வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு -93


திணை இலக்கியம்

96.        ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லை எனச் சொல்லியவர்?
உகாய்க்குடிகிழார் (குறுந். 63ஆம் பாடல்).

97.        கடுந்தோட்கரவீரன் பாடிய மந்தியின் செயல் என்ன?
தன் துணை பிரிந்ததெனத் தன் குட்டியை உறவுகளிடம் சேர்த்துவிட்டுக் கைம்மையைப் பொறுக்காது மலையிலிருந்து குதித்து உயிர்விட்டது (குறுந்தொகை 68).

98.        பொன்மலி பாடலியைப் பாடிய புலவர்?
படுமரத்து மோசிகீரனார் (குறுந். 75ஆம் பாடல்).

99.        மாலை நேரத்தில் குஞ்சுகளுக்கு உணவு எடுத்துச்செல்லும் பறவையைப் பாடிய புலவர்?
தாமோதரன் (குறுந். 92ஆம் பாடல்).

100.   ரியவரசன் யாழ்ப்பிரமத்தன் கூறிய வாழ்வியல் நீதி என்ன?
அறிந்த ஒரு உண்மையை மறைந்துச் சாட்சி சொல்லல் ஆன்றோர்க்கு இயல்பு இல்லை (குறுந். 184ஆம் பாடல்).

கருத்துரையிடுக