வியாழன், 5 செப்டம்பர், 2013

முனைவர் ஆ. மணி

புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் . மணி அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில்  நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விருதினை வழங்கவுள்ளார்.
            செம்மொழி இலக்கண, இலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் ஐவருக்கு இளந்தமிழறிஞர் விருதுகளை  வழங்கி வருகின்றது. அவ்வகையில் அண்மையில் 2009 -10, 2010 – 11 ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதில் 2010 – 11 ஆம் ஆண்டுக்குப் புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் . மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் கா. ஆறுமுகம், . தேவகி ஆகியோருக்கு 1976 ஆம் ஆண்டில் முதல் மகனாகப் பிறந்த . மணி,  இளநிலைப் பட்டத்தைத் திருச்சி, சமால் முகமது கல்லூரியிலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தை மதுரை, யாதவர் கல்லூரியிலும் பெற்றவர்.
     
    உலக, இந்திய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் பங்கேற்று 65 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். தமிழகத்திலும் புதுவையிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியுதவியுடன் நடைபெற்ற கருத்தரங்கு, பயிலரங்குகளில் வள அறிஞராகப்  பங்கேற்று 25 ஆய்வுரைகளை வழங்கியுள்ளார். இந்திய அளவிலான இரண்டு கருத்தரங்குகளையும், ஒரு பயிலரங்கினையும் இந்திய அரசு நிறுவனங்களின்  நிதியுதவி பெற்று நடத்தியுள்ளார்.  
குறுந்தொகைத் திறனுரைகள், காலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள், குறுந்தொகை உரைநெறிகள், ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் ஆகிய ஐந்து நூல்களை எழுதியிருப்பதோடு, பல்துறைநோக்கில் தொல்காப்பியம்தொகுதி 1, 2 ஆகிய இரு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களில் குறுந்தொகை என்னும் ஆய்வுத் திட்டத்தைச் செய்து முடித்துள்ளார்.

    புதுவை அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைகளில் முதன்முறையாகப் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு உதவியோடு இதழியல், மக்கள் தகவலியல் என்னும் சான்றிதழ்ப் பாடத்தினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றார்.
            
   குறுந்தொகை உரைநெறிகள் என்னும் இவர்தம் ஆய்வு நூலினை உலகப்பேரறிஞர் ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்கள் சங்க இலக்கிய ஆய்வுகளுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் ஆய்வு எனப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. முனைவர் . மணி என்னும் பெயரிலேயே தமிழ் வலைப்பூ ஒன்றினை உருவாக்கித் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் தொடர்பான செய்திகளை எழுதி வருகின்றார். தகுதியான ஆய்வுகளின் மூலம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் பற்றிய புதிய பல உண்மைகளை வெளியிட்டு வரும் முனைவர் ஆ. மணி, இந்தியக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்றிருப்பது உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்னும் பொன்மொழிக்குச் சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.



புதன், 4 செப்டம்பர், 2013

முனைவர் ஆ. மணிக்குக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது

      புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் . மணி அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருது வழங்கப்படவுள்ளது. புதுதில்லியில்  நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விருதினை வழங்கவுள்ளார்.  தமிழ் நாளிதழ்களில் அது பற்றி வெளியான செய்திகளின் படப்படிகள் இதோ.

தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி (04.09.13, ப. 2)

தமிழ் முரசு மாலை இதழ்ச் செய்தி (04.09.13, ப. 2)





குடியரசுத்தலைவர் விருதுகள் அறிவிப்பு

     செம்மொழி இலக்கண, இலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தி வருவோரை  ஊக்கப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் விருதுகளை  வழங்கி வருகின்றது. அவ்வகையில் அண்மையில் 2009 -10, 2010 – 11 ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.  தமிழ் நாளிதழ்களில் அது பற்றி வெளியான செய்திகளின் காட்சி இதோ.

தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி (03.09.2013, ப. 3)


தினமணி நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 9)

தினகரன் நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 4)

தினமலர் நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 2)

புதன், 7 ஆகஸ்ட், 2013

சுதா மேனிலைப் பள்ளி வெள்ளிவிழா

    புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் அஞ்சலையம்மாள் அறக்கட்டளை என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி, பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி வளத்தைப் பெருக்கும் வகையில் சுதா மேனிலைப் பள்ளி, உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றைத் தொடக்கித் திறம்பட நடத்தி வருகின்றார் கல்வியாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். அவருடைய நற்சிந்தனைகளால் வளர்ந்து வரும் சுதா மேனிலைப் பள்ளியின் இருபத்து ஐந்தாம் ஆண்டு விழா வெள்ளிவிழாவாகக் கடந்த 30.03.2013 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. கல்வியாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையில் நடந்த அவ்விழாவில் புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் முனைவர் ஆ. மணி அவர்களும், முனைவர் கு. ஞானகுரு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அவ்விழாவின் படத்தொகுப்பு இங்கு. பணி மிகுதியால் இப்போதுதான் இதனைப் பதிவிட முடிந்தது. நன்றி. 

