வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தொல்காப்பியக் கருத்தரங்கு 16.02.2012

        தமிழுக்குப் பெயர் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிதிநிறுவன நிதிநல்கையில் தொல்காப்பியப் பதிப்புக்களும் உரைகளும் என்னும் பெயரிய நாடளாவிய கருத்தரங்கு 14.02.12 முதல் 16.02.12 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. பல்கலைக் கழகப் புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் மு. வள்ளியம்மை அவர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்தினார். 
   
       சிறப்பாக நடைபெற்ற அம்மூன்றுநாள் கருத்தரங்கின் மூன்றாம் நாள் முற்பகல் அமர்வில் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்கள் அடிகளாசிரியரின் பதிப்புக்கள் குறித்தும், முனைவர் ஆ.மணி பவானந்தர் பதிப்பு பற்றியும், முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்கள் சிவலிங்கனாரின் பதிப்புக்கள் குறித்தும், முனைவர் ம.சா. அறிவுடைநம்பி ஐயா அவர்கள் சோமசுந்தர பாரதியாரின் புத்துரைகள் பற்றியும் உரையாற்றினர். கடந்த ஆண்டு இ.வை. அனந்தராமையரின் கலித்தொகை பதிப்பு குறித்துப் பேசும் வாய்ப்பினை வழங்கிய பல்கலைக் கழகப் புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்கள் இவ்வாண்டும் மற்றொரு வாய்ப்பினை வழங்கினார். அவர்களுக்கும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் ஐயா அவர்களுக்கும், முனைவர் மு.வள்ளியம்மை அவர்களுக்கும் என் நன்றி மலர்கள். 

        பிற்பகல் நடைபெற்ற நிறைவுவிழாவில்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் ஐயா அவர்கள் பங்கேற்று நிறைவுப் பேருரையாற்றினார். இளம் ஆய்வாளர்களை எப்போதும் ஊக்குவிக்கும் பண்புடைய பேராசிரியர் அவர்களின் பேச்சு இளைய தலைமுறைக்கு ஊக்கம் தருவதாகவும் வழிகாட்டுதலாகவும் அமைந்தது. விழாவில் பேராசிரியர்கள் முனைவர் அ. சிவபெருமான், முனைவர் ஞானம், முனைவர் இரெ.முத்துராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கருத்தரங்கக் காட்சிகள் இவை:

  புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் அவர்களின் உரைப்பொழிவு
அறிமுக உரையாற்றுகின்றார் முனைவர் மு. வள்ளியம்மை
 முனைவர் ஆ.மணியின் உரைப்பொழிவு

  முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரைப்பொழிவு


 முதுமுனைவர் மா.ச. அறிவுடைநம்பி அவர்களின் உரைப்பொழிவு
கருத்தரங்கச் சுவைஞர்
 கருத்தரங்கச் சுவைஞர்
 கருத்தரங்கச் சுவைஞர்
 கருத்தரங்கச் சுவைஞர்

 கருத்தரங்கச் சுவைஞர்
 கருத்தரங்கச் சுவைஞர்

நிறைவுப் பேருரையாற்றுகின்றார் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள். மேடையில் முனைவர் பழ. முத்துவீரப்பன், பதிவாளர், முனைவர் மு.வள்ளியம்மை ஆகியோர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...