திருக்கனூர், உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் கடந்த 12.12.12 முதல் 21.12.12 வரை பத்துநாள் பயிலரங்கு ஒன்றினைத் தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் என்ற தலைப்பில் நடத்தியது. புதுச்சேரி கல்வியியல் கல்லூரிகளின் வரலாற்றில் ஒரு புதிய, அரிய சாதனையாக மலர்ந்த இப்பயிலரங்கு கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் ஆற்றல் வாய்ந்த வழிகாட்டலில் நடைபெற்றது. கல்லூரித் துணை முதல்வர் பேரா. உஷா இலட்சுமணண் அவர்களும், தாகூர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. மணி அவர்களும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர். சிற்றூர்ப் புறத்தில் அமைந்த இக்கல்லூரியில் இத்தகைய பத்துநாள் பயிலரங்கு நடைபெற்றது ஒரு மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும். அப்பயிலரங்கின் அழைப்பிதழ் இது.
தொடக்கவிழா, நிறைவுவிழா அழைப்பிதழ்கள்
பயிலரங்கில் உரையாற்றும் அறிஞர் பெருமக்களும் தலைப்புக்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக