ஞாயிறு, 16 மார்ச், 2014

புதுச்சேரிப் பல்கலைக் கழகப் பயிலரங்கு (11.03.2014)



   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கை பெற்றுப் புதுச்சேரிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் மெய்ப்பாடுகள் என்னும் தலைப்பில் பத்து நாள் பயிலரங்கு (05.03.14 - 14.03.14) ஒன்றினைப் பேராசிரியர் முனைவர் இளமதி சானகிராமன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். தமிழ் இலக்கணக் கோட்பாடுகளில் பரவலாகக் கவனம் பெறாத கோட்பாடாகிய மெய்ப்பாடுகள் குறித்த பயிலரங்கினை ஒருங்கிணைத்தமைக்காகப் பேராசிரியர் முனைவர் இளமதி சானகிராமன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 
    பத்து நாள்கள் நடந்த அப்பயிலரங்கில் 11.03.14 அன்று முற்பகல் அமர்வில் முனைவர் ஆ. மணி அவர்கள் திருக்குறளில் எண்வகை மெய்ப்பாடுகள் என்னும் தலைப்பிலும், முனைவர் நா. இளங்கோ அவர்கள் கலித்தொகையில் மெய்ப்பாடுகள் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அப்பயிலரங்கின் காட்சிகள் இவை.




பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இளமதி சானகிராமன் அவர்களின் அறிமுகவுரை.
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : திருக்குறளில் எண்வகை மெய்ப்பாடுகள்.





பயிலரங்கச் சுவைஞர் பகுதியில் பேராசிரியர் முனைவர் மதியழகன் அவர்கள்.

ஆய்வாளர் வினாக் கேட்டல்.
ஆய்வாளர் வினாக் கேட்டல்.
ஆய்வாளர் வினாக் கேட்டல்.
ஆய்வாளரின் நன்றியுரை.
சுவைஞர் பகுதியில் முனைவர் ஆ. மணி, முனைவர் நா. இளங்கோ ஆகியோர்.
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இளமதி சானகிராமன் அவர்களின் அறிமுகவுரை.
முனைவர் நா. இளங்கோ அவர்களின் உரை: கலித்தொகையில் மெய்ப்பாடுகள்.
அழைப்பிதழ்
 அழைப்பிதழ்


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...