சனி, 29 ஏப்ரல், 2023

முனைவர் ஆ. மணி எழுதிய, பதிப்பித்த நூல்கள்: படக்காட்சி

 முனைவர் ஆ. மணி எழுதிய, பதிப்பித்த நூல்கள்: படக்காட்சி






தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023

 

தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023

புதுச்சேரியின் முதல் பெண்கள் கல்லூரியான பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல் துறையான தமிழ்த்துறையில் கடந்த 2019 முதல் தமிழர் மரபு உணவுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகின்றது. அந்த ஆண்டே மாணவிகள் எழுதி, மாணவிகளாலே தொகுக்கப்பட்ட தமிழர் உணவு என்னும் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த ஆண்டும் இவ்விழா தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023 என்னும் தலைப்பில் இன்று (11.04.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்குத் தலைமை தாங்கிய கல்லூரி முதல்வரும், மனையியல் துறைப் பேராசிரியருமாகிய முன்னைவர் ராஜி சுகுமார் அவர்கள் உணவுத் திருவிழா கண்காட்சியைத் தொடக்கி வைத்துத் தலைமையுரை ஆற்றினார். அவர் பேசியதாவது: உணவு என்பது ஓர் அறிவியல் கலை. அதைத் தான் எங்களின் மனையியல் துறை கற்பிக்கின்றது. மனித வாழ்வில் உணவுக்குப் பேரிடம் உண்டு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனத் தமிழ்ப் புலவராகிய திருமூலரும் உணவின் இன்றியமையாமையைப் பாடி இருக்கின்றார். பண்பாட்டுக்கும், மரபுக்கும், மண்ணுக்கும் ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு, பல்வகை நோய்களுடம் போராடி வரும் இக்காலத் தலைமுறைக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்பட, இது போன்ற உணவுத் திருவிழாக்கள் அவசியமானவை. இதனைச் செய்து வரும் தமிழ்த்துறையினருக்கு எமது பாரட்டுக்கள் என்றார்.

விழாவில் உணவுத் திருவிழா எதற்காக? நடத்துகின்றோம்?, இது போன்ற நிகழ்வுகளின் அவசியம் என்ன? ஆகியவை குறித்து நோக்கவுரையாற்றினார் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் . மணி வரவேற்புரை ஆற்றினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி நந்தினி நன்றி நவின்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மானவிகளும், முனைவர் . மணி மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

கண்காட்சியில் தமிழர் மரபு சார்ந்த உணவுப்பொருட்கள், தமிழர் விளையாட்டுப் பொருள் மாதிரிகள்; புழங்கு பொருள் மாதிரிகள் முதலானவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவியர் கண்காட்சியைக் கண்டுத் தமிழர் மரபுகள் குறித்த செய்திகளை அறிந்து மகிழ்ந்தனர்.

    


அழைப்பிதழ்

இதழ்ச் செய்திகள்










ஒருதலையா? ஒருகலையா? - காவ்யா இதழ்க் கட்டுரை

 ஒருதலையாஒருகலையா? - காவ்யா இதழ்க் கட்டுரை

காவ்யா தமிழ் 2014 அக்டோபர் இதழில் நான் எழுதிய ஒருதலையா? ஒருகலையா? கட்டுரை வெளிவந்துள்ளது. குறுந்தொகைக்கு 30 பதிப்புக்களுக்கு மேல் வெளிவந்த பின்னும் அதன் மூலபாடம் இன்னும் செம்மைப்படவில்லை என்பதை உணர்த்தும் கட்டுரை இது. மூலபாடம் செம்மையாக அமையாத போது அதன் அடிப்படையில் செய்யப்பட்ட முன்னைய ஆய்வுகள் திருத்தப்பட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. ஆய்வுரையை வெளியிட்ட பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி.








பரிமேலழகரின் திருக்குறள் உரை - பதவுரையா? பொழிப்புரையா? - காவ்யா இதழ்க் கட்டுரை

 பரிமேலழகரின் திருக்குறள் உரை - பதவுரையாபொழிப்புரையா

காவ்யா தமிழ் - கலை, இலக்கியம், பண்பாட்டு, பன்னாட்டுக் காலாண்டிதழில் நான் எழுதிய பரிமேலழகரின் திருக்குறள் உரை - பதவுரையா? பொழிப்புரையா? என்னும் ஆய்வுரை ஏப்ரல் - ஜீன் 2017 இதழில் வெளிவந்துள்ளது. ஆய்வுரையை வெளியிட்ட பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி.









