திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தில் செவ்விலக்கிய நூல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்னும் பெயரிய மூன்றுநாள் கருத்தரங்கு (01.03.2012 முதல் 03.03.2012 வரை) நடைபெற்றது. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். ஆற்றலும் பண்பும் மிகுந்த அவர்கள் நடத்தும் கருத்தரங்குகள் தனித்தன்மை சான்றவை. அவர்களின் விருந்தோம்பல் பண்பும் திட்டமிடலும் நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை.
முனைவர் பெ.மாதையன் ஐயா அவர்கள் தலைமையிலும், ஆய்வுரையோடும் நடைபெற்ற ஆறாம் அமர்வில் முனைவர் தி. தாமரைச்செல்வி அவர்கள் நாலடியாரில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், முனைவர் ஆ. மணி அவர்கள் குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், முனைவர் அ. சதிஷ் அவர்கள் ஐங்குறுநூற்றில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், திரு. அ. புவியரசு அவர்கள் முதுமொழிக் காஞ்சியில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். கருத்தரங்கக் காட்சிகள் இதோ.:
முனைவர் பெ.மாதையன் ஐயா அவர்கள் : தலைமையுரையும் ஆய்வுரையும். உரைப்பொருண்மை: எட்டுத்தொகை புற நூல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்.
முனைவர் தி. தாமரைச்செல்வி அவர்களின் உரைப்பொழிவு : நாலடியாரில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
முனைவர் ஆ. மணி அவர்களின் உரைப்பொழிவு : குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
முனைவர் அ. சதிஷ் அவர்களின் உரைப்பொழிவு : ஐங்குறுநூற்றில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
திரு. அ. புவியரசு அவர்களின் உரைப்பொழிவு : முதுமொழிக் காஞ்சியில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக