எம்.எசு.ஆபிசு மென்பொருளில் தமிழ் அகரவரிசைப் படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆங்கிலச் சொற்களை அகரவரிசைப் படுத்துவது தொடக்கம் முதலே எம்.எசு.ஒ. மென்பொருளில் இருந்து வந்தது. ஆனால் தமிழ்ச் சொற்களை அகரவரிசைப்படுத்துவதற்குத் தனி மென்பொருட்களையே இதுவரை நாடவேண்டி வந்தது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழி உண்டா? என மதுரைத் திட்டக்குழுவின் தலைவர் பேராசிரியர் முனைவர் கு.கல்யாண சுந்தரம் அவர்களை நேரில் கண்டபோது வினவினேன். அவர்களும் எம்.எசு.ஓ. மென்பொருளில் எக்செல் படிமையில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த சொற்களை அகரவரிசைப்படுத்த முடியும் என்று வழிகாட்டினார்.
அதன்பின்னர் அண்மையில் எம்.எசு.ஓ. 2007 வேர்டு படிமையில் இயங்கிக் கொண்டிருந்தபோது அட்டவணைகளாக உள்ளவற்றிலும், பிறவகைகளிலும் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலும், டாம் வகை எழுத்துருக்களாலும் அமைந்த சொற்களை அகரவரிசைப் படுத்த இயலும் என்பது தெரியவந்தது. நான் அறிந்த ஒரு செய்தியை உலகுக்குச் சொல்லிவைத்தேன். தமிழன்பர்கள் பயன் கொள்வாராக.
செய்முறைகள்:
1. அகரவரிசைப்படுத்த வேண்டிய அட்டவணையின் பெட்டியைத் தேர்வு செய்க.
2. வேர்டு படிமையில் உள்ள சார்ட் என்ற பகுதியைச் சுட்டுக.
3. சார்ட் என்ற பெட்டிச் செய்தி திறக்கும். அதில் பெட்டி எண் 1/2/3/4/5 என எதாவதொன்றைத் தேர்வு செய்க.
4. ஏறுவரிசையா? இறங்கு வரிசையா? என்பதைச் சரிபார்த்து சரி என்ற பட்டியைச் சொடுக்குக. அகரவரிசையில் சொற்களைக் காணமுடியும். பத்திகளையும் இவ்வாறே அகரவரிசைப் படுத்தலாம். முயன்று பார்க்க.
என்னுடைய நூலொன்றுக்காக நான் அகர வரிசைப்படுத்திய பெரிய அட்டவணை ஒன்றின் ஒரு சிறு பகுதி. அகர வரிசைப்படுத்தும் முன்னர்:
வ. எண்.
|
காலம்
|
நூல்/ பகுதி, உரை
|
பதிப்பாசிரியர்
|
குறிப்பு
|
1.
1
|
1847
ஆக.
(பிலவங்க ஆவணி)
(1848 என்றும் கருத்துண்டு)
|
தொல்காப்பியம் எழுத்த்திகாரமும்
நச்சினார்க்கினியர் உரையும்
|
மழவை மகாலிங்கையர்
|
தொல்காப்பிய முதற்பதிப்பு.
திருவண்ணாமலை வீரபத்திரையரால் அவருடைய கல்விக்கடல் அச்சகத்தில்
பதிப்பிக்கப்பட்டது.
|
2.
2
|
1858
|
தொல்காப்பிய நன்னூல்
|
சாமுவேல் பிள்ளை
|
தொல். நன். மூலமும் விளக்கங்களும் (ஆங்கிலத்தில்)
உள்ளன. சென்னப்பட்டணம், கிறித்து மதக்கியான விலக்கச் சங்கத்தின்
அச்சுக்கூடத்தில் கானர் துரையால் அச்சிடப்பட்டது.
|
3.
