புதன், 2 ஏப்ரல், 2025

பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத்திருவிழா 2025 - தினமலர் நாளிதழ்ச் செய்தி (24.03.2025)

 பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத்திருவிழா 2025 - தினமலர் நாளிதழ்ச் செய்தி (24.03.2025)

புதுவை, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் கடந்த 21.03.2025 வெள்ளிக்கிழமை முற்பகல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த விழா பற்றிய செய்தி தினமலர் நாளிதழில் 24.03.2025 அன்று வெளிவந்தது. தினமலர் நாளிதழுக்கும், நண்பர் திரு. முனுசாமி அவர்களுக்கும் நன்றி. அது இதோ:








வெள்ளி, 21 மார்ச், 2025

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத் திருவிழா (21.03.2025)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத் திருவிழா (21.03.2025)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும், கல்லூரித் தர உறுதியளிப்புக்குழுவும் இணைந்து  இன்று (21.03.2025) வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் தமிழ் மரபு உணவுத் திருவிழா - 2025 ஐக் கல்லூரி வளாகத்தில் நடத்தின. 

புதுவை மாநிலத்தில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகவும், முதல் பெண்கள் கல்லூரியாகவும் விளங்கும் பாரதிதாசன் கல்லூரித் தமிழ்த்துறையின் மூன்றாமாண்டு பயிலும் மாணவியர் செம்மொழி இலக்கியங்களை இரு பருவங்களுக்குப் பாடங்களாகப் படிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களாகிய சங்கத் தமிழ் இலக்கியங்களில் பழந்தமிழர்களின் வாழ்வியலும் அரசியலும் சமூகவியலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள பண்டைத் தமிழர்களின் உணவுகளையும், உணவு தயாரிக்கும் முறைகளையும் படிக்கும் மாணவியருக்கும், பிறருக்கும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் தெளிவும் ஏற்படும் வகையில் தமிழ்த்துறை சார்பாகக் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் தமிழ் மரபு உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.   

இன்று (21.03.25) காலை நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் கலந்துகொண்டு, தமிழ் மரபு உணவுக் கண்காட்சியைத் தொடக்கி வைத்துத் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் பேசும்போது, மாறிவரும் உணவுப் பண்பாட்டுச் சூழலில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்றியமையாதவை. நம்முடைய மரபும் உணவும், உணவின் பின் நிற்கின்ற அறிவியலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்வதென்றால், சிறு தானிய உனவுகளை நாம் உட்கொள்ளும்போது, அவை குளுக்கோஸ் என்ற சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் உடலில் சர்க்கரையின் அளவு திடீரெனக் அதிகரிப்பது தடுக்கப்படும். செரிமானமும் மெதுவாக நடைபெறும் என்று கூறினார்.  

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி உணவுத் திருவிழாவின் நோக்கங்களை எடுத்துக் கூறினார். கல்லூரித் தர உறுதியளிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.எஸ். சுரேஷ் கருத்துரை வழங்கினார்.

கவிஞரும், தன்முன்னேற்ற ஊக்கப் பேச்சாளரும், சாதனைப் பெண்ணாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மரபு உணவுகளின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியவருமாகிய திருமதி. சுஜாதா சரவணன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, மரபு உணவின் சிறப்புக்களை எடுத்துக் கூறியதோடு, இவ்வகை நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக, தமிழ் மரபு உணவுத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி பு. அருள்மொழி நன்றியுரை கூறினார். இளங்கலைத் தமிழ் முதலாண்டு மாணவி .விக்னேஸ்வரி  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஊன்துவை அடிசில் (பிரியாணி), கருப்பு இட்லி, புதுச்சேரி மீன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பழந்தமிழ் உணவு வகைகள் கண்காட்சியில் மாணவிகளால் வைக்கப்பட்டிருந்தனஇந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பஅமிர்தவள்ளி, முனைவர் ஆ. கோமதி, முனைவர் இரா. குமுதவள்ளி, முனைவர் மா.தயாநிதி உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். பல்துறைகளைச் சார்ந்த மாணவிகள் திரளாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

  

கல்லூரி முதல்வர் அறையில்

கல்லூரி முதல்வர் அறையில்
கல்லூரி முதல்வர் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்

பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
வரவேற்புரை: முனைவர் ஆ. மணி
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினர் திருமதி. சுஜாதா சரவணன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
அரங்கச் சுவைஞர்
முதலாண்டு மாணவி ப. விக்னேஸ்வரி அவர்களின் நிகழ்ச்சித் தொகுப்புரை

கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்களின் தலைமையுரை

தமிழ்த்துறைத் தலைவர் சொ. சேதுபதி அவர்களின் நோக்கவுரை

சிறப்பு விருந்தினர் கவிஞர், தன்முன்னேற்றப் பேச்சாளர் திருமதி. சுஜாதா சரவணன் அவர்களின் வாழ்த்துரை
இரண்டாமாண்டு மாணவி பு. அருள்மொழியின் நன்றியுரை

கண்காட்சியில் சில உணவுப் பொருட்கள்:









ஞாயிறு, 2 மார்ச், 2025

இணைய ஆய்விதழ் இனம் - கட்டுரை (2025 பிப்ரவரி): திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural

 இணைய ஆய்விதழ் இனம் - கட்டுரை (2025 பிப்ரவரி): திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural

பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2025 பிப்ரவரி (மலர்: 10. இதழ்: 41) இதழில் திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி, இணைப்பு இதோ:

                                                    








                                                       

                                                                 

   திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural | இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)


https://drive.google.com/file/d/1FAMikEIbYWTZJf6Y1oIXgQL1UWj7d_Zy/view?usp=drive_link

சனி, 15 பிப்ரவரி, 2025

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு (2022)

 தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு (2022)

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு 33 வகைப்பாடுகளில் பரிசுகளை வழங்கி வருகின்றது. அவற்றுள் சிறந்த நூலாசிரியருக்கும், சிறந்த பதிப்பகத்திற்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிரந்த நூலாசிரியர் பரிசுத்தொகை ரூ. 30000 ஆகும் சிறந்த பதிப்பகத்திற்கான பரிசுத்தொகை ரூ. 10000 ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான மொழி வளர்ச்சி, இலக்கணம்  என்னும் வகைப்பாட்டில் முனைவர் ஆ. மணி ஆராய்ந்து பதிப்பித்த “தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு : கூற்று” என்னும் நூலுக்கு வழங்கப்பட்டது. அதற்கான விழா 11.07.2024 அன்று சென்னை, தமிழ்நாடு இழை, கவின் பல்கலைக் கழக அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார். இயக்குநர் அவர்களுக்கும், தந்தி தொலைக்காட்சிக்கும் நன்றி. அந்நிகழ்வு பற்றிய படங்கள் இவை:











புதன், 12 பிப்ரவரி, 2025

முனைவர் ஆ. மணி கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் (2018 - 2025)

 முனைவர் ஆ. மணி கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் (2018 - 2025)


முனைவர் ஆ. மணி 2018 - 25 வரை செய்த கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் பற்றிய குறிப்புக்கள் இவை. இவற்றுள் சில குறியீட்டுவடிவிலும் தரப்பட்டுள்ளன. 






ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

இனம் இதழ்க் கட்டுரை - 2020 நவம்பர்: திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?

                                            இனம் இதழ்க் கட்டுரை - 2020 நவம்பர்:                   திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?


பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2020 நவம்பர்:                   திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி இது.     

                                                                 



























             

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...