திருமுருகாற்றுப்படைப் பதிப்புக்கள்

திருமுருகாற்றுப்படைப் பதிப்புக்கள்

• அநவரத விநாயகமூர்த்தி. வை. 1978 (முதல் பதிப்பு). நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை. கொழும்பு: கல்வி அமைச்சு இந்து மன்றம்.

• ஆசிரியர் குழு (பதி.). 1983 (இரண்டாம் பதிப்பு). பத்துப்பாட்டு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1853 (பிரமாதீச: ஐப்பசி – முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. --: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1873 (ஆங்கிரஸ: பங்குனி - மூன்றாம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னப்பட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1886 (விய: ஆனி - ஐந்தாம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சதாசிவப்பிள்ளை (பதி.ஆ.). சென்னப்பட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1917 இல் (பிங்கள: மார்கழி - 11ஆம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. பொன்னம்பலப்பிள்ளை (பதி.ஆ.). சென்னப்பட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1971 (முதல் பதிப்பு). நக்கீரதேவநாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை மூலமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உரையும். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம்.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 2011 (20ஆம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் நச்சினார்க்கினியர் உரைக்கருத்தைத் தழுவிச்செய்த புத்துரையும். கனடா: வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம்.

• ஆறுமுக நாவலர் (ப.ஆ.). சுக்கில - வைகாசி (1870). பதினோராந் திருமுறை. சென்னபட்டணம்: வர்த்தமான தரங்கிணி சாகை யச்சுக்கூடம்.

• ஆறுமுகநாவலர் (உ.ஆ.). 2003 (மறு பதிப்பு). திருமுருகாற்றுப்படை விளக்கத்துடன். சென்னை: முல்லை நிலையம்.

• ஆறுமுகம் பிள்ளை. எம். 1927. திருமுருகாற்றுப்படை சிற்றாராய்ச்சி. தஞ்சை: லாலி எலெக்டிரிக் அச்சுக்கூடம்.

• இரத்தினவேலு முதலியார். வாடாவூர். (பதி.ஆ.). 1885 (பார்த்திப மேட ரவி). திருமுருகாற்றுப்படை உரையாளர் பரிமேலழகருரை. சென்னை: ஜீவ ரக்‌ஷாமிர்த அச்சுக்கூடம்.

• இராசேந்திரன். ப. (உ.ஆ.). 2010 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை. சென்னை: கங்கை புத்தக நிலையம்.

• இராஜேந்திரக் குருக்கள். சு. (உ.ஆ,). 1988 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை விளக்கவுரை. நீர்வேலி: அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம்.

• கதிர்முருகு (உ.ஆ.). 2009 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு – திருமுருகாற்றுப்படை – பொருநராற்றுப்படை - மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.

• கந்தையா. ந.சி. (உ.ஆ.). 2008 (முதல் பதிப்பு). செவ்விலக்கியக் கருவூலம் – பத்துப்பாட்டு. சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

• கந்தையாபிள்ளை. ந.சி.. 1935 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு வசனம். மதராஸ்: ஒற்றுமை ஆபிஸ்.

• காஞ்சி நாகலிங்க முனிவர் (ப.ஆ.). 1934. திருமுருகாற்றுப்படை (இலவச வெளியீடு). துறைசை ஆதினம்: ஸ்ரீ நமச்சிவாய தேசிக மூர்த்திகள்.

• கிருஷ்ணமூர்த்தி. காவூரி ஆர். (உ.ஆ.). 2014 (முதல் பதிப்பு). துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை (மூலமும் எளிய தமிழ் விளக்கமும்). சென்னை: நர்மதா பதிப்பகம்.

• குமாரசாமித் தம்பிரான். கயிலை. (பதி.ஆ.). 1999 (நான்காம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து. திருப்பனந்தாள்: காசித்திருமடம்.

• சண்முகம் பிள்ளை. மு. (ப.ஆ.). 1981 (முதல் பதிப்பு). தெ.பொ.மீ. பத்துப்பாட்டு ஆய்வு (புறம்). மதுரை: சர்வோதய இலக்கியப் பண்ணை.

• சண்முகனார் சுந்தர. (உ.ஆ.). ?. திருமுருகாற்றுப்படை தெளிவுரை. .. .. : புதுவை சிங்கார - குமரேசனாரின் மணிவிழா வெளியீடு.