3
|
1866 (அ௯ய கார்த்திகை)
|
தொல்காப்பியச் சூத்திர விருத்தி,
இலக்கண விளக்கச் சூறாவளி
|
ஆறுமுக நாவலர்
|
திருவாவடுதுறை ஆதின ஸ்ரீசுப்பிரமணிய
தேசிக சுவாமிகள் கட்டளைப்படி, சென்னப்பட்டணம் கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில்
அச்சிடப்பட்டது. பொது, சிறப்புப் பாயிரங்கள், நூன்மரபு முதல் நூற்பா உரை மட்டும்.
|
4.
4
|
1868
செப்.
(விபவ, புரட்டாசி)
|
தொல்காப்பியச் சொல்லதிகாரம் – சேனாவரையர்
உரை
|
சி. வை. தாமோதரம் பிள்ளை
|
சேனாவரையத்தின் முதற்பதிப்பு. ஆறுமுக
நாவலரால் பரிசோதிக்கப்பட்டு, சென்னப்பட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரின்
கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
|
5.
5
|
1868 நவ.
|
தொல்காப்பியச் சேனாவரையம்
|
கோமளபுரம் இராசகோபால பிள்ளை
|
இடைச்சொல்லியல், உரிச் சொல்லியல் என்பன இவர் தரும் இயல் தலைப்புக்கள். பு.
கந்தசாமி முதலியாரால் வர்த்தமான தரங்கிணீ சாகை அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
|
6.
6
|
1868 நவ. (விபவ,
கார்த்திகை)
|
தொல்காப்பியம் எழுத்ததிகாரமும்
இளம்பூரணர் உரையும்
|
திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய
செட்டியார்
|
எழுத்ததிகார இளம்பூரணர் உரையின்
முதற்பதிப்பு. கன்னியப்ப முதலியாரால் சென்னை, அத்திநீயம் அண்ட் டேலி பிரான்ச்
அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
|
7.
7
|
1885 (பார்த்திப ஆவணி என முதற்பக்கத்திலும், பதிப்புரையில் பார்த்திப ஐப்பசி
என்றும் உள்ளது. இதனைப் பார்த்திப ஐப்பசிப் பதிப்பெனக் கொள்வதே பொருத்தமுடையது.
|
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்
|
சி.வை. தாமோதரம் பிள்ளை
|
பொருளதிகாரம் முழுமைக்கும்
நச்சினிக்கினியர் உரையெனக் கருதியே பதிப்பித்துள்ளார். பின்னான்கு இயல்களின் உரை பேராசிரியர் உரையாகும்.
”மெட்ராஸ் ஸ்காட்டிஷ் பிரஸ்” அச்சகத்தில்
கிரேவ்ஸ், கூக்சன் நிறுவனத்தாரால் அச்சிடப்பட்டது. இப்பதிப்பின் அச்சகத்தைச்
சிலர் வேறுபடக் குறித்துள்ளனர்.
|
8.
8
|
1891 சூன்
(கர வைகாசி)
|
தொல்காப்பியம் எழுத்திகாரம் நச்சினார்க்கினியர்
|
சி.வை. தாமோதரம் பிள்ளை
|
சென்னபட்டணம் வித்தியாநுபாலன
யந்திரசாலையில் அச்சிடப்பட்டது.
|
9.
9
|
1892 (நந்தன புரட்டாசி)
|
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர்
|
சி.வை. தாமோதரம் பிள்ளை
|
சொல்லதிகார நச்சினார்க்கினியரின் உரைக்கு
முதற்பதிப்பு. சென்ன பட்டணம் விக்டோரியா ஜிபிலி யந்திரசாலையில்
அச்சிடப்பட்டது.
|
10.
10
|
1905
|
தொல்காப்பியச் சண்முக விருத்தியின்
முதற்பகுதியாகிய பாயிரவிருத்தி
|
வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்
|
பொது சிறப்புப் பாயிர விருத்தி உரை
மட்டும். தஞ்சாவூர் ஸ்ரீவித்தியா விநோதினி முத்திரா சாலையில்
அச்சிடப்பட்டது.
|
அகர வரிசைப்படுத்திய பின்னர்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக