புதன், 30 செப்டம்பர், 2015

தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் இரத்த தானம்

புதுவை தேசிய மாணவர்படைக் குழுமத்தின் சார்பாக இன்று (19.09.15) சனிக்கிழமையன்று ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இரத்த தான முகாமில் தேசிய மாணவர் படையின் தரைப்படையணி, கப்பற்படையணி, விமானப்படையணி ஆகிய முப்படைப் பிரிவுகளைச் சேர்ந்த இருபத்து நான்கு மாணவர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.
அம்முகாமில் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியின் தேசிய மாணவர் படைத் தரைப்படையைச் சேர்ந்த எம். முகிலன், இ. பிரசாந்த், எம். சீனிவாசன், வாசுதேவன் ஆகிய நான்கு மாணவர்களும் பங்கேற்று இரத்த தானம் வழங்கினர். இரத்த தானம் வழங்கிய மாணவர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ. இராமசாமி அவர்களும், தரைப்படையணி அலுவலர் முனைவர் ஆ. மணி அவர்களும் நேரில் வந்து வாழ்த்தினார்.

இரத்த தானம் குறித்துக் கல்லூரி முதல்வர் முனைவர் வ. இராமசாமி அவர்கள் கூறியதாவது: ”இரத்த தானம் தானத்தில் மிகச் சிறந்தது. வாழும் காலத்திலேயே பிறரை வாழவைக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பை இரத்ததானம் நமக்கு வழங்குகின்றது என்றும், இம்மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நம் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்” என்றும் அவர் கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளைத் தேசிய மாணவர்படைக் குழுமத் தலைவர் மற்றும் அலுவலகத்தினர் செய்திருந்தனர். படங்கள் இதோ:இரத்த வங்கியின் பொறுப்பு மருத்துவர், கல்லூரி முதல்வர், தேசிய மாணவர் படை அலுவலர்.