தொல்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜனவரி, 2025

கனடா, தொல்காப்பிய மன்றம் மாதக் கருத்தரங்கு உரை: தொல்காப்பியப் பதிப்புக்களும் பரவலாக்கமும் - 11.01.2025

கனடா, தொல்காப்பிய மன்றம் மாதக் கருத்தரங்கு: தொல்காப்பியப் பதிப்புக்களும் பரவலாக்கமும் - 11.01.2025

கனடாவில் இயங்கி வரும் தொல்காப்பிய மன்றத்தின் சனவ்ரி 2025 கருத்தரங்கில் பேசும் வாய்ப்பு அமைந்தது. நிகழ்வுக்குத் துணையாக அமைந்த மன்றத்தின் தலைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களுக்கும், செயலர் திரு. சுகந்தன் வல்லிபுரம் அவர்களுக்கும் பொறுப்பாளர் முனைவர் இல. சுந்தரம் அவர்களுக்கும் நன்றி மலர்கள். அழைப்பிதழ்:




இணைய இணைப்பு இதோ: 

                        மாதாந்தக் கருத்தரங்கு – சனவரி 2025 - YouTube

மன்றச் செய்திக் குறிப்பு இது: 

மாதாந்தக் கருத்தரங்கு – சனவரி 2025

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு சனவரி மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திருமதி புவனா கருணாகரன்

காலந்தோறும் தொல்காப்பியப் பதிப்புகளும் பரவலாக்கமும்
– முனைவர் ஆ. மணி
துணைப்போசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி

திருக்குறளில் தலைமைத்துவம் (ஆங்கிலத்தில்)
செல்வி சோலை இராச்குமார்
வகுப்பு 7, அல்வின் கேர்லிங் பள்ளி மாணவி, கனடா.

திருக்குறள் முற்றோதல் – கொல்லாமை
செல்வன் ஆயுஷ்மனன் சாய் சர்மா
வகுப்பு 7, கிளென்கரி பள்ளி மாணவர், கனடா.

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: சனிக்கிழமைசனவரி 11, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.


                           மாதாந்தக் கருத்தரங்கு – சனவரி 2025 – Tolkappiyam 

செவ்வாய், 1 அக்டோபர், 2024

கனடா, முதல் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரை (20,21, 22 -09-2024) - வ.உ. சிதம்பரம் பிள்ளை வெளியிட்ட தொல். பொருள். (அகத். புறத். இயல்கள்) இளம்பூரணர் உரையின் பதிப்பாண்டு எது?

 கனடா, முதல் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரை (20,21, 22 -09-2024) - வ.உ. சிதம்பரம் பிள்ளை வெளியிட்ட தொல். பொருள். (அகத். புறத். இயல்கள்) இளம்பூரணர் உரையின் பதிப்பாண்டு எது?


முதல் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு கடந்த 20,21,22- 09-2024 ஆகிய நாட்களில் கனடாவில் நடைபெற்றது. உலகத் தொல்காப்பிய மன்றம் நடத்திய அம்மாநாட்டில் இணைய வழியாகக் கட்டுரை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கட்டுரை மாநாட்டு மலரிலும் இடம்பெற்றது. இதோ.























வெள்ளி, 1 மார்ச், 2024

தொல்காப்பிய முதல் பதிப்பு: மழவை மகாலிங்கையர் பதிப்பு: தொல்.எழுத்து. நச்சினார்க்கினியர் உரை

தொல்காப்பிய முதல் பதிப்பு: மழவை மகாலிங்கையர் பதிப்பு: தொல்.எழுத்து. நச்சினார்க்கினியர் உரை

பதிப்பு முகப்பு:

தொல்காப்பியம்‌, இஃது, ஜமதக்கினி மஹாரிஷியின்புத்திரரும்‌, அகஸ்திய மஹாரிஷியின்முதன்மாணாக்கருமாகிய, திரணதூமாக்கினியென்னுமியற்பெயரையுடைய தொல்காப்பிய மகரிஷியினால்அருளிச்செய்யப்பட்டது. இதில்முதலாவது - எழுத்ததிகார மூலமும்‌, மதுரை ஆசிரியர்பாரத்துவாசி நச்சினார்க்கினியரால்அருளிச் செய்யப்பட்ட அதனுரையும்‌, கரலிதிதங்களாலாய வழுக்களை நீக்கி யச்சிட்டுத்தருகவெனச் சில வித்வான்கள்கேட்டுக்கொள்ளக்கனம்பொருந்திய, கம்பேனியாரால்ஏற்படுத்தப்பட்ட யுனிவர்சிட்டியென்னுஞ்சகலச்சாஸ்திரி சாலைத்தமிழ்த்தலைமை புலமை நாடாத்திய மழைவை மகாலிங்கையரால்பல பிரதிகளைக்கொண்டாராயப்பட்டுத்திருவண்ணாமலை வீரபத்திரையரால்தமது கல்விக்கடல்அச்சுக்கூடத்திற்பதிப்பிக்கப்பட்டன, சாலீவாகன ஆண்டு, முதற்பதிப்பு – 1770 இன்சரியான பிலவங்க ஆண்டு ஆவணி மாதம்‌ – என்பது முகப்புப் பக்கம்.




இப்பதிப்பைப் பாவலர் சரித்திர தீபகம் (. சதாசிவம் பிள்ளை 2006: 187, 228) பதிப்பாண்டு; அதிகாரப் பகுதி சுட்டாமல் குறித்துள்ளது. போதவசனம் என்னும் நூலையும், சைவ எல்லப்ப நாவலரின் அருணாசல புராணத்துக்கு ஓர் உரையும் எழுதினார் என்பது அந்நூற்குறிப்பு.

