திருச்செங்கோடு, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் இலக்கணக் கருத்தரங்கு ஒன்று 01.02.2012முதல் 03.02.2012 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. கல்லூரி நிர்வாகம் தன் நிதியைக் கொண்டு இக்கருத்தரங்கினை நடத்தியது குறிப்பிடத்தகுந்த ஒன்று. 7000 மாணவிகள் இக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஆசியக் கல்லூரிகளிலேயே மிக அதிக மானவியர் படிக்கும் கல்லூரி இதுதான் என்பதை அறிந்தபோது பெண்கல்வி வளர்ச்சிக்கு இக்கல்லூரி ஆற்றிவரும் அளப்பரிய தொண்டினைப் பாராட்டியே ஆகவேண்டும் எனத் தோன்றியது. பிறருக்கு உதவும் மனமும் நல் விருந்தோம்பல் பண்பும் இக்கல்லூரியின் சிறப்புக்குக் காரணங்கள்.
அன்புடனும் கண்டிப்பாகவும் நடந்து கொள்ளும் முதல்வர், பேராசிரியர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமாகப் பணியாற்றத் தூண்டும் துறைத்தலைவர், அன்பாகப் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆர்வமுடன் கற்கும் மாணவியர் என இக்கல்லூரிச் சூழல் கல்வித் தலமாக அமைந்துள்ளது.தமிழ் இலக்கணக் கருத்தரங்கினை மூன்று நாட்கள் நடத்தியதிலிருந்தே இவர்களின் திறனை நாம் அறிந்து கொள்ளலாம். இக்கருத்தரங்கின் மூன்றாம் நாள் காலை அமர்வில் பேராசிரியர் முனைவர் சேதுபாண்டியன் அவர்கள் தொடரியல் கோட்பாடு என்ற தலைப்பிலும், நான் தொல்காப்பிய இடைச்சொல் கோட்பாடு என்ற தலைப்பிலும் உரையாற்றினோம். கருத்தரங்கக் காட்சிகள் இவை:
கல்லூரி முதல்வர், முனைவர் சேதுபாண்டியன் அவ்ர்கள், ஆ.மணி.
பேராசிரியர் முனைவர் சேதுபாண்டியன் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் செந்தில்குமார்.
முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் செந்தில்குமார்.
கருத்தரங்க அறிமுகவுரையாற்றுகின்றார் முனைவர் செந்தில்குமார்.
பேராசிரியர் முனைவர் சேதுபாண்டியன் அவர்களின் உரைப்பொழிவு. பொருண்மை: தொடரியல் கோட்பாடு.
முனைவர் ஆ.மணி அவர்களின் உரைப்பொழிவு. பொருண்மை: தொல்காப்பிய இடைச்சொல் கோட்பாடு.
கருத்தரங்கப் பயனாளர்கள்
கருத்தரங்கப் பயனாளர்கள்
கருத்தரங்கப் பயனாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக