செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தமிழ் ஊடக வினாடி - வினா - 2014 (26.09.14)

        புதுவைத் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழ் ஊடக வினாடி - வினா - 2014 என்னும் நிகழ்ச்சி கடந்த 26.09.2014 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 02.30 மணியளவில் நடைபெற்றது. 
   இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஊடகவியல் - வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்னும் தாள் பயிற்றுவிக்கப்படுகின்றது. ஊடகம் சார்ந்த அப்பாடத்தை வெறுமனே வகுப்பறை அமைப்பில் நடத்துவதைவிட வினாடி - வினாப் போட்டி போல நடத்தினால் மாணவர்களுக்கு அது புதுமையாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் இருக்கும் என்பதால் இப்புதிய முயற்சி தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் மேற்கொள்ளப்பட்டது. பொது அறிவு வினாடி - வினாப் போட்டிகள் பலவற்றை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் தமிழ் சார்ந்த வினாடி - வினாக்களைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?. தமிழ்க்கல்வி வரலாற்றில் புதியதொரு முயற்சியாகக் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கிய வினாடி  - வினா, தமிழ் இலக்கண வினாடி - வினா ஆகிய நிகழ்ச்சிகளைத் தாமே உருவாக்கி நடத்தி வரும் வினாடி - வினா இயக்குநர் முனைவர் ஆ. மணி முதன்முறையாகத் தமிழ் ஊடக வினாடி - வினா என்னும் இந்நிகழ்வையும் உருவாக்கி நடத்தினார். 
    போட்டியில் செந்தமிழ் அணி, வண்டமிழ் அணி, மென்தமிழ் அணி, பைந்தமிழ் அணி ஆகிய நான்கு அணியினர் பங்கேற்றனர். செந்தமிழ் அணியில் திரு. மணிகண்டன், திரு. சீனுவாசன் ஆகியோரும், வண்டமிழ் அணியில் திரு. சந்திரசேகரன், திரு. ஜெர்மியா கிருபாகரன் ஆகியோரும், மென்தமிழ் அணியில் திரு. பச்சையப்பன், திரு. செல்வமணி ஆகியோரும், பைந்தமிழ் அணியில் செல்வி. யாழினி, செல்வி. சுகுணா ஆகியோரும் பங்கேற்றனர். மதிப்பீட்டாளர்களாகச் செல்வி. அனுப்பிரியா, இராஜலட்சுமி ஆகியோர் பங்காற்றினர். கணினி இயக்குநர்களாக முனைவர் ந. இராணி அவர்களும், முனைவர் நா. காயத்ரி அவர்களும் தங்கள் பங்களிப்பை செய்தனர்.
          ஐந்து சுற்றுக்களாக நடந்த அப்போட்டியில் பைந்தமிழ் அணியின் செல்வி. யாழினி, செல்வி. சுகுணா ஆகியோர் முதல் பரிசையும், மென்தமிழ் அணியின் திரு. பச்சையப்பன், திரு. செல்வமணி ஆகியோர் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
         போட்டியின் முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பிற்பகல் நான்கு மணிக்குத் தொடங்கிய அவ்விழாவுக்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி. செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். அவர்தம் தலைமையுரையில் இதுபோன்ற புதிய முயற்சிகள் வரவேற்புக்குரியன. ”சாக் அண்ட் டாக்” முறையைவிட இவ்வகைக் கற்பித்தல் முறைகள் பாராட்டுக்குரியன என்றார்.
        வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் தமிழ்த்துறையின் இப்புதுமை முயற்சிகள் பாராட்டிற்குரியன. இன்றைய உலகம் ஊடக உலகம். அதனை நினைவில் கொள்ளும் வகையில் ஊடகங்களைப் பற்றிய இந்நிகழ்வு நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது என்று கூறி, பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டினார். 
          விழாவில் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி செல்வி த.சபிதா நன்றி கூறினார். விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேரசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. விழாக்காட்சிகள் இதோ:

 பிரஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.அ.வெங்கட சுப்பராய நாயகரை வரவேற்கும் மாணவியர்
 பார்வையாளர் பகுதியில் முனைவர் நா.வஜ்ரவேலு, முனைவர் கு.ஞானகுரு, முனைவர் வீ.மணி, முனைவர் ஆ.மணி அகியோர்
 பார்வையாளர் பகுதியில் முனைவர் நாயகர், முனைவர் வீ.மணி, முனைவர் கண்ணன், முனைவர் மு. இளங்கோவன் அகியோர்
வினாடி - வினா இயக்குநர் முனைவர் ஆ.மணி

கணினி இயக்கம்: முனைவர் நா. காயத்ரி, முனைவர் ந.இராணி ஆகியோர்.
 போட்டியாளர்கள்

 போட்டியாளர்கள்
 வரவேற்புரை : முனைவர் ஆ.மணி
 தலைமையுரை : முனைவர் தி. செல்வம் (தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் கலைக்கல்லூரி) அவர்கள்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ. பிச்சைமணி அவர்களுக்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி.செல்வம் அவர்கள் சிறப்புச் செய்தல்
முனைவர் ஆ.மணி அவர்கள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி.செல்வம் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்

 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்களின் சிறப்புரை

 முதல் பரிசு : பைந்தமிழ் அணியினர் - செல்வி. யாழினி, செல்வி. சுகுணா ஆகியோருக்குக்  கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் பரிசு வழங்குதல்.
 இரண்டாம் பரிசு : மென்தமிழ் அணியினர் - திரு. பச்சையப்பன், திரு. செல்வமணி ஆகியோருக்குக்  கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் பரிசு வழங்குதல்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் திரு சந்திரசேகரன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குதல்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் திரு ஜெர்மியா கிருபாகரன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குதல்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் திரு சீனுவாசன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குதல்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் திரு மணிகண்டன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குதல்.
நன்றியுரை: செல்வி த.சபிதா அவர்கள், இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு
 அழைப்பிதழ் - 1
அழைப்பிதழ் - 2