இப்பதிப்பினை எல்.டி. பர்னட், ஜி.யு. போப் ஆகியோர் (1909: 163, 389) குறித்துள்ளனர். மேலும், மழைவ மகாலிங்கையரின் அருணாசல புராண உரைப்பதிப்பு (1898, 1903), இலக்கணச் சுருக்கம் (1879, 1882, 1893 1898) ஆகிய பதிப்புக்களையும் குறித்துள்ளனர். இலக்கணச் சுருக்கம் பிறாரல் பதிப்பிக்கப்பட்டதும் இப்பட்டியலில் உண்டு.

மகாலிங்கையரின் இலக்கணச் சுருக்கப் பதிப்புக்கள் - வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடம் 1878, பாஸ்டர் அச்சுக்கூடம் 1879, மிமோரியல் அச்சுக்கூடம் 1882, ஸ்ரீநிலைய அச்சுக்கூடம் 1883, கஜந ரஞ்சநி அச்சுக்கூடம் 1884, கலாரத்நாகரம் அச்சுக்கூடம் 1888, தொண்டை மண்டலம் பிரஸ் 1889, கலாரத்நாகரம் அச்சுக்கூடம் 1892, ஐரிஷ் பிரஸ் 1897, தாம்ஸன் கம்பெனி 1898 ஆகியன மு. சண்முகம் பிள்ளையால் (1961: 338 – 339) குறிக்கப்பட்டுள்ளன.

பதிப்பாண்டு 1845 என்பார் மா.சு. சம்பந்தன் (1997: 166). 1849 என்பர் . . அறவாணன் & தாயம்மாள் அறவாணன் (1975:119), கி. நாச்சிமுத்து (1986: 19), வெ. பழநியப்பன் (1990: 92) ஆகியோர். 1907 என்பர் .. திருநாவுக்கரசு (1972: 6).

தொல்காப்பிய முதற்பதிப்பை வெளியிட்டவர் சி.வை. தாமோதரம் பிள்ளை எனக் கலைக்களஞ்சியம் கூறுகின்றது; அது பொருந்தாது. மழவை மகாலிங்கையரே தொல்காப்பியத்தின் முதற்பதிப்பாசிரியர். மழவை மகாலிங்கையர் தம் பதிப்பை வெளியிட்ட ஆண்டு 1847, 1848, 1849 எனப் பலவாறாகக் கூறுவார் உண்டு. எனினும் அப்பதிப்பு வெளிவந்த ஆண்டு 1848 என்பார் கோ.கிருட்டிணமூர்த்தி (1990: 21-22). இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மகாலிங்கையர் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1848 அன்று என்பதாகும். ஏனெனில் மகாலிங்கையர் வெளியிட்ட தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியர் பதிப்பு பிலவங்க ஆண்டு ஆவணித் திங்களில் வெளிவந்ததாகும். இதற்குச் சரியான ஆங்கில ஆண்டு 1847 ஆகஸ்ட் - செப்டம்பர் ஆகும். எனவே, மகாலிங்கையர் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1847 என்பதே பொருத்தமுடையதாகும். தொல்காப்பியத்தின் முதற்பதிப்பாசிரியர் யார்? என்பதிலும், பதிப்பித்த ஆண்டு எது? என்பதிலும் கருத்து முரண்பாடுகள் இருந்ததை மேற்கண்ட பகுதிகள் நமக்குக் காட்டுகின்றன . மணி (2014: 106 – 107; 2016: 494 – 495).

இதன் பதிப்பாண்டு 1848 என்பார் தெ. ஞானசுந்தரம் (தமிழ்ப் பேராசிரியர்கள் 1998:11).

இரா. அறவேந்தன், . லோகேஸ்வரன் ஆகியோர் (2017: 5) கிருட்டிணமூர்த்தி குறித்த 1848 சரியான ஆண்டு என்கின்றனர்.  தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு என்னும் தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினைச் செய்த கா. இரவிச்சந்திரன் (2011: 54) மகாலிங்கையர் பதிப்பின் ஆண்டு 1848 என்றே கூறுவர்.

தாண்டவராய முதலியார்,  முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் பதிப்பிக்கப்பட்ட திருவள்ளுவமாலையும் திருக்குறண் மூலமும் நாலடி நானூற்றின் மூலமும் என்னும் பதிப்பில் 1831க்குச் சரியான கர வருடம் என்ற குறிப்பும், மெக்கன்ஸி ஜி. காபன் அய்யரின் தொன்னூல் விளக்க இரண்டாம் பதிப்பில் (1891) 1891 ஆம் ஆண்டுக்குச் சரியான கர வருடம் என்ற குறிப்பும் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் 60 ஆண்டு என்ற வட்டமும் ஆங்கில ஆண்டுக் கணக்கும் சரியாகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆண்டு வட்டப் பட்டியல் உணர்த்தும் செய்தி என்னவென்றால், பிலவங்க ஆவணிக்குச் சரியான ஆண்டு 1847தான் என்பது உறுதியாகும். (காண்க: பின்னிணைப்பு). எல்.டி. பர்னட், ஜி.யு. போப் ஆகியோர் (1909: 163, 389) பதிப்பாண்டு 1847 எனக் குறித்துள்ளதும் காண்க

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...