ஞாயிறு, 10 ஜூன், 2012

கல்லூரி விளம்பர, ஆவணப்படம்

    சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் நான் பணியாற்றியபோது அக்கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் என்ற முறையிலும் தமிழ்ப் பேராசிரியர் என்ற நிலையிலும் கல்லூரி நிருவாகத்தின் கருத்திற்கு இணங்க, அக்கல்லூரியின் விளம்பரம் மற்றும் ஆவணப் படம் ஒன்றை எழுதி, இயக்கினேன். பின்னணிக் குரலும் தந்துள்ளேன். அப்போது அக்கல்லூரியில் பணியாற்றிய இரு பெண் பேராசிரியர்களும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர். சிவகாசியைச் சேர்ந்த நண்பர் ஒளி, ஒலிப்பதிவு செய்தார். திருநெல்வேலியில் படக்கோர்வை செய்தோம். தென் மாவட்டங்களின் உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட அந்த விளம்பரப் படம் இதோ: