வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் கலித்தொகை பற்றிய நாடளாவிய கருத்தரங்கு - அழைப்பிதழ்

           காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் பண்பாட்டியல் - சமூகவியல் - மொழியியல் நோக்கில் கலித்தொகை என்னும் பெயரிய நாடளாவிய அளவிலான கருத்தரங்கு எதிர்வரும் 12.02.14 புதன் கிழமை முதல் 14.02. 14 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவரின் இளந் தமிழறிஞர் விருது பெற்ற முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்துகின்றார்.
        துறைசார் வல்லுநர்கள் பலர் பங்கேற்க உள்ள இக்கருத்தரங்கில் ஆர்வமுடையோர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் பெற்றுப் பங்கேற்கலாம். வருக செந்தமிழ் பருக. அழைப்பிதழ் இதோ.


அழைப்பிதழ் முதல் பக்கம்
 அழைப்பிதழ் இரண்டாம் பக்கம்


1 கருத்து:

மணிவானதி சொன்னது…

சிறப்பனதொரு தலைப்பில் கருத்தரங்கம் நடத்தும் முனைவர் சிதம்பரத்திற்கும் கருத்தரங்கில் ஆய்வுகட்டுரை வழங்கும் பேராசிரியர் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.