• சரவணப் பெருமாளையர் (ப.ஆ.). 1834 (சய – ஆவணி). திருமுருகாற்றுப்படை மூலபாடம். சென்னப்பட்டணம்: கல்வி விளக்க அச்சுக்கூடம்.

• சாது சிதம்பரம் சுவாமி (உ.ஆ.). 2001 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும் (தெளிபொருள்). சென்னை: சாது சிதம்பரம் சுவாமி.

• சாமிநாதையர். உ.வே. (ப.ஆ.). 1974 (ஏழாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.

• சாமிநாதையர். உ.வே. (ப.ஆ.). 1986 (நிழற்படப் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

• சாமிநாதையர். உ.வே.(ப.ஆ.). 1889 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும். சென்னை: திராவிட ரத்நாகர அச்சுக்கூடம்.

• சாமிநாதையர். உ.வே.(ப.ஆ.). 1918 (இரண்டாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும். சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம்.

• சாமிநாதையர். உ.வே.(ப.ஆ.). 1931 (மூன்றாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும். சென்னை: கேஸரி அச்சுக்கூடம்.

• சாமிநாதையர். உ.வே.(ப.ஆ.). 1993 (இரண்டாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலம். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.

• சிவஞானம். சாமி. (ப.ஆ.). 2003 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரை. தஞ்சாவூர்: சரசுவதி மகால் நூலகம்.

• சீனிவாசன். ம.பெ. (உ.ஆ.). 2009 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரைவிளக்கம். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

• சுதாகர். ம.வீ. (உ.ஆ.). 1990 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும். சென்னை: வர்த்தமானன் பதிப்பகம்.

• சுந்தரமூர்த்தி. இ. (பொ.ப.ஆ.). 2001 (முதல் பதிப்பு). பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த சிற்றிலக்கியத் திரட்டு. சென்னை: சென்னைப் பல்கலைக் கழகம்.

• சுப்பிரமணியன். ச.வே. (உ.ஆ.). 2003 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு. கோவிலூர் : கோவிலூர் மடாலயம்.

• சுப்பிரமணியன். ச.வே. (உ.ஆ.). 2010 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியம் – பத்துப்பாட்டு – முழுவதும் – தெளிவுரை. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

• சுப்பிரமணியன். ச.வே. (ப.ஆ.). 2000 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலம் (சுவடி வேறுபாடுகளுடன்). சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.

• சுப்பிரமணியன். ச.வே. (ப.ஆ.). 2008 (முதல் பதிப்பு). தமிழ்ச்செவ்வியல் நூல்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

• சைவ சித்தாந்த மகாசமாஜம் (ப.ஆ.). 1940 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் – எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும். சென்னை: சாது அச்சுக்கூடம்.

• சோமசுந்தரனார். பொ.வே. (உ.ஆ.). 1956 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் உரையும் (முதல் பகுதி). சென்னை: கழகம்.

• துரை அரங்கசாமி. மொ.அ., 1966 (மூன்றாம் பதிப்பு). அன்புநெறியே தமிழர்நெறி. மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

• துரைசாமி. எஸ். (உ.ஆ.). 1920 (முதல் பதிப்பு). நற்கீரதேவர் திருவாய்மலர்ந்தருளிய திருமுருகாற்றுப்படை பொழிப்புரையும் அரும்பதவிளக்கமும். சென்னை: மனோன்மணி விலாச அச்சுக்கூடம்.

• நக்கீரதேவர். 1922 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னை: பூமகள் விலாச அச்சுக்கூடம்.

• நடராசன். பி.ரா. (தொ.ஆ.). 2016 (முதல் பதிப்பு). நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை உரைவளம் (நச்சினார்க்கினியர், இளம்பூரணார் (உரையாசிரியர்), பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதியார்). சென்னை: சாரதா பதிப்பகம்.

• நமச்சிவாய இராஜயோகியார். சை.ந.. 1938 (இரண்டாம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் பரிமேலழகர் உரையும். சென்னை: சற்குரு புத்தக சாலை.

• நரசிம்மன். வை. மு. (ப.ஆ.). 1961 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு - ஸ்ரீ. உ. வே. வை. மு. கோபால கிருஷ்ண மாசாரியரும் அவர் மாணாக்கர் சி. ஜெகநாதாசாரியரும் இயற்றிய ஆராய்ச்சியுரையுடன். சென்னை: வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியர் கம்பெனி.

• நாராயணசாமி. மு. (ப.ஆ). 1969 (நான்காம் பதிப்பு). முருகன் முந்நூல் மூலமும் உரையும். சென்னை: சைவ சித்தாந்த சமாஜம்.

• நாராயணவேலுப்பிள்ளை. எம். (உ.ஆ.). 1995 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும் – முதற் பகுதி. சென்னை: முல்லை நிலையம்.

• நாராயணவேலுப்பிள்ளை. எம். (உ.ஆ.). 2011 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு. சென்னை: நர்மதா பதிப்பகம்.

• பசுபதி. ம.வே. (ப.ஆ.). 2010 (முதல் பதிப்பு). செம்மொழித் தமிழ் – இலக்கண இலக்கியங்கள். தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகம்.

• பசுபதி. ம.வே. 2003 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு எளிய உரைநடை. சென்னை: அல்லயன்ஸ்.

• பத்மபிரியா. மா. (உ.ஆ.). 2014 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னை: கலைஞன் பதிப்பகம்.

• பார்த்தசாரதி. கோ. (உ.ஆ.). 1992 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னை: அநுராகம் வெளியீடு.

• புலியூர்க்கேசிகன் (உ.ஆ.). 2013 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை (உதயசூரியன்). எஸ். கௌமாரீஸ்வரி (ப.ஆ.). சென்னை: சாரதா பதிப்பகம்.

• பூமகள் விலாச அச்சுக்கூடம் (பதி.ஆ.). 1922. திருமுருகாற்றுப்படை. சென்னபட்டணம்: பூமகள் விலாச அச்சுக்கூடம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2018 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2019 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை புத்துரைக் கொத்து. புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2020 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரைத்தொகை  (பழையவுரைகள் மட்டும்). புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2020 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படைசரவணப் பெருமாள் பதவுரையும் உரைப்பாங்கும். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2020 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி - 1. புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2020 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி - 2. புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. 2014 (முதல் பதிப்பு). மலைபடுகடாம் – பதிப்பு வரலாறு (1889 – 2013). சென்னை: காவ்யா பதிப்பகம்.

• மனோன்மணி விலாச அச்சுக்கூடம் (பதி.ஆ.). 1910. திருமுருகாற்றுப்படை மூலபாடம். சென்னை: மனோன்மணி விலாச அச்சுக்கூடம்.

• மாணிக்கவாசகன். ஞா. (உ.ஆ.). 2010 (நான்காம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலம் – விளக்க உரையுடன். சென்னை: உமா பதிப்பகம்.

• மாணிக்கனார். அ. (உ.ஆ.). 1999 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் – முதல் பாகம். சென்னை: வர்த்தமானன் பதிப்பகம்.

• மீனாட்சி சுந்தரம்பிள்ளை. ஆர். (உ.ஆ.). 1933. திருமுருகாற்றுப்படை - விருத்தியுரையுடன். சென்னை: பூமகள் விலாச அச்சுக்கூடம்.

• முருகேசன். கதி. (உ.ஆ.). 2017 (ஆறாம் பதிப்பு). சங்க இலக்கியம் – பத்துப்பாட்டு மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.

• வையாபுரிப் பிள்ளை. எஸ். (தொ.ஆ. & ப.ஆ.). 1967 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) தொகுதி - 1. சென்னை: பாரி நிலையம்.

• வையாபுரிப்பிள்ளை. எஸ். (உ..ஆ.). 1946 (நான்காம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும். சென்னை: சைவ சித்தாந்த மகா சமாஜம்.

• ஜகந்நாதன். கி.வா. (உ.ஆ.). 1949 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை திரு. கி.வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதிய பொழிப்புரையுடன். சென்னை: சைவசமய பக்த ஜனசபை வெளியீடு.

• ஜகந்நாதன். கி.வா. (உ.ஆ.). 1978 (இரண்டாம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை விளக்கம். சென்னை: அமுத நிலையம்.

• ஜகந்நாதன். கி.வா. (உ.ஆ.). 2004 (ஏழாம் பதிப்பு). வழிகாட்டி. சென்னை: அல்லயன்ஸ் கம்பெனி.

• ஜமதக்னி (உ.ஆ.). 1960?. திருமுருகாற்றுப்படை பொருள்விளக்கமும் விருத்தியுரையும். சென்னை: பி. இரத்தின நாயகர் ஸன்ஸ்.

• ஜெகத்ரட்சகன். எஸ். (உ.ஆ.). 2016 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னை: ஆழ்வார்கள் ஆய்வு மையம்.


சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...