ஐந்தமிழ் மன்ற ஆய்வுக் கருத்தரங்கு - காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகம் - 16,17.05.2025
மதுரை, ஐந்தமிழ் மன்றத்தின் இருபதாவது கருத்தரங்கு 16,17.05.2025 (வெள்ளி, சனி) ஆகிய நாள்களில் காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. எம் பேராசிரியர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்களின் வழிகாட்டுதலால், முதன்முறையாக ஐந்தமிழ் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. மதுரை, காந்தி அருங்காட்சியக நூலகர் தகைமிகு. இரவிச்சந்திரன் அவர்கள் உதவினார்.
இரு நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில் 17.05.2025 சனிக்கிழமையன்று கலந்துகொண்டேன். பிற்பகலில் நண்பர் முனைவர் மு. அப்துல் காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் திருக்குறளின் முதல் சொல்லடைவு எது? என்னும் தலைப்பில் கட்டுரை படித்தேன்.
கருத்தரங்கில் பேராசிரியர்கள் முனைவர் கண்ணா கருப்பையா, முனைவர் கருணாகரன், முனைவர் சிதம்பரம், முனைவர் சிவா, முனைவர் ச.பொ. சீனிவாசன் மற்றும் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. மகிழ்ச்சி. கட்டுரை இதோ:


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக