திங்கள், 2 நவம்பர், 2015

குறுந்தொகை: நூலாராய்ச்சி (பகுதி - 8): பொழுதுகள்

குறுந்தொகை: நூலாராய்ச்சி (பகுதி - 8): பொழுதுகள்

  கூதிர்
            ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் கூதிர்க் காலம். இப்பருவத்தில் குளிர் காற்று வீசும்; மழை பெய்த பின்பு எஞ்சிய துளிகளை மேகம் துளிக்கும்; அதனைச் சில்பெயல் என்பர். இப்பருவத்தில் கரும்பு பொதியவிழும்; ஈங்கைக்கொடி மலரும். கூதிர்ப் பருவத்தில் வீசும் வாடையின் குளிரினால் மக்கள் நடுங்குவர்; விலங்குகளும் பறவைகளும் துன்புறும். இக்காலத்தில் தலைவரோடு இருத்தலைத் தலைவியர் விரும்புவர்.
முன்பனி
            மார்கழி, தை மாதங்கள் முன்பனிப் பருவமாகும். இதனை அற்சிரம் என்றும், அச்சிரம் என்றும் வழங்குவர். இக் காலத்தில் வடகாற்று சிறிது வீசும். பனித் திவலை தண்ணென வீசும். மக்கள் வெந்நீரை உண்பதில் விருப்பம் உடையராவர். அவரை மலரும்; உழுந்தும் பயறும் முதிரும்.
பின்பனி
            மாசி, பங்குனி மாதங்கள் இப்பருவமாகும். பின்பனிக் கடை நாள் தண்பனி யச்சிரம் என்று இப்பருவத்தை ஒரு புலவர் குறிக்கின்றார். தண்ணிய பனித் துளியைக் காற்று வீசும்போது அத்துளிகள் நூலற்ற முத்துக்களைப் போலத் தோற்றுகின்றனவென ஒரு புலவர் புனைகின்றார்.
வேனில்

வேனிலில் இளவேனில், முதுவேனில் என இரு வகைகள் உண்டு. இளவேனில் காலத்தில் கோங்கும் இருப்பையும் மலரும். அரைத்த சந்தனம் தண்ணென்று இருக்கும். நன் மகளிரும் தண்மையை அடைவர். முதுவேலில் மலையைச் சார்ந்த இடங்களில் பாலையின் இயல்பு உண்டாகும்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...