அழகப்பா பல்கலைக் கழகத்தில் செம்மொழித் தமிழ் இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு என்ற பொருண்மையில் நடைபெற்று வரும் பத்துநாள்(16.2.11 முதல் 25.2.11) பயிலரங்கில் உரையாசிரியர்கள் பார்வையில் சாரியைகள் என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினை அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி ஐயா அவர்களும், பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் ஐயா அவர்களும் வழங்கினர். என்மேலும் என் புலமையின்மேலும் நம்பிக்கை கொண்டு ஆண்டுதோறும் தாங்கள் நடத்துகின்ற கல்விப்புல நிகழ்ச்சிகளில் எனக்கு வாய்ப்புத் தந்து என்னை வளர்த்தெடுக்கும் இப்பெருமக்களுக்கு என் நன்றியுணர்வைப் புலப்படுத்திக் கொள்வதொன்றே என்னால் இப்போது முடிந்த கைம்மாறு.
காரைக்குடி விருந்தோம்பலுக்கும் மென்மைக் குணத்திற்கும் இனிமையான அணுகுமுறைகளுக்கும் பெயர்பெற்ற ஊர் என்பதை மேற்கண்ட பெருமக்களையும், அவர்தம் மாணவச் செல்வங்களான இளவல்கள் முனீஸ்மூர்த்தி, பரமசிவம், லோகேஸ்வரன் போன்ற முனைவர்ப் பட்ட ஆய்வாளர்களையும் காணும்போது நாம் உறுதிப் படுத்திக்கொள்ளலாம். நள்ளிரவென்றும் பாராமல் ஒடிவந்து உதவுகின்றமனப்பாங்கும், நல்லறிவும், நற்பண்பும் மிக்க இவர்களைப் போன்ற மாணவச் செல்வங்கள் கிடைப்பது பெறும்பேறு என்பது நம் பட்டறிவு நமக்குக் காட்டும் உண்மையாகும்.
நற்சிந்தனைகளோடு தொடங்கப்பட்ட இப்பயிலரங்கில் முனைவர் தி. செல்வம் ஐயா அவர்கள் விரவுப் பெயர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் ஆராய்வதையே தன் வாழ்க்கைப்பணியாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றிவரும் ஐயா அவர்களோடு ஓரங்கில் உரையாற்ற வாய்ப்பளித்த நன்னெஞ்சங்களுக்கு என் நன்றி. பயிலரங்க உரைகாட்சிகள் :

தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை
முனைவர் தி. செல்வம் ஐயா அவர்களின் உரைக்காட்சி
தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை
என்னுரை
என்னுரை (அண்மைக் காட்சி)
ஆய்வாளர் பரமசிவம் வினாத் தொடுத்தல்
1 கருத்து:
magilchi aiya
கருத்துரையிடுக