செவ்வாய், 8 மார்ச், 2011

திருச்சி, சமால் முகம்மது கல்லூரிப் பயிலரங்கு 05.03.2011

        திருச்சி, சமால் முகம்மது கல்லூரி நான் இளநிலை விலங்கியல் பயின்ற கல்லூரி. அக்கல்லூரியில் நடைபெறும் சங்க இலக்கியப் பயிலரங்கில் உரையாற்ற வேண்டும் எனப் பேராசிரியர் அலிபாவா அன்புடன் அழைத்தார். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்புக்குக் காரணமாக அமைந்தவர் முனைவர் கோதண்டராமன் அய்யா அவர்கள். அவருக்கும் சமால் முகம்மது கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஹபீபுர் ரகுமான் அவர்களுக்கும், தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியேற்றி ருக்கும் முனைவர் அலிபாவா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள்.

        சங்க இலக்கியப் பயிலரங்கில் 05.03.2011 அன்று காலை பெரும்பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அய்யா அவர்களும்,  பிற்பகலின் முதல் அமர்வில் புதுச்சேரிப் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வித்துறையின் இயக்குநர் முனைவர் அ. அறிவுநம்பி அய்யா அவர்களும் உரையாற்றினர். அவர்களுக்குப் பின்னர் நானும் அவ்வரங்கில் பேசியது நான் பெற்ற பேறு.    பயிலரங்க உரைக்காட்சிகள்.

முனைவர் அலிபாவா அவர்களுக்குப் பாராட்டு. பாரட்டுவோர் முனைவர் சோ.ந. கந்தசாமி அய்யா அவர்களும்,  புதுச்சேரிப் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வித்துறையின் இயக்குநர் முனைவர் அ. அறிவுநம்பி அய்யா அவர்களும் 

முனைவர் அறிவுநம்பி அய்யா அவர்களின் பயிலரங்க உரை
என்னுரை

பயிலரங்க ஒருங்கிணைப்பாளரின் கருத்துரை. உடன் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஹபீபுர் ரகுமான் அவர்கள்

ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள்

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் தமிழ்ப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் முனைவரே..

தங்கள் வலைப்பதிவின் சுயவிவரப் பகுதியில்..

# Occupation: தமிழ்ப்பேராசிரியர்

என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதற்குப்பதிலாக “விரிவுரையாளர்“ என்று குறிப்பிட்டால் மேலும் பல தமிழ் விரிவுரையாளர்களின் வலைப்பக்கங்களுடன் தொடர்பு ஏற்படும் முனைவரே..

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...