6.

25.    நெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும்     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.      நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93-5288–301–1.

26.    அறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல்     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.  நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்:978-93-5288-510-7.

27.    சிவகங்கைச் சரித்திரக்கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி   காவ்யா பதிப்பகம், சென்னை2017. நூலாசிரியர். பக். 768,  ஐஎஸ்பிஎன்:978–93–86576–22–4.

28.    உரை இலக்கிய ஆய்வுகள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2017.      நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:  978 - 81 - 910738 - 8 - 9.

29.    தமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும்   லாவண்யா பதிப்பகம், சென்னை,  2016.      நூலாசிரியர்.பக். 640.ஐஎஸ்பிஎன்:978–93–85643–24–0.

30.    குறுந்தொகைப் பயிரியல் கல்வி லாவண்யா பதிப்பகம், சென்னை,  2015. நூலாசிரியர். பக். 96.ஐஎஸ்பிஎன்:978–93–85643–02–5.

31.    திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்? லாவண்யா பதிப்பகம், சென்னை,  2015. நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93–85643–01–7.

32.    குறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள்     லாவண்யா பதிப்பகம், சென்னை,  2015.      நூலாசிரியர். பக். 96.ஐஎஸ்பிஎன்:978–93–85643–01–5.

33.    செவ்வியல் ஆய்வுகள்    லாவண்யா பதிப்பகம், சென்னை,  2014. நூலாசிரியர். பக். 256.ஐஎஸ்பிஎன்:978–93–85643–00–2.

34.    செவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள்     லாவண்யா பதிப்பகம், சென்னை,  2014.      நூலாசிரியர். பக். 176. ஐஎஸ்பிஎன்:978–93–85643–06–9.

35.    தமிழ்ப் பதிப்பியல் நெறிகள்     லாவண்யா பதிப்பகம், சென்னை,  2014. நூலாசிரியர். பக். 160.ஐஎஸ்பிஎன்:978–93–85643–09–1.

36.    தொல்காப்பியத் திறனுரைகள்    லாவண்யா பதிப்பகம், சென்னை,  2014 .      நூலாசிரியர். பக். 144.ஐஎஸ்பிஎன்:978–93–85643–04–8.

37.    செம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்   லாவண்யா பதிப்பகம், சென்னை,2014 சூலை. ஆய்வும் பதிப்பும்.  பக். 256.ஐஎஸ்பிஎன்: 978–81-909392-4-6.

38.    மலைபடுகடாம் – பதிப்பு வரலாறு (1889 – 2013) காவ்யா பதிப்பகம், சென்னை, 2014 நவம்பர்.      நூலாசிரியர். பக். 368.ஐஎஸ்பிஎன்:978–93–836324–0–4.

39.    பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013 சனவரி.     ஆய்வும் பதிப்பும். பக். 312.ஐஎஸ்பிஎன்: 978-81-910738-6-7.

40.    பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013 சனவரி.     ஆய்வும் பதிப்பும். பக். 440.ஐஎஸ்பிஎன்: 978-81-910738-5-0.

41.    ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள்    தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011 மே.      நூலாசிரியர். பக். 176. ஐஎஸ்பிஎன்:  978 - 81 - 910738 - 3 - 6.

42.    குறுந்தொகை உரைநெறிகள்     தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2011 நவம்பர்.      நூலாசிரியர். பக். 304,ஐஎஸ்பிஎன்: 978-81-910738-1-2.

43.    செம்மொழித்தமிழ் ஆய்வுரைகள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி,  2010 சூன்.  நூலாசிரியர். பக். 144. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-0-5.

44.    காலந்தோறும் தமிழ் இலக்கியம் செம்மொழிக் கழகம், சென்னை, 2009 திசம்பர். நூலாசிரியர். பக். 176, ஐஎஸ்பிஎன்: 978-81-909171-0-0.

45.    குறுந்தொகைத் திறனுரைகள்    தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005 மார்ச்.      நூலாசிரியர். பக். 112.

 

ஆய்வுத் திட்டப் பணிகள்

பல்கலைக் கழக நிதி நல்கைக்குழு நிதிநல்கையுடன் “தொல்காப்பிய உரைமேற்கோள்கள் – தொகுப்பும் பகுப்பும்” (2014 – 2016) என்னும் ஆய்வுத் திட்டப்பணியைச் செய்து முடித்துள்ளார்.

சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் “ பழந்தமிழ் இலக்கண இலக்கிய உரைகளில் குறுந்தொகை” என்னும் பொருண்மையில் குறுகிய கால ஆய்வுதிட்டப்பணி (2011 – 2012)  செய்து முடித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய பயிலரங்கு, கருத்தரங்குகள்

• செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் தமிச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் தொடர்பான பத்து நாள் பயிலரங்கு ஒன்றை (12.12.12 – 21.12.12) புதுச்சேரி உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் நிகழ்த்தியுள்ளார்.

• பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு நிதியுடன் புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும் புதுச்சேரி, பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையும் நடத்திய பல்துறைநோக்கில் தொல்காப்பியம் என்ற இருநாள் (31.01.13, 01.02.13) தேசியக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர்.


• செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் பழந்தமிழ் இலக்கண இலக்கிய உரைகளில் குறுந்தொகை என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு (25.02.13) ஒன்றை நடத்தியுள்ளார்.

ஆய்வுரை வெளியீடுகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நிகழ்த்தபடுகின்ற பயிலரங்குகள், கருத்தரங்குகள், பிற கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், ஆய்விதழ்கள் என்றினைய நிலைகளில் 2020 வரை 190 ஆய்வுரைகளை வெளியிட்டுள்ளார்.

இவருடைய மேற்பார்வையில் இவருடைய பிறந்த ஊரான கெங்குவார்பட்டியிலும், புதுச்சேரியிலும் தமிழன்னை ஆய்வக நூலகம் இயங்கி வருகின்றது.

இந்திய அரசின் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு 23.05.05 முதல் புதுச்சேரி அரசுக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

 


முனைவர் ஆ. மணி நூல்கள் - கிடைக்கும் இணைய தளங்கள்

 முனைவர் ஆ. மணி நூல்கள் - கிடைக்கும் இணைய தளங்கள்

முனைவர் ஆ. மணி எழுதிய நூல்கள் பல இணைய தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் சில:

அமேசான்:

https://www.amazon.in/Books-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-Dr-A/s?rh=n%3A976389031%2Cp_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86.+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%28Dr.+A.+Mani%29

காமன்போல்க்ஸ்:

https://www.commonfolks.in/books/dr-a-mani

மெரினா புக்ஸ்:

https://marinabooks.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE.%20%E0%AE%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF?authorid=4794

உடுமலை புக்ஸ்:

https://www.udumalai.com/sivagangai-sarithrakkumme.htm


சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...