ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுச் சிறப்பு மலர்க் கட்டுரை- நாகம கூளப்ப நாயக்கன் காதல்: பதிப்புக்கள் அறிமுகம்

 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுச் சிறப்பு மலர்க் கட்டுரை

மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுச் சிறப்பு மலரில் நாகம கூளப்ப நாயக்கன் காதல்: பதிப்புக்கள் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த என் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரை வழங்க வழிகாட்டிய பேரன்புக்குரிய நண்பர் புதுவை சீனு. தமிழ் மணி அவர்களுக்கும், மலராசிரியர் சுகவனம் முருகன் அவர்களுக்கும் நன்றி மலர்கள். இனி, கட்டுரை.
























ஞாயிறு, 30 ஜூலை, 2023

சிவகங்கைச் சரித்திரக் கும்மி - தினகரன் இதழ் - மதிப்பீடு (30.07.2023)

 சிவகங்கைச் சரித்திரக் கும்மி - தினகரன் இதழ் - மதிப்பீடு (30.07.2023)

முனைவர் ஆ. மணி ஆராய்ந்து பதிப்பித்த சிவகங்கையின் வரலாற்றைக் கூறும் கும்மிப் பாடலாகிய சிவகங்கைச் சரித்திரக் கும்மி என்ற சிவகங்கை நகர்க் கும்மி என்னும் நூல் காவ்யா பதிப்பக வெளியீடாக முன்னர் வெளிவந்தது. அப்பதிப்பு நூல் பற்றிய அறிமுக மதிப்பீடு தினகரன் நாளிதழில் இன்று 30.07.2023 ஞாயிறு அன்று சண்டே ஸ்பெஷல் என்னும் தொகுதியில் படிச்சுதான் பாருங்க என்னும் பகுதியில் (ப.1) வெளிவந்தது. அது உங்கள் பார்வைக்கு.

சிவகங்கை நகர்க் கும்மியை நான் பதிப்பிக்கக் காரணமாக அமைந்த பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. 






வியாழன், 13 ஜூலை, 2023

பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு: அரிமா நோக்கு இதழ்க் கட்டுரை

                                  பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு:                                        அரிமா நோக்கு இதழ்க் கட்டுரை

அரிமா நோக்கு - சூலை 2023 இதழில் நான் எழுதிய பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு என்னும் தலைப்பிலான கட்டுரை வெளிவந்துள்ளது. புறநானூற்றின் 34 ஆம் பாடலின் பாடம், அதன் வரலாறு ஆகியவற்றைச் சான்றுகளின் அடிப்படையில் விரித்து விளக்குகின்றது. இன்னார், இனியார் நோக்காது தரவுகளின் நெறிப்பட்ட ஆய்வாக அமைந்த இக்கட்டுரையை வெளியிடத் துணை நின்ற பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் ஐயா அவர்களுக்கும் இதழாசிரியர் ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கும், இதழ்க் குழுவினருக்கும் நன்றி.












சனி, 29 ஏப்ரல், 2023

முனைவர் ஆ. மணி எழுதிய, பதிப்பித்த நூல்கள்: படக்காட்சி

 முனைவர் ஆ. மணி எழுதிய, பதிப்பித்த நூல்கள்: படக்காட்சி






தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023

 

தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023

புதுச்சேரியின் முதல் பெண்கள் கல்லூரியான பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல் துறையான தமிழ்த்துறையில் கடந்த 2019 முதல் தமிழர் மரபு உணவுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகின்றது. அந்த ஆண்டே மாணவிகள் எழுதி, மாணவிகளாலே தொகுக்கப்பட்ட தமிழர் உணவு என்னும் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த ஆண்டும் இவ்விழா தமிழர் மரபு உணவுத் திருவிழா – 2023 என்னும் தலைப்பில் இன்று (11.04.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்குத் தலைமை தாங்கிய கல்லூரி முதல்வரும், மனையியல் துறைப் பேராசிரியருமாகிய முன்னைவர் ராஜி சுகுமார் அவர்கள் உணவுத் திருவிழா கண்காட்சியைத் தொடக்கி வைத்துத் தலைமையுரை ஆற்றினார். அவர் பேசியதாவது: உணவு என்பது ஓர் அறிவியல் கலை. அதைத் தான் எங்களின் மனையியல் துறை கற்பிக்கின்றது. மனித வாழ்வில் உணவுக்குப் பேரிடம் உண்டு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனத் தமிழ்ப் புலவராகிய திருமூலரும் உணவின் இன்றியமையாமையைப் பாடி இருக்கின்றார். பண்பாட்டுக்கும், மரபுக்கும், மண்ணுக்கும் ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு, பல்வகை நோய்களுடம் போராடி வரும் இக்காலத் தலைமுறைக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்பட, இது போன்ற உணவுத் திருவிழாக்கள் அவசியமானவை. இதனைச் செய்து வரும் தமிழ்த்துறையினருக்கு எமது பாரட்டுக்கள் என்றார்.

விழாவில் உணவுத் திருவிழா எதற்காக? நடத்துகின்றோம்?, இது போன்ற நிகழ்வுகளின் அவசியம் என்ன? ஆகியவை குறித்து நோக்கவுரையாற்றினார் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் . மணி வரவேற்புரை ஆற்றினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி நந்தினி நன்றி நவின்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மானவிகளும், முனைவர் . மணி மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

கண்காட்சியில் தமிழர் மரபு சார்ந்த உணவுப்பொருட்கள், தமிழர் விளையாட்டுப் பொருள் மாதிரிகள்; புழங்கு பொருள் மாதிரிகள் முதலானவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவியர் கண்காட்சியைக் கண்டுத் தமிழர் மரபுகள் குறித்த செய்திகளை அறிந்து மகிழ்ந்தனர்.

    


அழைப்பிதழ்

இதழ்ச் செய்திகள்










ஒருதலையா? ஒருகலையா? - காவ்யா இதழ்க் கட்டுரை

 ஒருதலையாஒருகலையா? - காவ்யா இதழ்க் கட்டுரை

காவ்யா தமிழ் 2014 அக்டோபர் இதழில் நான் எழுதிய ஒருதலையா? ஒருகலையா? கட்டுரை வெளிவந்துள்ளது. குறுந்தொகைக்கு 30 பதிப்புக்களுக்கு மேல் வெளிவந்த பின்னும் அதன் மூலபாடம் இன்னும் செம்மைப்படவில்லை என்பதை உணர்த்தும் கட்டுரை இது. மூலபாடம் செம்மையாக அமையாத போது அதன் அடிப்படையில் செய்யப்பட்ட முன்னைய ஆய்வுகள் திருத்தப்பட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. ஆய்வுரையை வெளியிட்ட பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி.








சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...