இந்த ஆண்டும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த ஆண்டைப்போலவே பேராசிரியர் வேங்கட சுப்பராய நாயகர், தமிழ்த் தொண்டர் சீனு. தமிழ்மணி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகியோருடன் புத்தகக் கண்காட்சிப் பயணம் தொடங்கியது. 7.1.12 அன்று அதிகாலையிலேயே புறப்பட்டுக் கண்காட்சி தொடங்கும்போதே சென்றுவிட வேண்டும் என்ற எங்கள் எண்ணம் சில காரணங்களால் தள்ளிப்போனது. மதியம்தான் சென்று சேர்ந்தோம். சனிக்கிழமை என்பதால் மதியவேளையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அரங்க அமைப்புகள் நன்று.
ஒருநாளில் அனைத்து அரங்குகளையும் பார்ப்பது இயலாத ஒன்றாகவே அமைந்துவிட்டது. நாங்கள் பெரும்பாலும் இலக்கிய நூல்களையே வாங்கும் பழக்கமுடையவர்கள் என்பதால் அந்த அரங்குகளைத் தேடிச்செல்வதிலேயே பாதிநேரம் போனது. அதைவிடப் புத்தகக் கட்டுக்களையும் சுமந்துகொண்டு ஒவ்வொரு அரங்காகச் சென்றது. புத்தகக் கண்காட்சியின் மகிழ்ச்சியான நினைவுகளையெல்லாம் கொன்றுவிட்டது. எப்போது வெளியே செல்வோம் என்ற எண்ணமே அதிகமானது. அர்ங்கின் சில பாதைகளில் வெற்றிடங்கள் இருந்தன. அவற்றில் அரங்க அமைப்பாளர் சார்பாக சில அரங்குகளை அமைத்து புத்தகங்களை வாங்கி வைத்திருந்து திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். சிலர் தண்ணீர் எங்கே எனக்கேட்டு அலைந்ததையும் பார்க்க முடிந்தது. தண்ணீர் இருக்குமிடத்தைத் தெளிவாகத் தெரியும்வகையில் அமைக்கலாம். உணவகத்தில் விலை அதிகம் என்று பலரும் பேசிக் கொண்டதைக் கேட்க முடிந்தது. இவற்றைச் சீர்திருத்தி அமைத்தால் புத்தகக் கண்காட்சி மகிழ்ச்சியான உணர்வாக மனத்தில் நிற்கும்.
நிறைவாக, ரூ10,000 மதிப்புடைய நூல்களை வாங்கித் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு இரவு 11மணியளவில் ஊர் திருப்பினோம்.
புத்தகக் கண்காட்சிக் காட்சிகள்
மணிவாசகர் பதிப்பகப் பொறுப்பாளர் நண்பர் திரு. பரசுராமன், தமிழ்த்தொண்டர் சீனு தமிழ்மணி, பேராசிரியர் நாயகர்.
ஆ.மணி, தமிழ்த்தொண்டர் சீனு தமிழ்மணி, பேராசிரியர் நாயகர்.
நுழைவாயிலில் எங்கள் அணி
நுழைவாயிலில் ஆ.மணி, பேரசிரியர் நாயகர், ஒட்டுநர் திரு. தனசேகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக