தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மார்ச், 2025

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத் திருவிழா (21.03.2025)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத் திருவிழா (21.03.2025)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும், கல்லூரித் தர உறுதியளிப்புக்குழுவும் இணைந்து  இன்று (21.03.2025) வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் தமிழ் மரபு உணவுத் திருவிழா - 2025 ஐக் கல்லூரி வளாகத்தில் நடத்தின. 

புதுவை மாநிலத்தில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகவும், முதல் பெண்கள் கல்லூரியாகவும் விளங்கும் பாரதிதாசன் கல்லூரித் தமிழ்த்துறையின் மூன்றாமாண்டு பயிலும் மாணவியர் செம்மொழி இலக்கியங்களை இரு பருவங்களுக்குப் பாடங்களாகப் படிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களாகிய சங்கத் தமிழ் இலக்கியங்களில் பழந்தமிழர்களின் வாழ்வியலும் அரசியலும் சமூகவியலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள பண்டைத் தமிழர்களின் உணவுகளையும், உணவு தயாரிக்கும் முறைகளையும் படிக்கும் மாணவியருக்கும், பிறருக்கும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் தெளிவும் ஏற்படும் வகையில் தமிழ்த்துறை சார்பாகக் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் தமிழ் மரபு உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.   

இன்று (21.03.25) காலை நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் கலந்துகொண்டு, தமிழ் மரபு உணவுக் கண்காட்சியைத் தொடக்கி வைத்துத் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் பேசும்போது, மாறிவரும் உணவுப் பண்பாட்டுச் சூழலில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்றியமையாதவை. நம்முடைய மரபும் உணவும், உணவின் பின் நிற்கின்ற அறிவியலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்வதென்றால், சிறு தானிய உனவுகளை நாம் உட்கொள்ளும்போது, அவை குளுக்கோஸ் என்ற சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் உடலில் சர்க்கரையின் அளவு திடீரெனக் அதிகரிப்பது தடுக்கப்படும். செரிமானமும் மெதுவாக நடைபெறும் என்று கூறினார்.  

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி உணவுத் திருவிழாவின் நோக்கங்களை எடுத்துக் கூறினார். கல்லூரித் தர உறுதியளிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.எஸ். சுரேஷ் கருத்துரை வழங்கினார்.

கவிஞரும், தன்முன்னேற்ற ஊக்கப் பேச்சாளரும், சாதனைப் பெண்ணாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மரபு உணவுகளின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியவருமாகிய திருமதி. சுஜாதா சரவணன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, மரபு உணவின் சிறப்புக்களை எடுத்துக் கூறியதோடு, இவ்வகை நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக, தமிழ் மரபு உணவுத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி பு. அருள்மொழி நன்றியுரை கூறினார். இளங்கலைத் தமிழ் முதலாண்டு மாணவி .விக்னேஸ்வரி  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஊன்துவை அடிசில் (பிரியாணி), கருப்பு இட்லி, புதுச்சேரி மீன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பழந்தமிழ் உணவு வகைகள் கண்காட்சியில் மாணவிகளால் வைக்கப்பட்டிருந்தனஇந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பஅமிர்தவள்ளி, முனைவர் ஆ. கோமதி, முனைவர் இரா. குமுதவள்ளி, முனைவர் மா.தயாநிதி உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். பல்துறைகளைச் சார்ந்த மாணவிகள் திரளாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

  

கல்லூரி முதல்வர் அறையில்

கல்லூரி முதல்வர் அறையில்
கல்லூரி முதல்வர் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்

பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
வரவேற்புரை: முனைவர் ஆ. மணி
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினர் திருமதி. சுஜாதா சரவணன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
அரங்கச் சுவைஞர்
முதலாண்டு மாணவி ப. விக்னேஸ்வரி அவர்களின் நிகழ்ச்சித் தொகுப்புரை

கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்களின் தலைமையுரை

தமிழ்த்துறைத் தலைவர் சொ. சேதுபதி அவர்களின் நோக்கவுரை

சிறப்பு விருந்தினர் கவிஞர், தன்முன்னேற்றப் பேச்சாளர் திருமதி. சுஜாதா சரவணன் அவர்களின் வாழ்த்துரை
இரண்டாமாண்டு மாணவி பு. அருள்மொழியின் நன்றியுரை

கண்காட்சியில் சில உணவுப் பொருட்கள்:









செவ்வாய், 1 அக்டோபர், 2024

இனம் இதழ்க் கட்டுரை (2023 பிப்ரவரி) - சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு

 இனம் இதழ்க் கட்டுரை (2023 பிப்ரவரி) - சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு

இணைய ஆய்விதழான இனம் பிப்ரவரி 2023 இதழில் சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு என்னும் கட்டுரை வெளிவந்துள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரை இதோ.











வெள்ளி, 1 மார்ச், 2024

முனைவர் ஆ. மணி எழுதிய / பதிப்பித்த நூல்கள் (வகைமை நோக்கில்)

முனைவர் . மணி எழுதிய / பதிப்பித்த நூல்கள் (வகைமை நோக்கில்)

 

தொல்காப்பியம் (10 நூல்கள்)

1. பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 1  (2013) (பதிப்பு நூல்)

2. பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 2 (2013) (பதிப்பு நூல்)

3. தொல்காப்பியத் திறனுரைகள் (2014)

4. பதிப்பாசிரியர் தெ.பொ.மீ. (2018)

5. தொல்காப்பிய இளம்பூரணர் உரை - மேற்கோள் விளக்கம் (இலக்கியம் (2019)

6. தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - நோக்கு (2019)

7. தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - அழகு (2019)

8. தொல். இலக்கியக் கொள்கைகள் - சுட்டி ஒருவர் பெயர் (2019)

9. தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு: கூற்று (2022) ஆய்வும் பதிப்பும்

10. தொல்காப்பியம் சொல்லதிகாரம்: பேராசிரியர் உரைப்பதிப்பு, தெய்வச்சிலையார் உரைப்பதிப்பாக மாற்றம் பெற்ற வரலாறு (2023)

 

பத்துப்பாட்டு (10 நூல்கள்)

11. மலைபடுகடாம் பதிப்பு வரலாறு (2014)

12. நெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும் (2017)

13. திருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும் (2018) (ஆய்வும் பதிப்பும்)

14. திருமுருகாற்றுப்படை- புத்துரைக்கொத்து (2019) (ஆய்வும் பதிப்பும்)

15. திருமுருகாற்றுப்படை உரைத்தொகை (பழையவுரைகள்) (2020) (ஆய்வும் பதிப்பும்)

16. திருமுருகாற்றுப்படை: சரவணப்பெருமாள் பதவுரையும் உரைப்பாங்கும் (2020) (ஆய்வும் பதிப்பும்)

17. திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி-1(2020) (ஆய்வும் பதிப்பும்)

18. திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி-2 (2020) (ஆய்வும் பதிப்பும்)

19. திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்கள் (2020)

20. பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு : உரைக்கொத்து (2022) ஆய்வும் பதிப்பும்

 

குறுந்தொகை (6 நூல்கள்)

21. குறுந்தொகைத் திறனுரைகள் (2005)

22. குறுந்தொகை உரைநெறிகள் (2011)

23. குறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள் (2015)

24. குறுந்தொகைப் பயிரியல் கல்வி (2015)

25. குறுந்தொகை: அருணாசலதேசிகர் பதிப்பும் பதிப்பு நெறிகளும் (2018) (ஆய்வும் பதிப்பும்)

26. குறுந்தொகைத் திறனுரைகள் (விரி. மூன்றாம் பதிப்பு) (2018)

 

சங்க இலக்கியம் (7 நூல்கள்)

27. செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் (2010)

28. ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் (2011)

29. செவ்வியல் இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் (2014) (பதிப்பு நூல்)

30. செவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள்  (2014)

31. செவ்வியல் ஆய்வுகள் (2014)

32. தமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும் (2016)

33. அறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல் (2017)

 

திருக்குறள் (5 நூல்கள்)

34. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்? (2015)

35. திருக்குறள் பரிமேலழகரின் இலக்கணவுரையும்  இராமாநுச கவிராயரின் புத்துரையும்  துறு ஆங்கில மொழிபெயர்ப்பும்  (முதல் 24 அதிகாரம்  மட்டும்) (2018) (ஆய்வும் பதிப்பும்)

36. திருக்குறள்: எல்லீசர் மொழிபெயர்ப்பு (2018)

37. திருக்குறள் துறு பதிப்பு - தொகுதி - 1 (2020) (ஆய்வும் பதிப்பும்)

38. திருக்குறள் முதல் பதிப்பு (திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பதிப்பு 1812) (2020)

 

உரைகள் (4 நூல்கள்)

39. உரை இலக்கிய ஆய்வுகள் (2017)

40. பழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள் (2017)

41. பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் - ஓர் ஆய்வு (2018) (பதிப்பு நூல்) (நூலாசிரியர்: முனைவர் தே. பத்மாசனி)

42. பருந்துப்பார்வையில் உரை ஆய்வுகள் (அறியப்படாத அரிய தரவுகளுடன்) (2021)

 

பிற (11 நூல்கள்)

43. காலந்தோறும் தமிழ் இலக்கியம் நோக்கும் போக்கும் (2009)

44. தமிழ்ப் பதிப்பியல் நெறிகள் (2014)

45. சிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும் (2017)

46. சிவகங்கைச் சரித்திரக் கும்மி () சிவகங்கை நகர்க் கும்மி (2017) (ஆய்வும் பதிப்பும்)

47. பேராசிரியர் .கி. இராமசாமி பவளவிழாமலர் (2018)(பதிப்பு)

48. பகுத்தறிவுப் படைப்பாளர்கள் (2018) பேராசிரியர் .கி. இராமசாமி பவளவிழாக் கருத்தரங்கத் தொகுதி (பதிப்பு நூல்)

49. தமிழர் உணவுகள் (2019) (ஆய்வும் பதிப்பும்)

50. வலிமைக்கு மார்க்கம் (2022) ஆய்வும் பதிப்பும்

51. பேராசிரியர் முனைவர் சு.. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 1 படைப்பாய்வு மலர் (2023) பதிப்பு நூல்

52. பேராசிரியர் முனைவர்சு.. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 2 இலக்கிய மலர் (2023) பதிப்பு நூல்

53. பேராசிரியர் முனைவர் சு.. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 3  ஆய்வு மலர் (2023) பதிப்பு நூல்

 

 

 

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...