புதன், 14 மார்ச், 2012

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனச் செய்யுளியல் கருத்தரங்கு 11.03.2012

    புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் தமிழ்க் கவிதையியலும் சங்க இலக்கியமும் (செய்யுளியல்) என்ற தலைப்பில் மூன்றுநாள் (09.03.12 முதல் 11.03.12 வரை) கருத்தரங்கு சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடைபெற்றது. பொதுவாகப் பாடத்திட்டம் வரையறுக்கும்போதே முந்தைய தலைமுறையினர் தொல்காப்பியப் பொருளதிகாரம் (செய்யுளியல் நீங்கலாக) என்று பாடம் வைத்தே செய்யுளியலை படிக்கவிடாமல் செய்து விட்டனர்.  இந்தச் சூழலில் முனைவர் இரா. சம்பத் அவர்கள் செய்யுளியல் பற்றிய கருத்தரங்கை நடத்தியது தமிழர் தம் செய்யுள் மரபை இளைய தலைமுறையினர் அறிவதற்குப் பெரிதும் பயனுடையதாகும். 

  இக்காலத்தில் பலரும் நிலவுக்குச் சென்று வந்தாலும் ஆம்ஸ்ட்ராங் பெயரே இன்னும் மனத்தில் நிற்பதுபோலச் செய்யுளியல் என்றாலே இக்கருத்தரங்கே பலரின் நினைவில் வந்து நிற்கும். இத்தகைய அரிய கருத்தரங்கை நடத்திய  புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன இயக்குநர் முனைவர் பக்த வத்சல பாரதி அவர்களுக்கும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. சம்பத் அவர்களுக்கும்,  முனைவர் சிலம்பு. செல்வராசு அவர்களுக்கும் நிறுவனப் பேராசிரியர்களுக்கும் தமிழுலகம் நன்றிக் கடன்பட்டுள்ளது. 

   கருத்தரங்கின் மூன்றாம் நாள் முற்பகலில் முனைவர் மீனாட்சி முருகரத்தினம் அவர்கள் பொருள் புலப்பாட்டு உறுப்புக்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் நடந்த அமர்வில் முனைவர் ஆ.மணி, முனைவர் அ.செல்வராசு உள்ளிட்ட பேராசிரியர்கள் உரையாற்றினர். கருத்தரங்கக் காட்சிகள் இவை:



  முனைவர் மீனாட்சி முருகரத்தினம் அவர்களின் பொருள் புலப்பாட்டு உறுப்புக்கள் என்ற தலைப்பிலான சிறப்புரை
 முனைவர் சிலம்பு செல்வராசு அவர்களின் நிகழ்ச்சி இணைப்புரை
 
 முனைவர் ஆ.மணி. உரைப்பொருண்மை : தொல்காப்பிய வனப்புக் கோட்பாடு - அழகு
 முனைவர் சியாமளா. உரைப்பொருண்மை :  மெய்ப்பாடு.

 முனைவர் கலைமகள். உரைப்பொருண்மை :  மெய்ப்பாடு.
 முனைவர் பா.இளமாறன். உரைப்பொருண்மை : மாட்டு.
 முனைவர் மம்முது. உரைப்பொருண்மை :  பா, ஒசை.
முனைவர் புவனேஸ்வரி. உரைப்பொருண்மை :  கலிப்பா. 
முனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்கள் உள்ளிட்ட அவையினர். 
 
பங்கேற்ற ஆய்வாளர்கள்
பங்கேற்ற ஆய்வாளர்கள் 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...