வரவேற்புரை : திரு இராஜகோபால் அவர்கள்,  (முதல்வர், சுதா மேனிலைப் பள்ளி)

விழா அரங்கின் தோற்றம்
ஆண்டறிக்கை வாசித்தல்.

முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்


முனைவர் கு. ஞானகுரு அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்
தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

கல்வியாளர் ம. பச்சையப்பன் அவர்களின் படத்திறப்பு விழா.
முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் தலைமையுரை

முனைவர் ஆ. மணி அவர்களின் சிறப்புரை 
முனைவர் கு. ஞானகுரு அவர்களின் வாழ்த்துரை
விழாவில் பங்கேற்றோர்

போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கல்

தாகூர் கலைக்கல்லூரியில் இதழியல், மக்கள் தகவலியல் - சான்றிதழ்ப் பாடத் தொடக்கவிழா

        தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை தொடங்கப்பட்டு ஏறத்தாழ 53 ஆண்டுகள் ஆகின்றன. அத்துறையில் இதுவரை இல்லாத நிகழ்வாக; புதியதொரு வரலாறாக; முதன்முறையாகப் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் உதவியுடன் இதழியல், மக்கள் தகவலியல் - சான்றிதழ்ப் பாடம் இக்கல்வியாண்டு முதல் தொடக்கப்பட உள்ளது. அதன் தொடக்கவிழா இன்று (07.08.2013 புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நிகழவுள்ளது. தமிழன்பர்கள் பங்கு கொள்ள வேண்டுகின்றேன். அழைப்பு மடல் இத்துடன் இணைக்க ப்பட்டுள்ளது.

 அழைப்பிதழ் பக்கம் -1
அழைப்பிதழ் பக்கம் -2

செவ்வாய், 7 மே, 2013

தாகூர் கலைக்கல்லூரி - தொல்காப்பியத் தேசியக் கருத்தரங்கு

புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும் புதுச்சேரி, பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையும் இனைந்து நடத்திய பல்துறை நோக்கில் தொல்காப்பியம் என்ற இருநாள் நாடளாவிய கருத்தரங்கின் படத்தொகுப்பு இவண் தரப்படுகின்றது. இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் ஆ. மணி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கு தாகூர் கலைக்கல்லூரியின் வரலாற்றில் நூல் வெளியீட்டுடன் கூடிய முதல் கருத்தரங்க நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அரங்கப் பதாகை

மாணவியர் கைவண்ணம்
முனைவர் ஆ. மணியின் அறிமுக உரை
முனைவர் தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்கள் குத்துவிளக்கேற்றிக் கருத்தரங்கைத் தொடக்குதல்

புறப் பதாகை
கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்களின் தலைமையுரை.
பேரளர்ப் பதிவில் பேராசிரியரும் மாணவியரும்
அறிஞர் தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்களின் சிறப்புரை.
முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் உரை
புது தில்லி, ஜவர்கர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் அவர்களின் உரை.
பார்வையாளர்கள்
இணை அமர்வுகளில் கட்டுரைகள்
முனைவர் சிலம்பு செல்வராசு அவர்களின் உரை

பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் உரை
பார்வையாளர் பகுதியில் முனைவர் மாதையன், முனைவர் அறவேந்தன், முனைவர் சம்பத் ஆகியோர்

முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களின் உரை

முனைவர் ப. மருதநாயகம் அவர்களின் உரை
தமிழ்த்துறைத் தலைவரின் அறிஞர் அறிமுக உரை. மேடையில் முனைவர் இரா. அரவேந்தன், முனைவர் பெ. மாதையன் ஆகியோர்.

முனைவர் சிவ. மாதவன் அவர்களின் உரை
மாணவர் கருத்துரை
நிறைவு விழாவில் பங்கேற்ற முனைவர் இராமசாமி அவர்களுக்கு கல்லூரிப் பொறுப்பு முதல்வர் ஜெயச்சந்திரன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கல்
பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையின் தலைவர் முனைவர் சுப்பராயலு அவர்களுக்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பத்மாசனி அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்
பேராசிரியர் முனைவர் க. இராமசாமி அவர்களின் நிறைவுப் பேருரை.
முனைவர் சுப்பராயலு அவர்களின் வாழ்த்துரை



சனி, 27 ஏப்ரல், 2013

தமிழ் இலக்கிய வினாடி - வினா 2011

  • கடந்த 2011இல் தாகூர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்காக முனைவர் ஆ. மணி நடத்திய தமிழ் இலக்கிய வினாடி வினா - 2011 நிகழ்ச்சியின் படத் தொகுப்பு உங்கள் பார்வைக்குத் தரப்படுகின்றது.



