திங்கள், 14 அக்டோபர், 2013

செம்மொழி விருதுகள் வழங்கும் விழா - 09.10.2013

         இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழித் தமிழுக்கான விருதுகள் விழா 09.10.2013 அன்று பிற்பகல் 12 மணிக்குப் புதுதில்லியில் உள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ’தர்பார்’ கூடத்தில் நடைபெற்றது. விருது பெறும் அறிஞர்கள் விருது பெறும் ஒத்திகைக்காக முற்பகல் 10 மணியளவில் கூடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒத்திகை நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரி நடைமுறைகளை ஆங்கிலத்தில் விளக்கினார். அத்னைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிஅலுவலர் திருமிகு. கருணாகரன் அவர்கள் தமிழில் விளக்கினார். பார்வையாளர்கள் 11 மணி முதல் வரத் தொடங்கினர்.
       இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி அவர்கள் சரியாகப் பிற்பகல் 12 மணிக்குக் கூடத்திற்கு வந்தார். அவர் வரும்போது வாத்திய இசை முழக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய நாட்டுப் பண் கருவிகளில் இசைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் அவர்கள் இருக்கையில் அமர்ந்த பின்னர் மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அசோக் சிங்கால் அவர்கள் விருது வழங்கும் விழாவினைத் தொடக்க, குடியரசுத் தலைவரிடம் அனுமதி வேண்டினார். அனுமதி கிடைத்த பின்னர் அறிவிப்பாளர் விருது வழங்கும் விழா பற்றிய பின்புலங்களை இந்தியில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து முதன்முறையாகச் செம்மொழி விருதுகள், நிறுவனம் பற்றிய செய்திகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் திருமதி வி.கோ.பூமா அவர்கள் தமிழில் எடுத்துரைத்தார். இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி கண்ட நிறுவனத்தின் இயக்குநர் திருமதி வி.கோ.பூமா அவர்களுக்கும், பதிவாளர் முனைவர் முத்துவேலு அவர்களுக்கும், நிதிஅலுவலர் திருமிகு கருணாகரன் அவர்களுக்கும், ஆய்வறிஞர்கள் பேரா. கு. சிவமணி அவர்களுக்கும், முனைவர் ப. மருதநாயகம் அவர்களுக்கும், செம்மொழி நிறுவனத்தினருக்கும்,  மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அசோக் சிங்கால் அவர்களுக்கும், மனிதவள மேம்பாட்டுத் துறையினருக்கும், குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளுக்கும் தமிழறிஞர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்குப் பின்புலமாக இருந்த தமிழ் அமைப்புக்கள் நன்றிக்குரியன.
         தமிழ் அறிவிப்புக்குப் பின்னர் முதலில் தொல்காப்பியர் விருது பற்றியும் விருதுக்குரியவர் பற்றியதுமான அறிவிப்பு இந்தியில் செய்யப்பட்டது. முதலில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய தொல்காப்பியர் விருதினைப் பெற்றார். 2010 -11 ஆம் ஆண்டுக்குரிய தொல்காப்பியர் விருதினை முனைவர் தமிழண்ணல் அவர்கள் பெற்றார்.  அதன் பின்னர் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய குறள்பீட விருதினை செக் நாட்டு அறிஞர் வாசேக் பெற்றார். பின்னர் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய இளம் தமிழறிஞர் விருதுகளை முனைவர் சுரேசு, முனைவர் சே. கல்பனா, முனைவர் நா. சந்திரசேகர், முனைவர் வாணி அறிவாளன், முனைவர் சோ. முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் பெற்றனர்.
      2010 -11 ஆம் ஆண்டுகுரிய இளம் தமிழறிஞர் விருதுகளை முனைவர் து. சங்கையா, முனைவர் அ. செயக்குமார், முனைவர் ஆ. மணி, முனைவர் சி. சிதம்பரம், முனைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பெற்றனர். குறள்பீட விருது பெற்ற முனைவர் சான் மார் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை.
          அனைவருக்கும் விருதுகளும் பொன்னாடைகளும் வழங்கப்பட்ட பின்னர் மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அவர்கள் விழாவினை நிறைவு செய்வதற்கான அனுமதியைக் குடியரசுத் தலைவரிடம் வேண்டினார். அனுமதி கிடைத்ததும் கருவிகளின் இசையிலான நாட்டுப்பண்ணுடன்  விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து விருது பெற்றோர் குடியரசுத் தலைவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், செயலர் ஆகியோருடன் குழுப் படம் எடுத்துக் கொண்டனர். நிறைவாக, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. விழாப் படங்கள் இதோ:

 குடியரசுத் தலைவரின் வருகை
 நாட்டுப்பண் இசைத்தல்.
 முனைவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தொல்காப்பியர் விருது பெறல்.
  முனைவர் தமிழண்ணல் அவர்கள் தொல்காப்பியர் விருது பெறல்.
  முனைவர் வாசேக் அவர்கள் குறள்பீட விருது பெறல்.
 முனைவர் சுரேசு அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் நா. சந்திரசேகரன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் வாணி அறிவாளன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சோ. முத்தமிழ்ச் செல்வன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் து. சங்கையா அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் அ. செயக்குமார் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் ஆ. மணி அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சுந்தரபாண்டியன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
  குடியரசுத் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலர் ஆகியோருடன் செம்மொழி விருதுகள் பெற்றோர்.

9 கருத்துகள்:

Nayagar சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு
வணக்கம்
பாராட்டுக்கள்
இவ்விருது உங்கள் வெற்றியின் நல்லதொரு தொடக்கமாக அமையட்டும்.
தங்கள் இலக்கியப் பணி சிறக்க,தொடர
வாழ்த்துக்கள்
அன்புடன்
வெங்கட சுப்புராய நாயகர்
பிரஞ்சுப் பேராசிரியர்
புதுச்சேரி

Nayagar சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு
வணக்கம்
பாராட்டுக்கள்
இவ்விருது உங்கள் தொடர் வெற்றியின் நல்லதொரு தொடக்கமாக அமையட்டும்.
தங்கள் இலக்கியப் பணி சிறக்க
வாழ்த்துக்கள்
அன்புடன்
வெங்கட சுப்புராய நாயகர்
பிரஞ்சுப் பேராசிரியர்
புதுச்சேரி

Nayagar சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு
வணக்கம்
பாராட்டுக்கள்
இவ்விருது உங்கள் தொடர் வெற்றியின் நல்லதொரு தொடக்கமாக அமையட்டும்.
தங்கள் இலக்கியப் பணி சிறக்க
வாழ்த்துக்கள்
அன்புடன்
வெங்கட சுப்புராய நாயகர்
பிரஞ்சுப் பேராசிரியர்
புதுச்சேரி

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும், எமது அன்பான வணக்கங்களும். மிகச்சிறப்பாக விழாவினைக் காணமுடியாதவர்களும் கண்டுரசிக்கும்படி தொகுத்து வழங்கியிருக்கும் முனைவர்.ஆ.மணி அவர்களுக்கு நன்றி. தங்களது தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள்.

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும், எமது அன்பான வணக்கங்களும். மிகச்சிறப்பாக விழாவினைக் காணமுடியாதவர்களும் கண்டுரசிக்கும்படி தொகுத்து வழங்கியிருக்கும் முனைவர்.ஆ.மணி அவர்களுக்கு நன்றி. தங்களது தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்.

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சொன்னது…

அன்புடன் முனைவர் ஆ.மணி அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்.

இவண்

முனைவர் இர.வாசுதேவன்
சென்னை

பெயரில்லா சொன்னது…

அருமையாகத் தொகுத்து உள்ளீர்கள். பாராட்டுகள்.
தமிழில் செம்மொழி விருது விழா நடக்கக் காரணமாக இருந்த அமைப்புகள் தமிழ்க்காப்புக்கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும்தான். அவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கலாம். கடந்த முறை இவற்றின் தெ்ாடர் முயற்சிளால்தான் இளம் அறிஞர்களுக்கான செம்மொழி விருதுகள் வழங்கப்பட்டன. இம்முறை தமிழில் விழாக்கள் நடத்தப்பட்டது. அடுத்து மூத்த அறிஞர்களுக்கான வாழ்நாள் நிதியுதவி அளிக்கும் செம்மொழி விருதுகளை வழங்கப் போராடும் இவ்வமைப்புகள் இதிலும் வெற்றி காணும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் , தலைவர், தமிழ்க்காப்புக் கழகம், ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார இலக்கிய இணையம்/தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...