சனி, 11 பிப்ரவரி, 2012

மதுரை வேப்பந்தோப்பு - திருக்குறள் கருத்தரங்கு 05.02.2012

      மதுரைக்கு அருகில் உள்ள தொட்டியபட்டி என்ற சிற்றூரில் உள்ள தமது வேப்பந்தோப்பில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் திருக்குறள் தொடர்பான ஒரு பொருண்மையில் கருத்தரங்கு நடத்தி வருகின்றார் பொறிஞர் க.சி. அகமுடை நம்பி. பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்ற இவர் திருக்குறள்மீது கொண்ட தீராக்காதலால் ஆண்டுதோறும் ஆய்வரங்குகளை நடத்திவருகின்றார் என்பது நாம் மனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள இப்பொறிஞர் அவர்கள் தம்முடை பொருட்செலவில் ஆண்டுதோறும் 200பேர் கூடும்வகையில் இயற்கைச்சூழலில்/ வேப்பந்தோப்பில் கருத்தரங்கை நடத்திவருவது போற்றுதலுக்குரியது. வருமாண்டுகளில் இன்னும் பலராக நாம் பங்கேற்பது தமிழுக்கும் பொறிஞர் அவர்களுக்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாகும். 

       2012 ஆம் ஆண்டுக் கருத்தரங்கு திருக்குறளில் தவமும் துறவும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது. பேராசிரியர் முனைவர் க. திருமாறன் அவர்கள் தலைமையேற்று நடத்திய இக்கருத்தரங்கில் பெரும்பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் தொடக்கவுரையாற்றினார். பேராசிரியர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்கள் திருக்குறளில் தவமும் துறவும் - ஒரு புதுப்பார்வை என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். முனைவர் ஆ.மணி பழந்தமிழ் மரபில் தவமும் துறவும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து திருக்குறளில் தோய்ந்த பட்டறிவுடைய கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளைப் படைத்தளித்தனர். கருத்தரங்க காட்சிகள் இதோ:

  தொடக்கவுரை நிகழ்த்திய  முனைவர் தமிழண்ணல் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்.
 ஆய்வுரை நிகழ்த்திய  முனைவர் இ.கி. இராமசாமி அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்.
 கருத்தரங்கப் புரவலர் பொறிஞர் க.சி. அகமுடை நம்பி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார்  முனைவர் இ.கி. இராமசாமி அவர்கள்.
 முனைவர் இ.கி. இராமசாமி அவர்களின் ஆய்வுரை. தலைப்பு: திருக்குறளில் தவமும் துறவும் - ஒரு புதுப்பார்வை 
 முனைவர் க. திருமாறன் அவர்களின் தலைமையுரை
கருத்தரங்கச் சுவைஞர்
கருத்தரங்கச் சுவைஞர்
கருத்துரையிடுக