சனி, 1 பிப்ரவரி, 2014

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரிப் பயிலரங்கு (23.12.13)செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியால் சிவகாசியில் உள்ள ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பரமசிவம் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய தொல்காப்பிய உரையாசிரியர்கள் என்னும் தலைப்பிலான பயிலரங்கில் 23.12.13 (திங்கட்கிழமை) அன்று முற்பகல் (10 முதல் 1 மணி வரை) முனைவர் ஆ. மணி ”சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பெறாஅர் – உரைவழி விளக்கம்”, “சிவலிங்கனார் உரை, பதிப்பு நெறிகள்” ஆகிய இரு தலைப்புக்களில் உரையாற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் கோமதி அழகு அவர்கள் பயிலரங்கச் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையாற்றினர். உரைக் காட்சிகள் இவை.

 பயிலரங்க அழைப்பிதழ் முன்பக்கம்
பயிலரங்க அழைப்பிதழ் பின்பக்கம்

 பயிலரங்க அரங்கில் தாகூர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் தி. செல்வம், முனைவர் ஆ. மணி ஆகியோர்.
 சிறப்பு விருந்தினர் அறிமுக உரை : பேரா. கோமதி அழகு அவர்கள்.

 முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை : ”சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பெறாஅர் – உரைவழி விளக்கம்”.
 மாணவி வினாக் கேட்டல்.


 முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை : “சிவலிங்கனார் உரை, பதிப்பு நெறிகள்”


மாணவர் வினாக் கேட்டல்.

2 கருத்துகள்:

ponmudivadivel Ponmudi சொன்னது…

'அறிமுக உரையாற்றினர்' என்பதில் 'அறிமுக' என்பது தனிச்சொல்லா?

மகரவீறு கெட்டபின்னும் அது புணராதுநிற்பதேன்?

'அறிமுகவுரை' என உடம்படுமெய்தந்து ஒரேதொடராய் புணர்த்துவதுசரியா,

'அறிமுக உரை' என இரண்டாயெழுதுவதுசரியா?

புணர்ச்சியில்லாதவிடத்து மகரவீறு கெடுமா?

ponmudivadivel Ponmudi சொன்னது…

'அறிமுக உரையாற்றினர்' என்பதில் 'அறிமுக' என்பது தனிச்சொல்லா?

மகரவீறு கெட்டபின்னும் அது புணராதுநிற்பதேன்?

'அறிமுகவுரை' என உடம்படுமெய்தந்து ஒரேதொடராய் புணர்த்துவதுசரியா,

'அறிமுக உரை' என இரண்டாயெழுதுவதுசரியா?

புணர்ச்சியில்லாதவிடத்து மகரவீறு கெடுமா?