வியாழன், 11 ஏப்ரல், 2013

முனைவர் ஆ. மணியின் ஆய்வுப் பொருண்மைகள் - 1


    தமிழில் நிகழும் ஆய்வுகள் பற்றிய கருத்துக்கள் உலகுக்கு உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து எனக்குண்டு. ஆனால் அது எளிமையான செலன்று என்பதை நம் பட்டறிவு நமக்கு உணர்த்துகின்றது. எனினும் ஒவ்வொருவரும் தாம் செய்து வரும்/ செய்துள்ள ஆய்வுகளைப் பற்றிய குறிப்புக்களை வழங்குவது அறிவுலகிற்குப் பயன்படும். அவ்வகையில் முனைவர் ஆ. மணி செய்துள்ள ஆய்வுப் பொருண்மைகள் பற்றிய குறிப்புக்கள் இவண் தரப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களில் குறிப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வ.எண். ஆய்வுரைத்தலைப்பு. நிதியுதவிய நிறுவனம்/அரங்கு,/ தலைப்பு.   நிகழ்ந்த இடமும் நாளும்.

1.  தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் (எழுத்து, சொல்).
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட தொல்காப்பியம் (எழுத்து. , சொல்.) பயிலரங்கு,
தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி, 04.11.2009.  

2.  திரிகடுகம் : 1950 இக்குப் பிற்பட்ட பதிப்புகளும் உரைகளும்.
நீதி இலக்கியம் பதிப்புகளும் வெளியீடுகளும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் & அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி,  2010.
தமிழ்த்துறை,      அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி,  03,04,05.02.2010.

3.  கானல்வரி.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட சிலப்பதிகாரப் பயிலரங்கு,               
கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், 04.03.2010.

4.  தொல்காப்பிய - சங்க இலக்கிய அறத்தொடு நிற்றல் மரபுகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளும் சங்க இலக்கிய மரபுகளும்' பயிலரங்கு,     
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம், 28.12.2010.

5.  பாடல் ஒன்றால் வென்ற சேயிழையர்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட சங்க இலக்கியப் பெண்பால் புலவர்கள்' கருத்தரங்கு,
அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி, வாலாசாப்பேட்டை, 30.12.2010.

6.  கலித்தொகை - இ.வை. அனந்தராமையர் பதிப்புநெறிகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட சங்க இலக்கியப் பதிப்புக்களும் சங்க இலக்கிய ஆய்வு வரலாறும்' பயிலரங்கு,   
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 07.01.2011.

7.  இலக்கண இலக்கிய உரைகளில் திருக்குறள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட திருக்குறளும் உரைகளும் ஆய்வுக்களங்கள் - பன்முகநோக்கு' பயிலரங்கு,      
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 22.01.2011.

8.  குறுந்தொகை விழுமியங்கள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத்தால் நடந்தப்பட்ட சங்க இலக்கியங்கள் போற்றும் விழுமியங்கள்' பயிலரங்கு,     
இளைஞர் விடுதி, சோலைநகர், புதுச்சேரி, 14.02.2011.

9.  சங்க இலக்கியக் கைக்கிளை மரபுகள்.  
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட சங்க இலக்கியப் பயிலரங்கு,     
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை, 20.02.2011.

10.  உரையாசிரியர்கள் பார்வையில் சாரியைகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்குஉரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,
அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, 21.02.2011

11.  பன்முகநோக்கில் குறுந்தொகை.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட சங்க இலக்கியப் பயிலரங்கு,  
சமால் முகம்மது கல்லூரி,  திருச்சி,  05.03.2011.

12.  உரையாசிரியர்களின் அகப்பொருள் பற்றிய நோக்கு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,        
மாநிலக் கல்லூரி, சென்னை, 07.12.2011.

13.  உரையாசிரியர்களின் இடைச்சொல் கோட்பாடு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,  
மாநிலக் கல்லூரி, சென்னை, 07.12.2011.

14.  சங்க இலக்கியம்வழி அறியப்பெறும் குறுநிலமன்னர் வரலாறு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால், 01.02.2012.

15.  தொல்காப்பிய முப்பொருள் கோட்பாடும் திணைக் கோட்பாடும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
புதுக் கல்லூரி, சென்னை, 02.02.2012.

16.  தொல்காப்பியப் பேராசிரியர் உரை பவானந்தர் பதிப்பு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 16.02.2012.

17.  தொல்காப்பியப் புணரியலும் குறுந்தொகையும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு,
கற்பகம் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், 18.02.2012.

18.  சிலப்பதிகார விழுமியங்கள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம், 01.03.2012.

19.  குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்.
செவ்வியல் படைப்புக்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள், பதிப்புத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 2012,ISBN: 978-81-922810-9-4.
பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 03.03.2012.

20.  தொல்காப்பிய வனப்புக் கோட்பாடு – அழகு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி, 11.03.2012.

21.  தொல்காப்பிய இடைச்சொல்லும் பிற்கால இலக்கணங்களும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, திருக்கனூர், புதுச்சேரி, 14.12.12.

22.  தொல்காப்பிய அகப்பொருளும் உரையாசிரியர்களும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, திருக்கனூர், புதுச்சேரி, 21.12.12.

23.  சிலப்பதிகாரக் கருத்தியல் : மீளாய்வு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வுநிறுவனம், புதுச்சேரி, 03.01.13.

24.  இளம்பூரணர் உரைநெறிகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு,    
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 10.01.13.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...