புதன், 8 பிப்ரவரி, 2012

காரைக்கால் அவ்வையார் கல்லூரிச் சங்க இலக்கியப் பயிலரங்கு - 01.02.12

   காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும் வரலாற்றுத்துறையும் இணைந்து சங்க இலக்கியம்வழி அறியப்பெறும் வணிக மும் அரசியல் போக்குகளும் கடல் வணிக வரலாறும் என்னும் பொருண்மையில் சங்க இலக்கியப் பயிலரங்கு ஒன்றினைச் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் 01.02.2012 முதல் 10.02.2012 வரை நடத்தி வருகின்றன. அவ்வையார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சிவ. மாதவன், வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மாணிக்கம் ஆகியோர் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். 

         முனைவர் சிவ. மாதவன் அவர்கள் புதுவை மாநிலத்திலேயே முதன்முறையாகத் தாகூர் கலைக் கல்லூரியில் தொல்காப்பியப் பயிலரங்கினை நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர். காரைக்கால் பகுதியிலும் அவரே முதன்முரையாக இப்பயிலரங்கினை நடத்திவருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. கடுமையான உழைப்பும் கற்றோரைப் பாராட்டிக் கைதுக்கிவிடும் பேரன்பும் கொண்ட பேராசிரியர் சிவ. மாதவன் அவர்கள் நடத்திய இப்பயிலரங்கில்   சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் பேராசிரியர் முத்துவேலு அவர்கள் பழந்தமிழிலக்கியத்தில் சட்டநெறிகள்  என்னும் பொருண்மையில் மிகச்சிறந்த உரை நிகழ்த்தினார். பகட்டில்லாமல் பழகுகின்ற பண்பும் இனிமையாகப் பேசி ஆற்றுபடுத்தும் திறனும் உடைய பேராசிரியர் முத்துவேலு அவர்கள் நிறுவனத்தின் பதிவாளராக அமைந்தது தமிழுக்கு வாய்த்த நற்பேறாகும். அவர்களொடு நானும் உரையாற்றியது என் வாழ்வின் மகிழ்ச்சியானதொரு நிகழ்வு.  பயிலரங்கக் காட்சிகள் இவை.

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் பேராசிரியர் முத்துவேலு அவர்களை அறிமுகம் செய்து வைக்கின்றார் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவ. மாதவன்

 சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் பேராசிரியர் முத்துவேலு அவர்களின் உரைப்பொழிவு. பொருண்மை: பழந்தமிழிலக்கியத்தில் சட்டநெறிகள் 
 முனைவர் ஆ. மணி அவர்களை அறிமுகம் செய்து வைக்கின்றார் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவ. மாதவன்
முனைவர் ஆ.மணி அவர்களின் பயிலரங்க உரை. பொருண்மை:  சங்க இலக்கியம்வழி அறியப்பெறும் குறுநில மன்னர் வரலாறு. 
பயிலரங்கப் பார்வையாளர்கள் 
பயிலரங்கப் பார்வையாளர்கள்
 பயிலரங்கப் பார்வையாளர்கள்
 பயிலரங்கப் பார்வையாளர்கள்





கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...