வியாழன், 26 ஏப்ரல், 2012

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 91


திணை இலக்கியம்
86.        உ. வே. சா.வின் 50 ஆண்டுகால உழைப்பில் வெளிவந்த பழந்தமிழ் உரைப்பதிப்பு எது?
குறுந்தொகை உரைப்பதிப்பு (1887 - 1937).

87.        குறுந்தொகையில் முதன்முதலாக உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றைப் பகுத்துக் காட்டியவர் யார்?
தி. செளரிப்பெருமாள் அரங்கசாமி. உள்ளுறைப் பாடல்கள் 18. இறைச்சிப் பாடல்கள் 30.

88.        குறுந்தொகையுள் மிக அதிகமான பாடவேறுபாடுகள் காட்டப்பெற்ற பாடல் எது?
உ.வே.சா. உரைப்படி குறுந். 99ஆம் பாடல் (13 பாடவேறுபாடுகள்). ரா. இராகவையங்கார் உரைப்படி குறுந். 256ஆம் பாடல் (27 பாடவேறுபாடுகள்).

89.        பெண் கூந்தலின் மணத்தைப் பற்றிப் பாடிய குறுந்தொகைப் புலவர் யார்?
இறையனார் (குறுந்.2ஆம் பாடல்).

90.        குறிஞ்சிப் பூவின் தேனடைக்குத் தலைவனின் காதலை உவமை கூறும் சங்க நூல் எது?
குறுந்தொகை (3ஆம் பாடல்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...